16/10/2025
அஸ்ஸலாமு அலைக்கும்...
நாம் விதைத்த விதை அதன் பயனை வெளித்தரும் போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சி அலவற்றதாக இருக்கும். அதே போல் நமது பள்ளியில் சிறு துவக்கமாக ஆரம்பித்த சிலம்பம் வகுப்பில் சேர்ந்து சிலம்பம் பயின்ற நமது பள்ளியின் *முன்னாள் மாணவர் முஹம்மது சல்மான்* இந்த மாதம் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசினை வென்றுள்ளார்.
*அரசுத்துறை சார்ந்த போட்டிகளில் நமது ஊரை சேர்ந்த ஒரு மாணவர் கலந்துகொண்டு மாவட்ட அளவில் வெள்ளி பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை.*
நாம் பள்ளி ஆரம்பிக்கும் போது இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு துறைகளிலும் தலைமைத்துவமிக்க ஆளுமைகளை உருவாக்க வேண்டும் என்ற நிய்யதில் நாம் ஆரம்பம் செய்தோம், அந்த இலக்கை பெற்றோர்களின் பங்களிப்பு இன்றி அடையமுடியாது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு மிகப்பெரிய உதாரணம்.
இன்று முஹம்மது சல்மான் மாவட்ட அளவில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் என்றால் அதற்கு பின்னால் அம்மாணவரின் பெற்றோர்கள் கொடுத்த support மற்றும் அம்மாணவருக்கு சிறந்த பயிற்சி கொடுத்த சிலம்பம் ஆசிரியர் உதவிகள் இல்லாமல் இவ்வெற்றியை அடைந்திருக்க முடியாது.
இறுதியாக பயிற்சி, (நேரம், பணம் போன்ற) தியாகம், தொடர் முயற்சி மற்றும் முறையான வழிகாட்டுதல் இருந்தால் நம் வெற்றி நிச்சயம் என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் புரிந்து செயல்படுவோம் இன்ஷா அல்லாஹ்.
வெற்றி பெற்ற மாணவன் முஹம்மது சல்மான், பயிற்சியளித்த சிலம்பம் ஆசிரியர் திரு.விக்ரம் அவர்களுக்கும், ஒத்துழைப்பும் ஊக்கமும் அளித்த சல்மானின் பெற்றோர்களுக்கும் வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக.
குறிப்பு: நமது பள்ளி சிலம்பம் ஆசிரியர் திரு விக்ரம் அவர்களின் மாணவர்கள் மாவட்ட அளவில் கலந்துகொண்டு 1தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் பதக்கங்களை வென்றுள்ளனர்.
Vk Vk
Aqsa Hasan
Al Aqsa School Manjakollai
080565 35811