Kaveri diagnostic center & x ray

Kaveri diagnostic center & x ray An iso 9001 2008 certification laboratory

Fully computerized lab & x-ray Ecg

28/09/2016

மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன் :-மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன்களை அதிகம் உணவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மீன்வள ப...
12/07/2015

மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன் :-

மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன்களை அதிகம் உணவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மீன்வள பல்கலைக்கழக தொழிலில் நுட்பநிலைய இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நிலைய இயக்குனர் , பேராசிரியர், ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;

” மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல்வரை மத்தி மீன்கள் கிடைக்கிறது. விலையும் மிக மலிவாக ரூ.15 முதல் ரூ.20க்குள் கிடைக்கும். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது.

100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும் உள்ளது. மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.மேலும் தோல்நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும். மத்தி மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது. மத்தி மீனில் வைட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது. மத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மத்தி மீனில் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

விஷ உணவுகளுக்கு விடை கொடுப்போம் !
பாரம்பரிய உணவுகளுக்கு உயிர்கொடுப்போம் !!

ஒரு கப் தண்ணீர் குடிங்ககாலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கப் தண்ணீர் குடிங்க.தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும்...
12/07/2015

ஒரு கப் தண்ணீர் குடிங்க

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கப் தண்ணீர் குடிங்க.

தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது என பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். ஆம், தண்ணீர் குடிப்பதால் எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.

தினமும் தண்ணீர் குடிப்பதால் வயிறு சுத்தமாவதுடன், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர், மலம் மூலம் வெளியேறிவிடும். பெரும்பாலான நபர்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறையும் போது தான் தலைவலி ஏற்படுகிறது, அத்தகைய நபர்கள் தினமும் தண்ணீர் குடித்து வருவது நல்லது. குறிப்பாக காலையில் அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பும் நபர்கள், சாப்பிடாமல் செல்வது வழக்கமாகி விட்டது.

இவர்கள் தினமும் தண்ணீர் குடிக்கும் போது பசி எடுப்பதுடன் அல்சர் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். வெதுவெதுப்பான தண்ணீரை குடித்தால் உடலின் மெட்டாபாலிசம் அதிகரிப்பதுடன், உண்ணும் உணவு விரைவில் செரிமானமாகிவிடும்.

மேலும் இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்சிஜனை கொண்டிருப்பதால் உடலானது எனர்ஜியுடன் இருக்கும். எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். முகமும் பொலிவுடன் இருப்பதுடன், பருக்கள் வருவது குறைந்துவிடும்.

‘நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்’
விஷ உணவுகளுக்கு விடை கொடுப்போம் !
பாரம்பரிய உணவுகளுக்கு உயிர்கொடுப்போம் !

மிளகாயின் மருத்துவ குணங்கள் :-மிளகாய் நாம் அன்றாடம் உணவுக்கு சுவை சேர்ப்பதற்காக காரத்தை தருவதற்காக என்றுதான் அறிந்திருப்...
12/07/2015

மிளகாயின் மருத்துவ குணங்கள் :-

மிளகாய் நாம் அன்றாடம் உணவுக்கு சுவை சேர்ப்பதற்காக காரத்தை தருவதற்காக என்றுதான் அறிந்திருப்போம். மிளகாயில் உணவுப் பொருள்களோடு உன்னதமான மருத்துவப் பயன்களும் அடங்கியுள்ளன என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டோம்.

நாம் தெரிந்திராத மிளகாயின் வகைகள்: சாதாரண சமையல் மிளகாய், சிவப்பு மிளகாய், பச்சைமிளகாய், கொள்ளி மிளகாய், சீமை மிளகாய், காந்தாரி மிளகாய், சீனத்து மிளகாய், ஈரமிளகாய், சீமைபச்சை மிளகாய், ஊசி மிளகாய், ஈரமிளகாய், வெண்டுமிளகாய், குண்டு மிளகாய், கருங்குண்டு மிளகாய் என மிளகாயின் வகைகளை அகராதி கூறும்.

