Maruthuvam Tiens

Maruthuvam Tiens Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maruthuvam Tiens, Manamadurai.

12/05/2018

பற்கள் உடல் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தைக் காட்டும் இண்டிகேட்டர் என்பது தெரியுமா?
Punnagai

ஆம், மேல் வரிசையோ... கீழ் வரிசையோ...
முன் நான்கு பற்கள் கிட்னி, சிறுநீர்ப்பை ஆகியவற்றின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. அதே போல, அதற்கடுத்துள்ள சிங்கப்பல் எனப்படும் ப்ரீமோலார் பற்கள் இரண்டும் கல்லீரல், பித்தப்பையின் சக்தியை உணர்த்துகின்றன. அதற்கடுத்த இரண்டு பற்களும் பெருங்குடல் மற்றும் நுரையீரலைப் பிரதிபலிக்கின்றன. கடைவாய்ப் பற்களுக்கு முந்தைய இரண்டு பற்களால் முறையே வயிறு, மண்ணீரல் ஆகியவற்றின் சக்தியும், கடைவாய்ப் பற்களால் இதயம், சிறுகுடலின் சக்தியும் எதிரொலிக்கப்படுகிறது. மேற்சொன்ன உள்ளுறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அது சம்பந்தமான பற்கள் தாமும் பாதிக்கப்பட்டு அபாய சங்கு ஊதும். எனவே பல் பாதிப்புக்கு உள்ளானவர்கள், பல்லுக்கு மட்டும் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் சம் பந்தப்பட்ட உள்ளுறுப்புகளையும் சோதிப்பது நல்லது.
பற்கள் தொடர்பான அக்கு பிரஷர் சிகிச்சை, குழந்தைகளுக்கும் செய்யக்கூடிய அளவில் எளிமையானது. சில குழந்தைகளுக்கு பால் பற்கள் விழுந்து மறுபடி முளைக்க தாமதமாகலாம். அந்தக் குழந்தைகளின் குதிகால்களில் உள்ள ‘கிட்னி சக்தி புள்ளி’களை தினசரி மூன்று வேளை விட்டுவிட்டு அழுத்தி வந்தால் போதும், பலமான பற்கள் முளைக்கத் துவங்கும்.
எல்லோரும் பரவலாகச் சந்திக்கும் பல் சம்பந்தப்பட்ட அடுத்த பிரச்னை, தீராத பல்வலி. இதைக் குணப்படுத்த ‘விரல்நுனி அழுத்தம்’ கைகொடுக்கிறது. முன் நான்கு பற்களுக்கு கட்டை விரலின் நுனியை தொடர்ச்சியாக இரு நிமிடங்கள் அழுத்தி விடவும். அடுத்த நான்கு பற்கள் வலித்தால், ஆட்காட்டி விரலையும், அடுத்த நான்கு பற்களுக்கு முறையே நடு, மோதிர விரலையும், கடைவாய்ப் பற்களுக்கு சுண்டுவிரலையும் தொடர்ந்து அழுத்தி வந்தால் பல்வலியைக் குணப்படுத்தலாம்.

பொதுவான ஒரு முறையும் உண்டு. அதாவது கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சிறிய ஐஸ்கட்டியை வைத்து தொடர்ந்து இரு நிமிடம் அழுத்தினால், பல்வலி பறந்துபோகும்.

அடுத்ததாக பற்குழி. பல் மருத்துவரிடம் சென்று பற்குழிகளை சுத்தம் செய்து அடைத்துக் கொள்வதுதான் இதற்கு சிறந்த வழி. ஆனால், எதைக்கொண்டு அடைக்கிறோம் என்பது முக்கியம். தற்போது இதற்கு ‘அமால்கம்’ முறையில் வெள்ளி:பாதரசக் கலவை (30:70) பயன்படுத்தப்படுகிறது. இந்த முறைக்கு உலகின் பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. காரணம், இம்முறையால் ‘பாதரச ஆக்சைடு’ என்கிற விஷம் நம் உடலுக்குள் செல்கிறது. சாப்பிடும்போது உணவோடு உணவாகக் கரைந்தும், சூடான பானங்களை அருந்தும்போது ஆவியாக மாறியும் உடலுக்குள் இது சென்றுவிடுகிறது. இதனால் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாகிறது. பாதரசம் இல்லாமல், ‘செராமிக்’ முறையில் அடைத்துக் கொள்வது நல்லது.

