01/08/2020
தோழர்களே..!
ஜெனிரிக் மருந்துகள் பற்றி பொதுவாக நமக்கிருக்கும் கருத்துக்கள் :
1.அவை உற்பத்தி தரத்தில் குறைபாடு கொண்டது,
2வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க விற்பனை செய்யப்படுவது,
3.மருத்துவமனைகள்,கிராமப்புற மருந்தகங்களின் லாபத்திற்காக விற்பனை செய்யப்படுவது,
4.ஜெனிரிக் மருந்துகளை விற்பனை செய்வது,பரிந்துரைப்பது போன்றவை நமது மரியாதையை குறைக்கும் செயல்.
இது போன்ற தவறான கருத்துக்களிலிருந்து முதலில் நம்மை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்வோம்.
மிகமுக்கியமான ஒரு விஷயம் ஜெனிரிக் மருந்துகளைப்பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பெருகினால் நம் போன்ற மருந்தாளுநர்களின் அவசியம் அனைவருக்கும் புரியும் மேலும் தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்களில் மருந்தாளுநர்களை பணீயமர்த்த வேண்டிய கட்டாயம் வரும் அப்படியான சுழல் உருவானால் நமது சம்பளம் மற்றபடிகள் போன்றவை உயரும் நமது மரியாதை சமூகத்தில் உயரும்,கூடுதல் தகவல் மருந்தின் மூலக்கூறு நம் போன்ற மருந்தாளுநர்களின் கல்விமுறை என்பதால் நம்மால் இயல்பாக செயல்படமுடிவதுபோல் மருந்தாளுநர் அல்லாத நபர்களால் செயல்படமுடியாது,மருந்தின் தன்மைகள் குறித்து விவரிக்கமுடியாது அதனால் மருந்தாளுநர் அல்லாத நபர்கள் மருந்தகங்களில் பணிசெய்வது தடுக்கப்படும்.... எனவே தோழர்களே உரியதை உணர்ந்து உரிமையுடன் ஜெனிரிக் (மூலக்கூறு )மருந்துகளை பரிந்துரைப்போம்.மக்களை பயனைடய செய்து நாமும் பயன் பெறுவோம்........
விழைவுகளுடன்
தோழன் கேசவகீர்த்தி.
A generic drug is a chemically equivalent, lower-cost version of a brand-name drug, costing 30-80% less! A brand-name drug and its generic version must have the same active ingredient, dosage, safety, strength, usage directions, quality, performance and intended use.