இவற்றுள் ஊசி மிளகாயை மிகவும் உறைப்பான மிளகாய் என்றும் நாம் சூரிய கிரணத்தினை உட்கொள்ளும் என்றும் கருங்குண்டு மிளகாய் ஆகாயத்தை நோக்கிக் காய்த்து சூரிய கிரணத்தைப் புசிப்பதால் மிகவும் உறைப்பாய் இருக்கும் என்றும் தமிழ் மருத்துவ அகராதி தெரிவிக்கின்றது.

மேற்கூறியவற்றுள் நாட்டு மிளகாய் மற்றும் பறவைக் கண் போன்ற உருவமுடைய சிறு மிளகாய் இரண்டுமே பெரும்பாலும் உணவுக்குப் பயன்படுகின்றன. அனைத்து மிளகாயின் இலைகளும் உணவாகப் பயன்படுகின்றன. மிளகாயின் இலையிலேயும் மருத்துவ குணங்கள் மலிந்துள்ளன. இலைகள் சற்று கசப்பு சுவையுடையவை. காயைப்போல உஷ்ணத் தன்மையைப் பெற்றவை அல்ல.

* மிளகாயில் ஒரு பெரிய இரசாயனப்பொடி பட்டியலே அடங்கி இருக்கிறது எனலாம். இவை அத்தனையுமே நோய் எதிர்ப்பு சக்தியைக் தருவதாகவும் ஆரோக்கியத்தினை அதிகரிக்கச் செய்வதாகவும் உதவுகின்றன.

* மிளகாயில் கேப்ஸைசின் என்னும் வேதிப்பொருள் மிகுந்துள்ளது. இதுவே மிளகாய் காரமானதாகவும் சுவாசத்தில் எரிச்சலூட்டும் தன்மை உடையதாகவும் இருக்கின்றது.

* இந்த கேப்ஸைசின் என்னும் சத்து நுண்கிருமிகளை அழிக்க வல்லது எனவும் புண்களை உண்டாக்கி புற்றுநோய்க்கு ஏதுவாகும் கிருமிகளைத் தடுக்க வல்லதாகவும், வலியைப் போக்கக் கூடியதாகவும், சர்க்கரை நோய்க்கு எதிரானதாகவும் விளங்குகிறது என ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. மேலும் இது எல்.டி.எல் என்று குறிக்கப்பெறும் கெட்ட கொழுப்புசத்தைக் குறைக்கக் கூடியது என்றும் தெரிவிக்கின்றது. மிளகாயில் விட்டமின் சி சத்து அதிகமாக அடங்கியுள்ளது.

விட்டமின் சி சத்து கொல்லாஜென் என்று சொல்லப்பெறும் உடல் ஆரோக்கியத்துக்குவேண்டிய மிக முக்கியமான ஓர் சத்துக்கு அடிப்படையாகத் திகழ்கிறது. திசுக்கள் ஆரோக்கியம் பெற்று இரத்த நாளங்கள், தோல் உட்சுரப்பிகள், எலும்புகள் ஆகியவை செம்மை பெற இந்த கொலாஜன் என்னும் சத்து உபயோகமாகின்றது.

விட்டமின் சி செரிந்த உணவுப் பொருட்கள் தொற்று நோய்களைத் தடுத்து நிறுத்துகிறது. எலும்புகளுக்கு பலத்தை தருகிறது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை குறிப்பாக புற்று நோய்க்கு காரணமாய் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது. மிளகாயில் விட்டமின் ஏ, ஃப்ளேவனாய்ட்ஸ் அதாவது பீட்டா கரோட்டின் ஆல்ஃபா கரோட்டின் போன்றவற்றிற்கு லூட்டின் சியாசாந்தின் மற்றும் கிரிப்டோ சாந்தின் போன்ற புத்துணர்வு தரும் வேதிப் பொருட்களும் வெகுவாக உள்ளன.