இனி சற்று கீழிறங்கி கழுத்து பிரச்னைகளைப் பார்க்கலாம். ‘எலும்பு தேய்வதாலேயே கழுத்து வலிக்கிறது’ என்பதுதான் தற்போதைய பரவலான கருத்து. அந்த எண்ணத்துடனேயே ‘நெக் காலர்’, ‘டிராக்ஷன்’ என சிகிச்சை எடுக்கக் கிளம்பி விடுகிறார்கள். கழுத்து எலும்பின் அமைப்பானது முன், பின், பக்கவாட்டில் திரும்புவதற்கு வசதியாகவே அமைக்கப்பட்டுள்ளது. அதை மேல்நோக்கி இழுக்கும் ‘டிராக்ஷன்’ சிகிச்சையால் ‘ரைநெக்’ (wry neck) என்ற பிரச்னை ஏற்படலாம். அதாவது, ‘டிராக்ஷன்’ செய்து கொண்டபின் கழுத்தை பக்கவாட்டில் முழுமையாகத்
திருப்புவதற்குச் சிரமப்பட வேண்டியிருக்கும்.
கட்டைவிரலைத் தொடர்ந்து சுழற்றியும், கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடைப்பட்ட சதைப் பகுதியை மெதுவாக அழுத்தி விட்டும் கழுத்து வலியைக் குணப்படுத்தலாம் என்கிறது அக்கு பிரஷர். ‘சூஜோக்’ வளையமும் கழுத்துவலி தீர்ப்பதில் பயன்படுகிறது.
பெண்கள் அதிகளவில் கழுத்தில் சந்திக்கும் பிரச்னை, ‘காய்டர்’ எனப்படும் ‘முன்கழுத்துக் கழலை’. தைராய்டு குறைவு பிரச்னையான இது, மரபு ரீதியாகவோ சரிவிகித உணவு கிடைக்காததாலோ ஏற்படுகிறது.
அக்கு பிரஷரில் ‘தைராய்டு பாதிப்பு’ இருக்கிறதா அல்லது ஏற்படலாமா என்பதைக்கூட முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும். கட்டை விரலின் கீழ்ப் பகுதியை ஒட்டிய உள்ளங்கையில் அழுத்தும்போது வலி இருந்தால் பாதிப்பு இருக்கிறதென்பதைத் தெரிந்துகொள்ளலாம். இதற்கு சிகிச்சையும் அதே ‘கட்டைவிரல் - உள்ளங்கை’ அழுத்தமே.
காதில் உள்ள தைராய்டுக்கான அக்கு புள்ளியைத் தூண்டியும் இந்தக் கழலை நோயைக் குணப்படுத்தலாம். இதற்கு காதணி/ தோடு போன்ற அணிகலன்களே போதுமானது. இந்த இடத்தில் ஒரே கல்லில் இரு மாங்காய். காதுக்கு அழகு சேர்த்த மாதிரியும் ஆச்சு; பிரச்னையைக் காத தூரம் விரட்டிய மாதிரியும் ஆச்சு!
ஈசி எக்ஸ்ட்ரா டிப்ஸ்:
பல் துலக்கும்போது பிரஷ்ஷை நீள்வட்டமாக சுழற்றி துலக்குவது நல்லது.
அதிகாலையில் வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் கொப்பளித்தால், பற்கள் ஆரோக்கியம் பெறும்.
பல் சொத்தை, ஈறு வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு கிராம்பு தைலத்தை பஞ்சில் நனைத்து சம்பந்தப்பட்ட இடத்தில் வைக்க, குணமாகும்.

