Evergreen Mobiles

Evergreen Mobiles one stop shop for all ur needs Our Services:Mobiles Sales, Gifts, Stationeries, Accessories, Fancy, Toys, Household Needs & Much More

பசியறிந்து சோறு போட ஒருவர் இருக்கும் வரை...சாப்பிட்டாயா எனக்கேட்க ஒருவர்  இருக்கும் வரை...தாமதமாகும் இரவுகளில் எங்கிருக்...
06/12/2024

பசியறிந்து சோறு போட
ஒருவர் இருக்கும் வரை...
சாப்பிட்டாயா எனக்கேட்க
ஒருவர் இருக்கும் வரை...

தாமதமாகும் இரவுகளில் எங்கிருக்கிறாய் என விசாரிக்க
ஒருவர் இருக்கும் வரை....
நோய் வருத்தும் இரவுகளில்
கண் விழித்துப் பார்த்துக்கொள்ள ஒருவர் இருக்கும் வரை...

குரல் மாறுபாட்டில் மனநிலையைக் கணிக்க
ஒருவர் இருக்கும் வரை...
போய்ச் சேர்ந்ததும் அழைப்பெடு என
வழியனுப்ப
ஒருவர் இருக்கும் வரை...

வீடடையக் காத்திருந்து கதவு திறக்க ஒருவர் இருக்கும் வரை...
தோற்றுப்போய் திரும்புகையில்
தோள்சாய்த்துக்கொள்ள
ஒருவர் இருக்கும் வரை...

போ என்றாலும் விட்டுப்போகாது
சண்டை போட்டுக்கொண்டேனும்
உடனிருக்க
ஒருவர் இருக்கும் வரை...
மனம் கனக்கும் நினைவுகளைப் பகிர்ந்துக்கொள்ள
ஒருவர் இருக்கும் வரை....

நம் கனவுகளை தம் கனவுகளாகத் தோள்களில் தூக்கி சுமக்க
ஒருவர் இருக்கும் வரை...
எதற்காகவும் எவரிடமும் நம்மை விட்டுக்கொடுக்காத
ஒருவர் இருக்கும் வரை...

கூட்டத்தின் நடுவே தனித்துப்போகையில் கரங்கள் பற்றி
நானிருக்கிறேனென உணர்த்த
ஒருவர் இருக்கும் வரை...
தவறுகளைத் தவறென சுட்டிக்காட்டித் திருத்தும்
ஒருவர் இருக்கும் வரை...

துயர் அழுத்தும் கணங்களில்
அருகிருந்து கண்ணீர்த்துடைக்க
ஒருவர் இருக்கும் வரை....
மனக்குறைகளைப் புலம்பித்தள்ளுகையில் காதுகொடுத்துக்கேட்க
ஒருவர் இருக்கும் வரை
மட்டுமே...
வாழ்வு வசந்தமானது"அன்பேசிவம் 🙏🌿

💰மனைவி ஒரு நாள் தன் கணவனுக்கு பிடித்த மீன் குழம்பு சமைத்தாள்...இன்று எப்படியும் கணவனிடம் பாராட்டு வாங்க வேண்டும் என்று க...
08/11/2024

💰
மனைவி ஒரு நாள் தன் கணவனுக்கு பிடித்த மீன் குழம்பு சமைத்தாள்...

இன்று எப்படியும் கணவனிடம் பாராட்டு வாங்க வேண்டும் என்று காத்திருந்தாள்... தெரு முழுவதும் மீன் குழப்பு வாசனை.. கணவன் குமார் வந்ததும்..மனைவி வேகமாக வந்து...குடிக்க தண்ணீர் தந்து, சாப்பிட அமரச் சொன்னாள்..

மனைவி சாப்பாடு பரிமாறினாள்.. குமார் சாப்பிட தொடங்கினான்.

மனைவி கேட்டாள்.. "என்னங்க குழம்பு எப்படி இருக்கு"..? என்று..

குமார்.. "நல்லா இருக்கு, ஆனாலும் எங்க அம்மா கைப்பக்குவம் உனக்கு இல்ல.. எங்கம்மா வைப்பாங்க பாரு மீன் குழம்பு.. தெருவே மணக்கும்... ருசி அப்பப்பா.. சூப்பரா இருக்கும் என்றான்..