* காய்ந்த மிளகாய் வற்றலை நீரிலிட்டு கொதிக்கவைத்து குடிநீரிட்டு 2 அல்லது 3 வேளை உள்ளுக்குக் கொடுக்க மார்பு நோய், வயிற்று நோய், சீரணமின்மை, வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குமட்டல், வாந்தி ஆகியன குணமாகும்.

* மிளகாயை அரைத்து பசையாக்கி துணியின் மேல் தடவி வீக்கம் கண்ட இடத்தின் மேல் பற்றாகப் போட்டு வைக்க அந்த இடத்தில் கொப்புளங்கள் தோன்றி நீர்வெளியேறி வீக்கம் குறைந்து போகும்.

* மிளகாய் வற்றல் 2 அல்லது 3 எடுத்து பழைய மண் பாத்திரத்தில் இட்டு அதனுடன் சில துளிகள் நெய் விட்டு கருக்கி சுண்டைக்காய் அளவு கற்பூரம் சேர்த்து அதனுடன் 500மி.கி நீரும் சேர்த்து உடன் ஒரு கைப்பிடி அளவு நெற்பொரி சேர்த்து நன்கு காய்ச்சி இறக்கி வைத்துக் கொண்டு ஊழிப் பெருநோய் என்றும் காலரா என்றும் சொல்லப்படுகின்ற வாந்தியும் பேதியும் அடிக்கடி வந்து துன்புறுத்துகின்ற வேளையில் ஒரு அவுன்ஸ் அளவு உள்ளுக்குக் கொடுத்து வர விரைவில் அச்சுறுத்தும் வாந்திபேதி எனப்படும் காலரா நோய் குணப்படும்.

* மிளகாய் வற்றலை மைபோல அரைத்து அடிப்பட்ட காயங்களின் மீது வைத்துக் கட்ட காயங்கள் சீழ் பிடிக்காமல் விரைவில் ஆறிவிடும். எரிச்சல் தருகின்ற துன்பத்தை சற்று பொருத்துக் கொண்டால் இம்மருத்துவ முறை வெகு விரைவில் குணம் தரக் கூடிய ஓர் முறை ஆகும்.

* காய்ந்த மிளகாயை அரைத்து தொண்டை மேல் பூசி வைக்க தொண்டைக்குள் எழும்பி துன்பம் தருவதாய் இருக்கும் கட்டிகள் உடைந்து குணமாகும்.

* நாட்பட்ட முதுகுவலி, பிடரி இசிவு என்கின்ற கழுத்து வலி, நாட்பட்ட வலி மற்றும் வீக்கங்கள் ஆகியவற்றுக்கு மிளகாயை பூண்டு மற்றும் மிளகோடு சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் கலந்து பூச மேற்சொன்ன நோய்கள் அத்தனையும் விலகி ஓடும்.

* மிளகாய் வற்றலுடன் பெருங்காயம், கற்பூரம் இரண்டையும் சேர்த்து எலுமிச்சை சாற்றால் அரைத்து சிறு சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் கொண்டு வாந்தி பேதி என்னும் ஊழிப் பெரு நோய்க்குக் கொடுக்க விரைவில் குணம் தரும்.

* ஒரு மிளகாய் வற்றலோடு நீர் சேர்த்து தீநீராகக் காய்ச்சி எடுத்த நீரில் சிறிது இஞ்சிச் சாறு சேர்த்து உடலுக்கு தக்க அளவு கொடுக்க வயிற்றில் வாய்வு சேர்ந்து விளைந்த வயிற்று உப்புசம், கடுமையான வயிற்று வலி, செரியாமையால் ஏற்பட்ட மந்த நிலை அத்தனையும் மறைந்து போகும்.

* மிளகாய் பொடியுடன் சர்க்கரை சமன் சேர்த்து வேலம் பிசின் தூள் சேர்த்து உருண்டையாக செய்து வைத்துக் கொண்டு (சுண்டை அளவு) தேவையான போது வாயிலிட்டுச் சுவைக்க தொண்டைக் கம்மல், தொண்டைக் கட்டு குணமாகும்.

* சீமை மிளகாய், காந்தூரி மிளகாய், ஊசி மிளகாய் என்று சொல்லக் கூடிய சிறு மிளகாயை உள்ளுக்கு உபயோகப்படுத்துவதாலும், செரியாமை, மாந்தக் கழிச்சல், மார்பு நோய், கீல்வாதம் சூதக வலி என்னும் மாதவிடாய்க் காலவலி ஆகியன குணமாகும்.

* 200 கிராம் மிளகாய் தூளோடு 100கிராம் மிளகுத் தூள் சேர்த்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக காய்ச்சி வடிகட்டி அத்துடன் பால், நல்லெண்ணெய் வகைக்கு அரை லிட்டர் சேர்த்து தைல பதமாகக் காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுகி வர அனைத்து விதான தலை வலிகளும் தீர்ந்து போகும்.

* மிளகாயில் காரம் மிகுந்திருப்பினும் கனிவுடன் பல்வேறு நோய்களையும் அது போக்கவல்லது.

‘நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்’
விஷ உணவுகளுக்கு விடை கொடுப்போம் !
பாரம்பரிய உணவுகளுக்கு உயிர்கொடுப்போம் !!

உடலுக்கு உகந்த பாகற்காய்!
30/06/2015

உடலுக்கு உகந்த பாகற்காய்!

உடலுக்கு உகந்த பாகற்காய்!

பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை.

அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.

பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.

பேரீச்சை
30/06/2015

பேரீச்சை

பேரீச்சை

உலகின் பழமையான நாகரிகமான “மெசபடோமியா”வில்தான் முதன் முதலாகப் பேரீச்சம்பழத்தின் பயன் பற்றி கூறப்பட்டுள்ளது. எகிப்திய பிரமிடுகளிலும், கிரேக்க, ரோமானிய, பாலஸ்தீனிய வரலாற்றுக் குறிப்புகளிலும் இடம் பெற்றுள்ள பேரீச்சம்பழம் கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் “சத்துணவுப்பழமாக” உலக மக்களால் உண்ணப்பட்டு வருகின்றது.

ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அருமையான பழம்.

தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும்.

தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும்.

இனிப்பு உணவுகளைத் தவிர்த்துத் தவிக்கும் சர்க்கரை நோயாளிகள் கூட தாராளமாக பேரீச்சம் பழம் சாப்பிடலாம். பேரீச்சம் பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

ஒரு டம்ளர் பேரீச்சம் பழத்தை அரைத்துக் கலந்து சாப்பிட்டு வர எலும்பு வலுப்பெறுவதுடன், உடல் வலிமையும் கூடும்.

எங்கேனும் அடிபட்டதால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம்.

வெண்குஷ்டம் இருப்பவர்கள் பேரீச்சம்பழ சாறு குடிக்கலாம். இது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

தினசரி இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கலைத் தரும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும்.

பேரீச்சம் பழத்தை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட வாதம், பித்தம், முட்டி வீக்கம் குணமாகும்.

பேரீச்சம் கொட்டையை வறுத்து பொடி செய்து, “காபி” போல் பால் சர்க்கரை கலந்து பருகலாம். உடலுக்கு உரமளிக்கும் இதனை வாரம் ஓரிரு நாள் பருகுவது நல்லது.

பல் முளைக்கும் குழந்தைகள் வயிற்றுக் கடுப்பால் அவதியுறும்போது பேரீச்சம்பழத்தைச் சுடுநீரில் கலந்து குழைய வேக வைத்து வேளை ஒன்றுக்கு 1 கரண்டி வீதம் 3 வேளை பருக பேதி நிற்கும்.

தினசரி 4 பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருபவர்கட்கு வயிற்றுக்கடுப்பு, அஜீரணபேதி, மலச்சிக்கல், அ மிபியாசிஸ் போன்ற வயிற்றுக் கோளாறுகள் வருவதில்லை. குறிப்பாக குடலுக்குப் பாதுகாப்பு கவசமாக பேரீச்சம்பழம் விளங்குகிறது.

முடி பராமரிப்புக்கு பேரீச்சம்

1. 100 கிராம் உயர்ரக பேரீச்சம் பழத்தை எடுங்கள்.
2. இதைக் கொட்டையுடன் தட்டி, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள்.
3. ஒரு நாள் இதை அப்படியே விடுங்கள்.
4. ஊறிய பேரீச்சம் பழத்தை அரைத்து வடிகட்டுங்கள்.
5. இதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெயைக் கலந்து காய்ச்சுங்கள்.

நீரிழிவின் எதிரி செர்ரி:
30/06/2015

நீரிழிவின் எதிரி செர்ரி:

நீரிழிவின் எதிரி செர்ரி:

இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது செர்ரிபழம். ரோஸ்யேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த இனிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் அவியம், புளிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் செரசஸ். இனிப்பு மற்றும் புளிப்பு செர்ரி பழங்கள் இரண்டுமே உடலுக்கு நலம் மிக்க சத்துக்களை கொண்டுள்ளன. செர்ரி பழங்கள் மிகக் குறைந்த ஆற்றல் வழங்குபவை. அதே நேரத்தில் ஊட்டச் சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது.

ஆன்தோசயனின் கிளைகோசிட் எனும் நிறமிசெர்ரியில் மிகுந்துள்ளது. இது அவற்றிற்கு நிறத்தை வழங்குவதுடன் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படக் கூடியது. உடலில் சைக்ளோஆக்சிஜனேஸ் 1, சைக்ளோஆக்சிஜனேஸ் 2 போன்ற நொதிகள் செய்யும் வேலையை ஆன்தோசயானின் நிறமி செய்வதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நொதிகள் குடல் மற்றும் சிறுநீரகத்தை பாதுகாக்கும் பணிகளில் பங்கெடுக்கிறது.

பொட்டாசியம் இதய செயல்பாட்டிற்கும், உடல் மற்றும் உடற்செல்கள் வளவளப்பு தன்மையுடன் இருக்கவும், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் அவசியமான தாதுவாகும். புளிப்பு செர்ரி பழத்தில் லுடின், ஸி-சான்தின், பீட்டா கரோட்டின் போன்ற ஆரோக்கியம் ஆன்டி-ஆக்சி டென்டுகள் உள்ளன. இவை தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டி அடிப்பவை.

கீல் வாதம் மற்றும் சதைப்பிடிப்பு போன்ற பாதிப்புகளுக்கு எதிராகவும் இது செயல்படும். புற்றுநோளிணி, உடல் முதுமை அடைதல், நரம்பு வியாதிகள், நீரிழிவு போன்ற கொடிய பாதிப்புகளுக்கு எதிராக உடலை காக்கும் ஆற்றல் புளிப்பு செர்ரி பழத்திற்கு உண்டு. மெலடானின் எனும் சிறந்த நோளிணி எதிர்ப் பொருள் செர்ரி பழத்தில் இருக்கிறது. ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு மூளையில் கட்டி உண்டாதல் போன்ற பாதிப்பு ஏற்ப டாமல் தடுப்பதில் மெலடானின் பங்கு முக்கியமானது.

இதுபோன்ற பாதிப்புகளில் வலியை கட்டுப்படுத்துவதிலும், நரம்பு மண்டல கோளாறுகள், இன்சோம்னியா போன்ற தூக்கமின்மை வியாதி, தலைவலி போன்றவற்றிற்கு எதிராகவும் மெலடானின் நோளிணித் தடுப்புபணியை செய்கிறது. பொட்டாசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாதுஉப்புக்கள் செர்ரி பழத்தில் நிறைந்துள்ளது.

வயது மூப்பு மற்றும் புற்றுநோய்களுக்கு எதிராகவும் செயலாற்றக் கூடியது. மேற்கிந்திய தீவுகளில் கிடைக்கும் அசெரோலா வகை செர்ரி பழங்கள், பிற நாடுகளில் கிடைக்கும் செர்ரிபழங்களைவிட வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏமிகுதியாகக் கொண்டது. 100 கிராம் பழத்தில் 1677.6 மில்லிகிராம் வைட்டமின் சியும், குறிப்பிட்ட அளவில் வைட்டமின ஏ யும் உள்ளது.