20/04/2018
15/11/2017
Tiens health care products contact_ kanal fish 9843928058
29/09/2017

Tiens health care products contact_ kanal fish 9843928058

02/09/2017

பப்பாளியில் இத்தனை மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளதா...!
Webdunia
பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் மற்றும் வீட்டில் எளிய முறையில் இவைகளை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்.

மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும். கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.
சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும். பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும். பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும். பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும். பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

01/09/2017

ஆயுர்வேதத்தின் படி, வெற்றிலை மற்றும் மிளகு நம் உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு கொழுந்து வெற்றிலை ஒன்றை எடுத்து அதனுடன் 5 மிளகு உருண்டைகளை சேர்த்து மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.

இவ்வாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சேர்த்து தொடர்ச்சியாக 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிடுவதால், இரைப்பை குடல் வலி, அசிடிட்டி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குணமாகுவதோடு, மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் முழுவதையும் சுத்தமாக்க உதவுகிறது.
வெற்றிலைகளில் இரைப்பைக் குடல் வலி நீக்கி குணங்கள் அடங்கியுள்ளது. அதே போல் சரியான செரிமானத்திற்கும் உதவிடும். வெற்றிலையை மெல்லுவதால் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, வயிற்றில் சளி உடைய பொருளை அதிகரிக்கும். இதனால் அசிடிட்டி ஏற்படாமல் தடுக்கப்படும். இதனால் காஸ்ட்ரிக் அமிலத்தின் தீய தாக்கங்களில் இருந்து வயிற்றின் உட்பூச்சு பாதுகாக்கப்படும் என ஒரு ஆய்வு கண்டுபிடித்துள்ளது.
வெற்றிலையை மெல்ல ஆரம்பித்த உடனேயே வாயில் எச்சில் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் நீங்கள் உண்ட உணவை செரிக்க சொல்லி வயிற்றுக்கு சிக்னல் அனுப்பும் உங்கள் வாய். இதனால் செரிமானம் சிறப்பாக செயல்பட தொடங்கும். வயிற்றில் இருந்து நச்சுக்களை நீக்கவும் இது உதவுகிறது.
குறிப்பு: மஞ்சள் நிறத்தில் அல்லது அழுகிய நிலையில் உள்ள வெற்றிலையை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது வயிற்றுப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

16/08/2017

Tiens health care products contact 9843928058

06/08/2017

TIENS Health Supplements & Beauty Care Products International contact 9843928058

06/07/2017

TIENS Internationa health care products distributer Contact at 9843928058

19/05/2017

குடி நீர் என்பதற்கும்,
சுத்தமான குடி நீர் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணர வேண்டும்...அவசிய பதிவு.
அவசியம் படியுங்கள்.

குடி தண்ணீரை RO பில்டர் செய்யக் கூடாது. ஏன்???.

நம் வீடுகளில் ஆர்.ஓ.சிஸ்டம் எனும்
தண்ணீரைச் சுத்தம் செய்வதற்கு
சாதனங்களை வைத்திருக்கிறோம்.

இந்த R.O சாதனத்தில் மூன்று
மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை
வெளியில் எடுத்துப் பார்த்தால்
வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும்.

அதை உதறி தட்டினால் அதிலிருந்து
மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும்.

நாம் என்ன நினைப்போம்...அப்பப்பா நல்ல வேளை, இந்த
வாட்டர் பில்டர் இருந்ததால் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று.

ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த தாதுப் பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள, வீட்டில் உள்ள மனிதர்களின் உடம்பில் செல்லவில்லையே...நிச்சயமாக
அவர்கள் நோயோடு இருப்பார்கள் என்று நினைப்பேன்.

கண்ணுக்கே தெரியாத அந்தத் தூசுகளை பணம் செலவு செய்து சில கருவிகளை வாங்கி அதிலுள்ள தாதுக்களை பிரித்து
எடுத்துக் கீழே கொட்டுகிறோமே!.

