Virudhasampatty mettur

Virudhasampatty mettur salem to mettur highway inner 3kms located this place.........

01/01/2023
30/12/2017

நம்மாழ்வார்

05/05/2017
05/05/2017

மே 5: மாவீரன் நெப்போலியன் நினைவு தினம் இன்று..

நெப்போலியன் இறந்தது எப்படி என்கிற கேள்விக்கு வரும் பதில்கள் இவை...

நெப்போலியன் போனபார்ட் எப்படி இறந்தார்?' - ஐரோப்பா பல்லாண்டுகளாக விடை தேடிக் கொண்டு இருக்கும் கேள்வி. ஏனெனில், மைனஸ் 26 டிகிரி குளிரில் குதிரைகளின் ரத்தத்தைக் குடித்து உயிர் வாழ்ந்தவர். தீவுச் சிறையில் இருந்து கடலை நீந்திக் கடந்த மாவீரன் நெப்போலியன்.அவர் தானாக நோய் வாய்ப்பட்டு இறந்தார் என்றால், எப்படி நம்புவது? 'தனிமைச் சிறையில் நெப்போலியனுக்கு என்ன நடந்தது?' என்பதை அறிய யாருக்கும் எந்த க்ளூவும் அப்போது கிடைக்கவில்லை.
1816-ம் வருடத்தில் இருந்து 1821-ம் ஆண்டில் அவர் இறக்கும் வரை உதிர்ந்த முடிகள் ஆய்வுக்குக் கிடைத்தன. அப்போதுதான் நெப்போலியனின் முடிகளில் ஆர்சனிக் அமிலம் கலந்திருந்தது முதல் க்ளூவாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 'ஆரோக்கியமான ஒரு மனிதரின் முடியில் சோதனையில் வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு ஆர்சனிக் இருப்பது இல்லை. எனவே, நெப்போலியன் மரணத்துக்குக் காரணம் விஷமாக இருக்கலாம்' என்று கண்டுபிடித்தார்கள். 'விஷம் கலந்த காற்றை அவர் சுவாசித்ததாலோ, விஷம் கலந்தவற்றை உண்டதாலோ நெப்போலியன் மரணம் அடைந்திருக்கலாம்!' என்று லக்ஸம்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் வென்னிங் அறிவித்தார்.
பின்பு, நெப்போலியனின் அறை பற்றிய ஆய்வுகள் இரண்டு க்ளூக்களை அளித்தன. ஒன்று, அங்கு இருந்த ஓவியம். இரண்டாவது, அந்த அறையின் சுவரை அலங்கரித்த வால் பேப்பர்கள். இவை இரண்டிலுமே 'மெள்ளக் கொல்லும்' ஸ்லோபாய்சன் பூசப்பட்டு இருந்தது. 'அந்த ஓவியத்தில் பாம்பின் விஷத்தை ஒரு வண்ணமாகப் பயன்படுத்தி இருந்தார்கள். அந்த ஓவியத்தின் அருகிலேயே இருந்ததால், விஷத்தைச் சுவாசித்துச் சுவாசித்து அவர் இறந்துவிட் டார்!' என்று ஒரு தரப்பு ஆய்வாளர்கள் சொன்னார்கள்.
'வால் பேப்பர் ஒட்டும் பசையில் விஷத்தைக் கலந்திருந்தார்கள். பசி தாங்க முடியாமல் நெப்போலியன் வால் பேப்பரைக் கிழித்துத் தின்றதால் இறந்தார்' என்று இன்னொரு தரப்பு அறிவித்தது. இன்னும் ஊர்ஜிதமான உண்மை வெளிவந்த பாடு இல்லை!

-இரா.மன்னர் மன்னன்

03/05/2017

KPR Mills Ltd, Avinasi, Coimbatore:
கோவை அவினாசி அருகில் உள்ள ஒரு தனியார் ஆலையில் எனது நண்பனின் தங்கையினை வேலைக்கு சேர்த்து விட அவர்களுடன் சென்று இருந்தேன்.
விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பொழுது என்ன டிகிரி படிக்க போரீங்க என அவர்கள் கேட்ட கேள்வி என்னை வியக்க வைத்தது.
பின்பு அந்த ஆலையினை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கேட்ட போது எனக்கு வியப்பாக இருந்தது.
KPR மில் குழுமத்திற்கு சொந்தமான அதில் பணிக்கு பின் மாலை நேர பள்ளி, கல்லூரி நடைபெற்று வருகிறது. 12th, degree, nursing, yoga என பல்வேறு பிரிவில் பல பெண்கள் பயின்று வருகின்றனர். மேலும் பணியாளர்கள் பணி புரியும் அனைத்து இடங்களிலும் A/C வசதி, 2 ஆம் தேதிக்குள் Rs.6000/- சம்பளம் (ESI, PF பிடித்தம் போக கையில் கிடைக்கும் தொகை) ATM மூலம் வழங்கப்படுகிறது, போனஸ் Rs.6000/-, குடும்பம் முழுவதற்கும் ESI வசதி, தனியார் கல்லூரிகளுக்கு நிகரான இலவச தங்குமிடம், மேனேஜர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் என வேறுபாடு இன்றி அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமான உணவு, இன்னும் பல வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இத்துணை வசதிகளையும் நேரில் கண்ட பின்பு எனக்கு தெரிந்த படிக்க வசதி இல்லாமல் வீட்டில் இருந்த 3 பெண்களை இதுவரை அனுப்பினேன். அதில் ஒரு பெண் இன்று காலை எனக்கு phone செய்து கண்ணீருடன் நன்றி கூறினார். அதனால் தான் இந்த பதிவு.
நம்மால் இத்தனை வசதிகளையும் அவர்களுக்கு செய்து கொடுக்க முடியாவிட்டாலும், அதற்கான வாய்ப்பினையாவது கொடுத்து உதவலாமே...
தொடர்புக்கு: 98652 53892..
படிக்க வசதியின்றி தவிக்கும் பெண் பிள்ளைகளுக்கு உதவும் மனம் கொண்டவர்கள் இதனை அதிகம் பகிரவும்

14/04/2017

வெளிஊர் செல்லும் போது நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் நடக்கும் கூத்துக்கள்
100% உண்மை..

Address

Mettur

Telephone

94856423948

Website

Alerts

Be the first to know and let us send you an email when Virudhasampatty mettur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram