Srivaris Hospital

Srivaris Hospital diabetic clinic which is located in nagapattinam

மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவதற்கான உடற்பயிற்சிநவீன உலகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், மக்களுக்கு நன்மை தருப...
15/10/2023

மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவதற்கான உடற்பயிற்சி

நவீன உலகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், மக்களுக்கு நன்மை தருபவையாக அமைகின்றன. அதே நேரத்தில் உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக, மன அழுத்தம், சோர்வு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்குப் பல வழிகள் உள்ளன. அதில் மிகச்சிறந்த வழியாக அமைவது உடற்பயிற்சி செய்வதாகும். இது உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் பெரிதும் உதவுகிறது.

நடைபயிற்சி

தற்போது ஒவ்வொருவரும் தங்களது வழக்கமான நடைமுறைகளை விட அதிகமாக செய்கிறார்கள். இதனால் அதிகப்படியான மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் இன்னும் பிற பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர்.
உடற்பயிற்சியில் மிகவும் இன்றியமையாத ஒன்றாக விளங்குவதில் ஒன்று நடைபயிற்சி. தினந்தோறும் நடைபயிற்சி செய்வதன் மூலம் தசைகள் வலுப்படுவதுடன் மன அழுத்தம் குறையும்.
மனச்சோர்வு நீங்குவதுடன் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவர்.

சைக்கிள் ஓட்டுதல்

கற்றறிந்த பின்னர் செய்யும் செயல்கள் அனைத்தும் நம் மனதிற்கு உற்சாகத்தைத் தரக்கூடியதாக அமைகிறது. அந்த வகையில், சைக்கிள் ஓட்டுதலும் அமையும். இது பொழுதுபோக்கான ஒன்றாக கருதினாலும்,
மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றாக சைக்கிள் ஓட்டுதல் உள்ளது. இதன் மூலம், மனச்சோர்வு, மன அழுத்தம் போன்றவை நீங்கும். எடை குறைப்பிற்கும் சைக்கிள் ஓட்டுதல் முக்கிய பயிற்சியாக உள்ளது.
நீச்சல் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒன்றாகும்.

யோகா பயிற்சி

மனக் கட்டுப்பாட்டுகளில் முக்கிய பங்கு வகிப்பது யோகா. பொதுவாக, அதிக வேலைப்பழு காரணமாக மக்கள் சமநிலையற்ற நிலையை அடைகின்றனர். இதனால், அவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.
சரியான முடிவு எடுக்காமல் போவது, சாதாரண விஷயத்திற்கும் கோபப்படுவது உள்ளிட்ட பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதனைத் தவிர்க்க யோகா முக்கிய பங்கு வகிக்கிறது.
அதாவது, யோகா செய்வதுடன் மன ஒருமைப்பாடு அடைவதுடன் நிலைப்படுத்திக் கொள்ள முடியும்.

ஸ்ரீவாரி மருத்துவமனை
7010364990

Address

58, Perumal North Street
Nagapatinam
611001

Alerts

Be the first to know and let us send you an email when Srivaris Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category