அம்மா குழம்பின் ருசியை பாராட்டி...சாப்பிட்டு முடித்து எழுந்தான்..
ராணிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது..கணவன் தன் குழம்பின் ருசியை பாரட்டாததை நினைத்து..

'எப்ப பாரு அம்மா..அம்மா'னு.. அவரு அம்மா'வ தான் தூக்கி வச்சி பேசுவாரு..' என்று முணு,,முணுத்தாள்..

அப்போது அவளுடைய 17 வயது மகன் சாப்பிட வந்தான்... சாதம் எடுத்து வைத்தாள்... மகன் ஒரு வாய் சாதம்.. சப்பிட்டு விட்டு தன் அம்மா வை பாராட்ட ஆரம்பித்தான்..

"அம்மா சூப்பர் மா.. எப்படிம்மா இப்படி சமைக்குறீங்க..? தெருவே மணக்குதும்மா..!! உங்க அளவுக்கு யார்னாலையும் மீன் குழம்பு வைக்க முடியாதும்மா..." என்று பாராட்டினான்..

அவளுக்கு புரிந்தது... ஒரு மகன் யார் கையில் சாப்பிட்டாலும், எவ்வளவு ருசியாய் சாப்பிட்டாலும், தன் தாயின் குழம்பை மட்டும் தான் அதிகம் பாராட்டுவான் என்று..

நம் மகனும் அம்மா.. அம்மா என்று தானே உயர்த்தி பேசுகிறான்.. மகன் பேசுவது தவறு இல்லை யென்றால்.. கணவன் பேசியதும் தவறில்லை தான்.. என்று புரிந்து கொண்டாள்..

*_இப்படி புரிந்து கொள்ளும் ஒரு அன்பான மனைவி அமைந்தால் அவளும் ஒரு அம்மா தான் கணவனுக்கு..!_*

07/11/2024
*🕷️108 பிரபல சிவன் கோயில்கள் தரிசன பலன்கள்!*  *1 திருகுடந்தை* ஊழ்வினை பாவம் விலக *2 திருச்சிராப்பள்ளி* வினை அகல *3 திருந...
05/11/2024

*🕷️108 பிரபல சிவன் கோயில்கள் தரிசன பலன்கள்!*

*1 திருகுடந்தை* ஊழ்வினை பாவம் விலக

*2 திருச்சிராப்பள்ளி* வினை அகல

*3 திருநள்ளாறு* கஷ்டங்கள் விலக

*4 திருவிடைமருதூர்* மனநோய் விலக

*5 திருவாவடுதுறை* ஞானம் பெற

*6 திருவாஞ்சியம்*
தீரா துயர் நீங்க

*7 திருமறைக்காடு* கல்வி மேன்மை உண்டாக

*8 திருத்தில்லை*
முக்தி வேண்ட

*9 திருநாவலூர்*
மரண பயம் விலக

*10 திருவாரூர்*
குல சாபம் விலக

*11 திருநாகை* ( *நாகப்பட்டினம்* )
சர்ப்ப தோஷம் விலக

*12 திருக்காஞ்சி* ( *காஞ்சிபுரம்* )
முக்தி வேண்ட

*13 திருவண்ணாமலை* நினைத்த காரியம் நடக்க

*14 திருநெல்லிக்கா* முன்வினை விலக

*15 திருச்செங்கோடு* *அர்த்தநாரீஸ்வரர்* *கோவில்* மணவாழ்க்கை சிறப்புடைய

*16 திருகருக்காவூர்* கர்ப்ப சிதைவு தோஷம் விலக

*17 திரு* *வைத்தீஸ்வரன்* கோவில் நோய் விலக

*18 திருகோடிக்கரை* பிரம்ம தோஷம் விலக

*19 திருக்களம்பூர்* சுபிட்சம் ஏற்பட

*20 திருக்குடவாயில்* ( *குடவாசல்* ) இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய

*21 திருசிக்கல்* ( *சிக்கல்* )
துணிவு கிடைக்க

*22* *திருச்செங்காட்டங்குடி*
கோர்ட் வம்பு , வழக்கு உள்ளவர்கள் தோஷம் விலக

*23 திருக்கண்டீச்சுரம்* நோய் விலக , தீராத புண் ஆற

*24 திருக்கருக்குடி* ( *மருதாநல்லூர்* ) குடும்ப கவலை விலக

*25 திருக்கருவேலி* ( *கருவேலி )*
குழந்தை பாக்கியம் பெற , வறுமை நீங்க

*26 திருவழுந்தூர்* ( *தேரெழுத்தூர்* )
முன் ஜென்ம பாவம் விலக

*_27 திருச்சத்திமுற்றம்_* மண வாழ்க்கை கிடைக்க

*28 திருப்பராய்துறை* ( *திருச்சி* )
கர்வத்தால் வீணானவர்கள் சுகம் பெற

*29 திருநெடுங்களம்* ( *திருச்சி )*
தீரா துயரம் தீர
( இடர் களைய )

*30 திருவெறும்பூர்* ( *திருச்சி* ) அதிகாரத்தால் வீழ்ந்தவர்கள் சுகம் பெற

*31 திருப்பைஞ்ஞீலி* ( *திருச்சி )*
யம பயம் விலக

*32 திருவையாறு* அக்னி தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக

*33 திருவைகாவூர்* வில்வ அர்ச்சனை செய்து பாவத்தை போக்க

*34 திருக்கஞ்சனூர்* திருமண தோஷம் விலக

*35 திருமங்கலக்குடி* ( *சூரியனார் கோவில்* )
குழந்தை பாக்கியம் பெற

*36 திருமணஞ்சேரி* திருமண தோஷம் விலக

*37 திருமுல்லைவாயில்* சந்திர திசை நடப்பவர்கள் சந்திர தோஷம் விலக

*38 திருவெண்காடு* ஊழ்வினை தோஷம் உள்ளவர்கள் கல்வி மேன்மை

*39 திருநெல்வேலி* பிராமண குற்றம் விலக

*40 திருக்குற்றாலம்* *குற்றாலநாதர்* *கோவில்*
முக்தி வேண்ட

*41 திருவாலவாய்* ( *மதுரை )*
தென்திசையில் குடியிருப்பவர்கள் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் வழிபட

*42 திருப்பரங்குன்றம்* ( *மதுரை* )
வாழ வழி தெரியாது தவிப்பவர்கள் வழிபட

*43 திருவாடானை* *ஆதிரத்தினேசுவரர்* *கோவில்*
தீரா பாவம் விலக

*44 திருமுருகன் பூண்டி* *திருமுருகநாத* *சுவாமி கோவில்*
மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக

*45* *திருப்பாதிரிப்புலியூர்* ( *புட்லூர்* )
தாயை விட்டு பிரிந்து இருக்கும் குழந்தை தோஷம் விலக

*46 திருவக்கரை* செய்வினை தோஷம் விலக

*47 திருவேற்காடு* வாணிப பாவம் விலக

*48 திருமயிலாப்பூர்* மூன்று தலைமுறை தோஷம் விலக

*49 திருஅரசிலி* ( *ஒழுந்தியாம்பட்டு)* காமத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக

*50 திருவாலங்காடு* வீண் வம்பில் மாட்டிக் கொண்டவர்கள் தோஷம் விலக

*51 திருவேட்டிபுரம்* ( *செய்யாறு )*
ஞானம் கிடைக்க

*52 திருப்பனங்காடு* பந்த பாசத்தில் இருந்து விலக

*53 திருவூறால்* ( *தக்கோலம்* ) உயிர்வதை செய்த பாவம் விலக

*54 திருப்பாச்சூர்* குடும்ப கவலைகள் நீங்க

*55* *திருவெண்ணைநல்லூர்*
பித்ரு தோஷம் விலக

*56 திருவதிகை*
நல் மனைவி அமைய

*57 திருவாண்டார்* *கோவில்*
முக்தி வேண்ட

*58 திருமுது குன்றம்* ( *விருத்தாசலம்* )
தீரா பாவம் விலக

*59 திருக்கருவூர்* ( *கரூர்* )
பசுவதை செய்வதன் வழிபட

*60 திருப்பாண்டிக்* ( *கொடுமுடி* )
பித்ரு தோஷம் , பிரேத சாபம் விலக

*61* *திருக்கொடுங்குன்றம்* ( *பிரான்மலை* ) மறுபிறவி வேண்டாதவர்கள் வழிபட

*62 திருகோகர்ணம்* ( *கர்நாடகம்* )
தேவ தோஷம் விலக

*63 திருப்புகலூர்* பெரியோரை அவமதித்த குற்றம் நீங்க

*64 திருத்தோணிபுரம்* ( *சீர்காழி )*
குல சாபம் நீங்க

*65 திருவைத்தீஸ்வரன் கோவில்*
பிணிகள் விலக , அங்கார தோஷம் விலக

*66* *திருக்கருப்பறியலூர்* ( *தலைஞாயிறு*)
கர்வத்தால் குரு துரோகம்

*67 திருப்பனந்தாள்* பிறன்மனை நாடியவர்கள் தோஷம் விலக

*68 திருப்புறம்பயம்* மரண பயம் விலக

*69 திருநெய்த்தானம்* மோட்ஷம் வேண்ட

*70* *திருவானைக்கா* கர்மவினை அகல

*71 திருவேதிக்குடி* தான் எனும் அகம்பாவத்தால் சீரழிந்தவர்கள் தோஷம் விலக

*72 திருவலஞ்சுழி* வறுமை அகல

*73 திருநாகேஸ்வரம்* ஸர்ப்ப ஸாபம் விலக

*74 திருநாகேஸ்வர* *சுவாமி* ( *கும்பகோணம்* ) நவகிரஹ தோஷம் விலக

*75 திருநல்லம்* *(கோனேரிராஜபுரம்)* வேதத்தை பரிகசித்து அவலத்துக்கு உள்ளானவர்கள் தோஷம் விலக

*76 திருத்தெளிச்சேரி* ( *காரைக்கால் )*
சூரிய தோஷம் உள்ளவர்கள் குறை தீர

*77* *திருசெம்பொன்பள்ளி*
வீரபத்ரன் குல வம்சத்தினர் வணங்க

*78 திருத்தலச்சங்காடு* ( *தலைச்செங்காடு)*
அடிமையாட்கள் சாபம் பெற்றவர்கள் தோஷம் விலக

*79 திருவன்னியூர்* ( *அன்னூர்* ) சோமாஸ்கந்தரை குலதெய்வமாக கொண்டவர்கள் வழிபட

*80 திருநன்னலம்* ( *நன்னிலம் )*
ஞானம் வேண்டுபவர்கள் வேண்ட

*81 திருராமனாதீச்சுரம்* ( *திருக்கண்ணாபுரம்* )
கணவனின் சந்தேகப் பார்வைக்கு உட்பட்ட பெண்களது தோஷம் விலக

*82 திருமருகல்* கணவன் மனைவி அன்புடன் வாழ

*83 திருச்சிக்கல்* பங்காளி பகை உள்ளவர்கள் வழிபட

*84 திருச்சேறை* இல்லறம் மேலும் சிறக்க

*85 திருக்கோளிலி* ( *திருக்குவளை* ) நவகோள்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட

*86 திருவாய்மூர்* செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக

*87 திருநெல்லிக்கா* கல்வி மேன்மை அடைய

*88 திருவெண்டுறை* ( *வண்டுறை* ) வறுமையிலிருந்து விலக

*89 திருக்கடிக்குளம்* ( கற்பகநாதர்குளம் ) வினைகள் விலக

*90 திருஆலங்குடி* புத்திர தோஷம் விலக , செல்வம் சேர்க்கை பெற

*91 கொட்டாரம்*
அமைதி பெற

*92 திட்டை*
சந்திர தோஷம் விலக

*93 பசுபதி கோவில்* இராகு தோஷம் உள்ளவர்கள் வழிபட

*94 கொட்டையூர்*
செய்த பாவங்கள் வேயொரு வீழ

*95 ஓமாம்புலியூர்*
சனி தோஷம் விலக

*96 தருமபுரம்* சிவனடியாரை அவமதித்த குற்றம் விலக

*97 மயிலாடுதுறை* அனைத்து பாவங்களும் விட்டோட

*98 உத்தரகோச மங்கை* கர்மவினைகள் அல்ல

*99 இராமேஸ்வரம்* பித்ரு தோஷம் விலக

*100 காளையர்கோவில்* பிறவி பயன் கிடைக்க

*101 பெண்ணாடம்* ஊழ்வினை தோஷம் அகல

*102* *இராஜேந்திரப்பட்டினம்*
கர்மவினை அகல

*103 அவினாசியப்பர்*
ஏழு தலைமுறை பாவங்கள் விலக

*104 குரங்கினில்* *முட்டம்*
நினைத்த காரியம் நடக்க

*105 பவானி*
பித்ரு தோஷம் போக்க

*106 ஆச்சாள்புரம்*
மண வாழ்க்கை சிறக்க

*107 ஆடுதுறை* திருஷ்டி தோஷம் விலக

*108 சங்கரன்கோவில்* ஸர்ப்ப தோஷம் விலக.
போற்றி

*ஓம் நமசிவாய*

04/11/2024
30th AUGUST 2023RAKSHA BANDHANஉறவுகளை மதிப்போம், கொண்டாடுவோம்🥳🥳ரக்ஷபந்தன் ராக்கி நமது கடையில் கிடைக்கும்
18/08/2023

30th AUGUST 2023
RAKSHA BANDHAN

உறவுகளை மதிப்போம், கொண்டாடுவோம்🥳🥳

ரக்ஷபந்தன் ராக்கி நமது கடையில் கிடைக்கும்

All Size Stapler Pin AVAILABLE with us.
29/07/2023

All Size Stapler Pin AVAILABLE with us.

உலக நண்பர்கள் தினம்World Friendship Day(ஒவ்வொரு வருடத்தின் ஆகஸ்ட் மாத முதல் ஞாயிறுக்கிழமை)06.08.2023Friendship= Wrist Ba...
28/07/2023

உலக நண்பர்கள் தினம்
World Friendship Day
(ஒவ்வொரு வருடத்தின் ஆகஸ்ட் மாத முதல் ஞாயிறுக்கிழமை)
06.08.2023

Friendship= Wrist Band, Sation Ribbon Tag and Celebration Decoration Items AVAILABLE

சாவி நாம் அனைவரும் எதாவது ஒரு வகையில் பயன்படுத்துகின்றோம்!நம் சாவியை பத்திரப்படுத்தவும், அலங்கரிப்பதும் கீசெயின்கள்தான்!...
09/06/2023

சாவி நாம் அனைவரும் எதாவது ஒரு வகையில் பயன்படுத்துகின்றோம்!

நம் சாவியை பத்திரப்படுத்தவும், அலங்கரிப்பதும் கீசெயின்கள்தான்!!

எனவே, ஒவ்வொருவரின் மன நிலைப்பாட்டை மனதில் கொண்டு பல்வேறு மாடல் கீசெயின்கள் நமது கடையில் உள்ளது!!!

நியாயமான விலை என உங்கள் உள்ளமே சொல்லும், GURANTEED👌👌

Solder
02/06/2023

Solder

WIRELESS CALLING BELL AVAILABLE50அடி தாரத்திர்க்கும் மேலாக இயங்கும். வீடு, அலுவலகம், மெஷினரி ரூம், ஹாஸ்பிட்டல் நோயாளி அவ...
02/06/2023

WIRELESS CALLING BELL AVAILABLE

50அடி தாரத்திர்க்கும் மேலாக இயங்கும். வீடு, அலுவலகம், மெஷினரி ரூம், ஹாஸ்பிட்டல் நோயாளி அவசர அழைப்பிற்கு என உடனடி சிக்னல் அனுப்ப பல இடங்களில் உதவும்.

பல்வேறு காலிங் டோன் உள்ளது.
எளிமையாக பொருத்திக்கொள்ளலாம்.
மிக நியாயமான விலையில்..

YOGA MAT நமது கடையில் கிடைக்கும்"நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்"நம் வாழ்வில் சேர்த்துக்கொள்ள வேண்டிய வேண்டாத விசயங்களை ...
02/06/2023

YOGA MAT நமது கடையில் கிடைக்கும்

"நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்"

நம் வாழ்வில் சேர்த்துக்கொள்ள வேண்டிய வேண்டாத விசயங்களை பொருத்தே நமது உடல் ஆரோக்கியம் உறுதிபடுத்தப்படுகிறது!

ஜீன்21 "உலக யோகா தினம்"

Address

Mettupalayam-Coimbatore

Opening Hours

Monday 8am - 10pm
Tuesday 8am - 10pm
Wednesday 8am - 10pm
Thursday 8am - 10pm
Friday 8am - 10pm
Saturday 8am - 10pm
Sunday 8am - 10pm

Telephone

+919363300000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Evergreen Mobiles posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Evergreen Mobiles:

Videos

Share