அது தூசுக்கள் அல்ல, நம் உடலுக்குத்
தேவைப்படும் அத்தியாவசிய
தாதுப் பொருட்கள் ஆகும்.

நீங்கள் தண்ணீரைப் பார்த்தால் அதில் அந்தத் தூசுகள் உங்கள் கண்ணுக்கே தெரியாது.

ஆர்.ஓ.சாதனத்தை பயன் படுத்தினால் மட்டுமே அந்தத்
தூசுகள் கண்ணுக்குத் தெரியும்.

தண்ணீரில் கண்ணுக்கே தெரியாத
தூசுகளைப் பார்த்து பயப்படுகிறோமே...ஆனால்
கொத்து பரோட்டா, சிக்கன் 65, ஆனியன் ரோஸ்ட் என்று கடினமான பல பொருட்களைச்
சாப்பிடும் நாம் கண்ணுக்கே தெரியாத அந்த சின்னச் சின்ன தாதுப் பொருட்களை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு ஆர்.ஓ வில் ஊற்றி வடிக்கச் செய்ய வேண்டும்.

யாருடைய வீட்டில் தண்ணீரை சுத்தம்
செய்வதற்கு R.O மெஷின் இருக்கிறதோ அந்த வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் இரத்தத்தில் உங்களுக்குத் தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல் மருந்துக் கடைகளில் சென்று இந்த தூசுகளை மருந்து என்ற பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே அசைக்க இயலாத உண்மை.

தண்ணீரில் இருக்கும் அந்தத்
தாதுப் பொருட்களை R.O செய்யாமல் குடித்தால் நாம் மருந்து மாத்திரை என்ற தூசுக்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

எனவே தண்ணீரை ஆர்.ஓ (R.O) செய்யக் கூடாது.

தண்ணீரை R.O செய்து குடித்தால்
மனிதனுக்கு நோய் வரும்.வாழ்நாள் முழுவதுமே தீராது.

சரி...

மினரல் பாட்டில் வாட்டர் -ஐ
பயன்படுத்தலாமா?

மினரல் வாட்டர் பயன்படுத்தவே கூடாது.

மினரல் வாட்டர் கம்பெனிகளில் Anti Scale Dosing Machine என்று ஒரு மெஷின் இருக்கும்.

இந்த மெஷினின் வேலை தண்ணீரில் உள்ள அனைத்து தாதுப் பொருட்களையும் எடுத்து விட்டு சப்பைத் தண்ணீராக மாற்றுகிறது.

எனவே நல்ல தண்ணீரை
ஒன்றுமில்லாத சப்பைத் தண்ணீராக
மாற்றுவதற்கு நாம் பல வேலைகளை
செய்து அதை பாட்டிலில் அடைத்துப்
பணம் கொடுத்து வாங்கி
குடிக்கிறோம்.

எனவே தயவு செய்து பாட்டிலில்
அடைக்கப் பட்ட மினரல் வாட்டர்
என்று அழைக்கப்படும் தண்ணீரில் உள்ள இயற்கையான சத்துகளே இல்லாத Packaged Drinking Water ஐ யாருமே பயன்படுத்தக் கூடாது.

குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும் முறைதான் என்ன?...

தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது.

ஆர்.ஓ R.O செய்யக் கூடாது.

பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது.

வேறு எப்படித்தான் தண்ணீரை
சுத்தப் படுத்துவது என்று கேட்டால்,
சாதாரணமாக குழாயில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம்.

அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச் சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே.

யார் ஒருவர் குழாய் தண்ணீரை
நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க் கிருமியாலும் நோய் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக
இருக்கும். எனவே தயவு செய்து குழாயில் வரும் தண்ணீரை அப்படியே சாப்பிடுங்கள்.

குழாயில் வரும் தண்ணீரை எப்படிக்
குடிப்பது?...

தண்ணீரில் TDS அதிகமாக இருக்கிறது.தாதுப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது.

சாக்கடை நீர் கலந்து வருகிறது
என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றும்.

எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக உள்ளது என TV, பேப்பர் மூலமாகத் தெரிந்துக் கொண்டோம் என்று பலர் கூறுகிறீர்கள்.

உங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து ஊரிலும் தண்ணீர்
கெட்டு விட்டதாக அந்தந்த ஊரில் உள்ள தண்ணீரைப் பாட்டிலில்
மூலமாக வியாபாரம் செய்யும் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து
பிரச்சாரம் செய்கிறது.

அப்பொழுதுதானே நீங்கள் குழாய் தண்ணீரைக் குடிக்காமல் பாட்டிலில்
தண்ணீரை வாங்கிக் குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள்
பிரச்சாரம் செய்கிறார்கள்.

மேலும் மருந்து மாத்திரை கம்பெனிகள் தண்ணீரைக் கொதிக்க வைத்து மற்றும் R.O பிளான்ட் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரைப் பருகுவதால் உலக மக்களுக்கு நோய் வருகிறது என்பதை புரிந்து கொண்டு நல்ல விஷயத்தைப் பிரச்சாரம் செய்வது போல கெட்ட விஷயத்தை பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்து நம்மை நோயோடு இருக்க வைத்து, அதன் மூலமாக மருந்து மாத்திரை வியாபாரம் செய்வதற்குத் திட்டமிட்டு உள்ளார்கள்.

உண்மையிலேயே குழாய் தண்ணீர்
குடித்தால் ஒன்றும் ஆகாது.

இருந்தாலும் சில ஊர்களில் சாயப் பட்டறை இருக்கிறது,

தண்ணீர் கெட்டிருக்கிறது என்று
ஒரு வேளை நாங்கள் நினைத்தால் உங்களது மன திருப்திக்காக சில காரியங்களை செய்யலாம். நான் கூறுவது போல உங்கள்
தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில்
இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை
சுத்திகரிக்கும் கருவி.

மண் பானையில் குடி தண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட
பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் இயற்கையாகவே சக்தியை அளிக்கிறது.

எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த Water Filter மண் பானை ஆகும்.

நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து
உங்கள் வீட்டில் ஆர்.ஓ எனும் குப்பை மிஷினை வாங்கி வைத்து இருக்கிறீர்களே நாற்பதாயிரம்
ரூபாய்க்கு மண் பானை வாங்கினால்
எவ்வளவு பானை கிடைக்கும். தினமும் நாம் ஒரு பானையை உடைத்தால் கூட தீராது.

ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான
இயற்கையான ஒரு Water Filter வாட்டர் பில்டரை யாரும் பயன்படுத்துவதே இல்லை.

எனவே தயவு செய்து தண்ணீரை மண் பானையில் வைத்து குடித்தால் கெட்ட பொருள்களும்
அழியும். மண் சக்தியும் கிடைக்கும்,
பிராண சக்தி அதிகரிக்கும்.

வெள்ளை நிற பருத்தித் துணியால் தண்ணீரை வடி கட்டலாம்.

வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால் தண்ணீரை வடி கட்டினால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து
நோயை உண்டு செய்யும் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது என்ற உண்மை, அறிவியல்
பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் அம்மை போன்ற நோய்கள் வரும் பொழுது நமது முன்னோர்கள் எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல்
மருத்துவமனைக்குச் செல்லாமல்
வெள்ளைத் துணியில் வடி கட்டிய நீரில் குளிப்பாட்டி குணப் படுத்தி இருக்கிறார்கள்.

எனவே தேவைப் பட்டால் இந்த
முறையில் தண்ணீரைச் சுத்தப் படுத்தலாம்.

செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம் மூலமாகவும் தண்ணீரை சுத்தப் படுத்தலாம்

செம்பு என்ற உலோக பாத்திரத்தின்
மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான
சக்தி கிடைக்கிறது.

