16/10/2022
அனைவருக்கும் வணக்கம்.
உங்கள் வெட்டுவெந்நி - மக்கள் மருந்தகத்தின் மூன்றாவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ' மக்கள் மருந்தகம் - நம் சுதந்திர இந்தியாவின் மகத்தான நலத்திட்டம்' என்ற தலைப்பில், மாநில அளவில் நடத்தப்பட்ட தமிழ் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
நூற்றுக்கும் மேலான கட்டுரைகள் நேரிடையாக மற்றும் தபால், வாட்ஸ் அப், மின்னஞ்சல் வழியாக வந்தது.
குறைந்த விலையில் தரமான உயிர் காக்கும் மருந்துகள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும் என்ற உன்னத எண்ணத்துடன் செயல்படும் பாரதப் பிரதமரின் ஜன் ஒளஷதி திட்டம், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை.
ஒவ்வொரு கட்டுரையிலும், மக்கள் மருந்தக பயனாளிகளின் கருத்துக்களை நேரடியாக கேட்டு விரிவாக விவரிக்கப்பட்டிருந்தது.
இத்திட்டத்தின் தாக்கம் எந்த அளவு நம் மக்களுக்கு உதவிகரமாக உள்ளது என்பது, வந்திருந்த கட்டுரைகள் மூலமாக தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
நம் மத்திய அரசின், மக்கள் மருந்தக திட்டத்தின் மூலம், நம்மூர் மக்களுக்கு சேவை புரியும் பாக்கியம் கிடைத்திருப்பது ஒரு புண்ணியமாக உணர்கிறோம்.
இந்த கட்டுரைப் போட்டியின் மூலம் தமிழகமெங்கும் மக்கள் மருந்தகத்தை, அதன் பயன்பாடுகளை பல்வேறு தரப்பு மக்கள் அறிய செய்தமைக்கு, நல்ல ஒரு விழிப்புணர்வுவை ஏற்படுத்த உதவிய அனைவருக்கும் எங்கள் நன்றியை கூறிக் கொள்கிறோம்.
போட்டியின் நடுவர் குழுவில் சேர்ந்து, தரமான, சிறந்த கட்டுரைகளை தேர்ந்தெடுக்க உதவிய திருமதி Dr S ஶ்ரீலஜா, குழித்துறை (தமிழ் எழுத்தாளர் மற்றும் கல்லூரி பேராசிரியை) மற்றும் திருவட்டார் மக்கள் மருந்தகத்தின் மருந்தாளுனர்கள் AP அன்ஷியா, B Pharm & D திபிஷா, D Pharm அவர்களுக்கு எங்கள் அன்பார்ந்த நன்றிகள்.
இந்தக் கட்டுரைப் போட்டி குறித்த செய்தியை சிறந்த அளவில் சோஷியல் மீடியா வழி தமிழ் பேசும் மக்களிடையே பரப்பிய நண்பர்களுக்கும், செய்தியாக பிரசுரித்த ' விஜய பாரதம் ' வார பத்திரிக்கைக்கும், எங்களை வழி நடத்தும் மத்திய மற்றும் தமிழக PMBI அதிகாரிகளுக்கும் எங்கள் அன்பு கலந்த நன்றிகள்.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும், மாணவ செல்வங்களுக்கும் எங்கள் நன்றியை மீண்டும் கூறிக்கொள்கிறோம்.
வெற்றி பெற்ற கட்டுரையாளர்களுக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்.
பரிசுகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும்.
போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்க வளமுடன். ஜெய்ஹிந்த்..!
அன்புடன்,
நிர்வாகம்,
மக்கள் மருந்தகம்,
வெட்டுவெந்நி,
மார்த்தாண்டம்.
9544600001
15 Oct 2022