20/03/2022
எது உடல் பருமன்?
ஒருவரின் உடல் எடை சரியாக இருக்கிறதா, இல்லையா என்று சர்டிஃபிகேட் தருவது 'பாடி மாஸ் இன்டெக்ஸ்' ( Body Mass Index - BMI ). இதை எப்படித் தெரிந்துகொள்வது ? உங்கள் எடையை கிலோகிராமில் தெரிந்துகொள்ளுங்கள். உயரத்தை மீட்டரில் அளந்து கொள்ளுங்கள். உயரத்தின் அளவை அதே அளவால் பெருக்கிக் கொள்ளுங்கள். உடல் எடையை இந்த அளவால் வகுத்துக் கிடைக்கும் விடை,
உங்கள் பி.எம்.ஐ = உடல் எடை கிலோ கிராமில் / உயரம் x உயரம் மீட்டரில்.
இது 18.5 க்குக் கீழே இருந்தால், உடல் எடை குறைவு (Under weight). அல்லது ஊட்டச்சத்துக் குறைவு என்று அர்த்த்தம். 18.5 முதல் 23.9க்குள் இருந்தால், சரியான உடல் எடை (Normal weight). 24 – 29.9 அதிக உடல் எடை ( Over weight ). 30க்கு மேல் என்றால் உடல் பருமன் (Obesity). இது 40ஐக் கடந்துவிட்டால், ஆபத்தான உடல் பருமன் என்று பொருள். இது இந்தியர்களுக்கான பி.எம்.ஐ. அளவு.
இடுப்பின் அளவு முக்கியம்!
ஆண்களுக்குச் சரியான இடுப்புச் சுற்றளவு 88 செ.மீ. பெண்களுக்கு இந்த அளவு 80 செ.மீ. இந்த அளவுக்கு மேல் அதிகமாக இருப்பவர்களையும் உடல் பருமன் உள்ளவர்களாகவே கருத வேண்டும்.
நீங்கள் ஆப்பிளா? பேரிக்காயா?
இந்தியர்கள் பலருக்கும் உடல் எடை சரியாக இருந்தாலும், தொந்தி இருக்கும். இப்படித் தொந்தி இருப்பதையும் உடல் பருமன் என்றுதான் கூறுகிறார்கள். வயிற்றுப்பகுதியில் சேரும் கொழுப்பை 'ஆப்பிள் மாடல்’ என்றும், இடுப்பிலும் பிட்டத்திலும் கொழுப்பு சேருவதை 'பேரிக்காய் மாடல்’ என்றும் கூறுகிறார்கள். இரண்டுமே மோசம்தான் என்றாலும், ஆப்பிள் மாடல் உள்ளவர்களுக்கு இதயநோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், அவர்கள்தான் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
உடல் பருமனுக்குக் காரணங்கள்
உடல் எடை அதிகரிப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இங்கே முக்கியமானவை மட்டும்.
1. ஆரோக்கியமற்ற உணவுமுறை: அதிகக் கொழுப்பு உள்ள உணவுகளைச் சாப்பிடுவது. உதாரணமாக, எண்ணெயில் வறுத்த, பொரித்த இறைச்சி உணவுகள், முட்டை, தயிர், நெய், வெண்ணெய், இனிப்புகள், நொறுக்குத் தின்பண்டங்கள் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடுவது.
2. இந்தியர்களின் தினசரி சராசரி 'பேசல் மெட்டபாலிக் ரேட்’ ( Basal Metabolic Rate – BMR ) என்பது 1800 கலோரி. ஆனால், சராசரியாக இந்தியர்கள் சாப்பிடும் தினசரி உணவில் 3000 கலோரி உள்ளது.
3. உடல் உழைப்பு குறைவது: உடலுழைப்பு உள்ள வேலைகளைக் குறைத்துக் கொண்டு, உட்கார்ந்து செய்யும் வேலைகளைச் செய்வது.
4. உடற்பயிற்சி இல்லாதது: உடலுக்கு எவ்விதப் பயிற்சியும் தராமல் இருப்பது.
5. சோம்பல் வாழ்க்கைமுறை: வாழ்க்கையில் பெரும்பாலான நாட்களில் உடல் உழைப்பில்லாமல், வீட்டில் உட்கார்ந்தும் உறங்கியும், தொலைக்காட்சி பார்த்தும் கழிக்கின்ற வாழ்க்கை முறை உள்ளவர்களுக்கு உடல் எடை கூடும்.
6. மருந்துகள்: நீண்ட காலம் நாம் எடுத்துக்கொள்ளும் சில வகை மருந்துகள் உடல் எடையை அதிகரிக்கும். ஹார்மோன் மாத்திரைகள், மனச்சோர்வை நீக்கும் மருந்துகள், ஸ்டீராய்டு மாத்திரைகள் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.
7. நோய்கள்: தைராய்டு சுரப்பு குறைதல், இதயச் செயலிழப்பு, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற நோய்கள் உடலின் திரவக் கொள்ளளவை அதிகரித்து, உடல் எடையை அதிகரிக்கும்.
பாதிப்புகள் என்ன?
உடல் பருமன் காரணமாக உடலில் ஏற்படும் பாதிப்புகள் பல. அவற்றுள் முக்கியமானவை இவை:
சர்க்கரை நோய்.
உயர் ரத்த அழுத்தம்.
மாரடைப்பு.
மூச்சுத் திணறல்.
முழங்கால் மூட்டுவலி.
முதுகு வலி மற்றும் தோள் வலி.
மார்பகப் புற்றுநோய்.
குடல் புற்றுநோய்.
பித்தப்பை நோய்கள்.
குடல் இறக்கம்.
மலச்சிக்கல்.
மலட்டுத்தன்மை
எகிறும் எடையைக் குறைக்க என்ன வழி?
அன்றாட வாழ்க்கைமுறையை கவனிப்பதன் மூலம் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகர் வழியாக இதை சரி செய்ய முடியும்.மேலும் ஆலோசனைகளுக்கு...
Er.T.PRATHEEP
Mob : 9597173781