அதில் உள்ள கெட்டப்
பொருள் அழிக்கப் படுகிறது. தாமிரத்திற்கு அந்த சக்தி இயற்கையிலேயே உள்ளது.

எனவே செம்பு என்ற தாமிர உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க
பயன் படுத்தலாம். அல்லது மண் பானையில் செம்புக் காசுகளை போட்டு வைத்தால் அந்த செம்பு காசுகள் தண்ணீரை
சுத்தப் படுத்திக் கொண்டே இருக்கும்.

பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் எப்பொழுதுமே அருகில் ஒரு செம்பு கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக்
கொண்டு இருப்பார்கள் என்பதை அறவீர்களா?.

அவர்களிடம் சென்று நீங்கள் ஏதாவது வம்பு பேசினால்
அந்த தண்ணீரை எடுத்து நீ நாயாக போவாய் என்று சாபமிட்டவுடன் அந்த மனிதன் நாயாக போவதைப் போல நாம் படங்களில் பார்த்திருப்போம்.

செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம் தண்ணீரை சுத்தப் படுத்த முடியும்.

எனவே மேலே கூறப்பட்டுள்ள வகையில் மண்பானை, வெள்ளை பருத்தித் துணி,செம்பு என்ற தாமிர உலோகம் மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை
சுத்தப்படுத்துவதற்கு பல உத்திகள்
இருக்கும் பொழுது நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்கு R.O. சிஸ்டத்தை உபயோகிக்க வேண்டும்?.

இதுவும் இல்லாமல் பூமியில் உள்ள மண்ணில் உள்ள அடுக்குக்கு எத்தகைய தண்ணீரையும் சுத்தப்படுத்தும் சக்தி உண்டு.

அதே போல் மண்ணை சுட்டு கேன்டில் முறையில் எவர்சில்வர் வாட்டர் பில்டர் பாத்திரக் கடைகளில் கிடைக்கும்.அதுவும் இயற்கையான எளிதான முறைதான்.அதில் மூன்று கேன்டில் உள்ள வாட்டர் பில்டர் அனைத்து குடும்பத்துக்கும் உகந்தது.

வடிந்த தண்ணீரை மண் பானையில் ஊற்றி மகிழ்வுடன் அருந்துங்கள்.

என் அருமை மக்களே!...
நோய் தீர்க்கும் குடி தண்ணீரை உதாசீனம் செய்யாதீர்கள்.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்க்காதே எனும் முன்னோர் வாக்கை நம்புங்கள்.

R.O எனும் அமெரிக்க என்சைம் அரக்கனை தூக்கி எறியுங்கள்.

கழுத்தில் டை கட்டி விட்டு வந்தால் உடனே நம்பி மோசம் போகாதீர்கள்.b

நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

பலரை காக்க பகிர்வோம்

19/05/2017
Tiens health care. 9843928058
20/04/2017

Tiens health care. 9843928058

02/04/2017

 வீட்டில்  தனியாக இருக்கும் போது மாரடைப்பு 

 வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது 

 வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில  பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

 நீங்கள் மிகவும்  படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.

 திடீரென்று உங்கள்  இதயத்தில் அதிக “வலி” ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

 அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

 உங்கள் வீட்டில் இருந்து  மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

 ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள்  மூளை உங்களுக்கு சொல்கிறது

 இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்…??

 துரதிஷ்ட வசமாக  மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!

 உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..

 நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.

 இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

“தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக  இரும்ப வேண்டும்,

 ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்,

 இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,

 இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது  வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

 ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

 மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

 இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

 இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.

 இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்”..

 பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள  மருத்துவமனைக்கு செல்லலாம்..

 இந்த தகவலை  குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்.   

 தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர்,
 உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்….!!

Address

Manamadurai

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

919843928058

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maruthuvam Tiens posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share