நம் வீட்டில் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சாமான்களில் மறைந்துள்ள மருத்துவக் குணங்களை தெரிந்துகொள்வோமா..
30/06/2015

நம் வீட்டில் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சாமான்களில் மறைந்துள்ள மருத்துவக் குணங்களை தெரிந்துகொள்வோமா..

நம் வீட்டில் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சாமான்களில் மறைந்துள்ள மருத்துவக் குணங்களை தெரிந்துகொள்வோமா....

* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், இரத்தக் குழாயிலே கொலஸ்ட்ரால் படியாதவாறு தடுக்கும்.

* வாழைப்பழங்களில் சோடியம், கால்ஷியம், பொட்டாஷியம் போன்ற பலவகைச் சத்துக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்கள் வீதம் சாப்பிட்டு வந்தால் இருதய அழுத்தம் ஏறாமல் சீராக நடைபெற்று வரும்.

* தேங்காய் பயன்படுத்தும் உணவுகளில் கூடிய வரை தேங்காயைக் குறைத்துக் கொண்டு, டோஃபு எனப்படுகிற சோயா பனீரை சேர்க்கலாம். கொழுப்புச் சத்து அதிகமுள்ளவர்களுக்கும், இதயப் பாதிப்பு உள்ளவர்களுக்கும், எடை குறைக்க நினைப்போருக்கும் ஏற்றது இந்த டோஃபு.

* லவங்கப்பட்டை சேர்த்துக் கொதிக்க வைத்த தண்­ணீரை பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொண்டு, தினம் ஒரு முறை வாய் கொப்பளிக்கலாம். இயற்கையான மவுத் வாஷான இது, வாய் நாற்றத்தைக் தவிர்க்கும்.

* குழந்தைக்கு மார்பிள் சளி கட்டிக்கொண்டால், வெற்றிலையில் தேங்காய் எண்ணையைத் தடவி விளக்கில் சூடுபடுத்தி இளம் சூட்டில் மார்பில் பற்றுப்போடலாம். சளி கரைஞ்சிடும். சில குழந்தைகளுக்கு தலையில் சூடு இருக்கும். இதுக்கு குங்குமப்பூவை அரைச்சு பத்துப் போடலாம்.

* தினம் ஒரு கேரட்டை பச்சையாக கடிச்சி சாப்பிட்டால் வாத நோய் ஏற்படற வாய்ப்பு 68 சதவீதம் தவிர்க்கப்படுகிறது.

* வேலைக்கு போற பெண்கள் சிலர் அவசரத்துல சாப்பிடக்கூட மாட்டார்கள்... அந்த மாதியான பெண்கள் காபி குடிக்கிற டம்ளர்ல ஒரு டம்ளர் கேப்பைக்கூழ் குடிச்சிட்டுப்போகலாம். பசி அடங்குவதோடு உடம்புக்கு சத்தையும் தரக்கூடியது கேப்பைகூழ்.

துளசி
30/06/2015

துளசி

துளசி

எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

உறக்கத்தைத் தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:-
30/06/2015

உறக்கத்தைத் தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:-

உறக்கத்தைத் தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:-

சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.

உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதாம்:

பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.

இந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.

தேநீர்:

உறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.

அந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.

வாழைப்பழம்:

மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.

இந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.

பால்:

பால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.

ஓட்ஸ்:

நீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.

இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.

செர்ரிபழம்:

மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது

Address

Sbi Bank Near
Mayiladuthurai
609001

Opening Hours

Monday 6:30am - 10pm
Tuesday 6:30am - 10pm
Wednesday 6:30am - 10pm
Thursday 6:30am - 10pm
Friday 6:30am - 10pm
Saturday 6:30am - 10pm
Sunday 6:30am - 10pm

Telephone

+917373022002

Alerts

Be the first to know and let us send you an email when Kaveri diagnostic center & x ray posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kaveri diagnostic center & x ray:

Share

Category