24/02/2023
தற்கால சமூகத்தின் முக்கிய தேவை !.,
வாட்சப் பல்கலைகழகத்தில் இருந்து மீள தடுப்பு மருந்துகள் .,
என்னிடம் வரும் ஒவ்வொரு நோயாளியும் , தமது நோய்க்கான ஏதேனும் ஒரு தீர்வை தம்மை தாமே அறிந்துகொண்டு வந்து உரையாடுவதை காண முடிகிறது .,
அவர்கள் சொல்லும் பெரும்பாலான நோய் மருத்துவம் என்பது முற்றிலும் அறிவியல் இல்லாத பிதற்றலாகவே இருக்கும் ,
ஆனால் ,
அந்த மருத்துவம் பல நாள் அவர்களுக்கு பலன் கிடைத்ததாக் சொல்வார்கள் .,
இதுவும் ஒரு வகையான மன நோய் .!!
இன்னும் பலர் , எனக்கு மருந்து எல்லாம் வேண்டாம் ,இயற்கை முறையில்குணமாக்கணும் என்பர் .,
பலருக்கு சில அறிவியல் உண்மைகள் தெரியாமல் இருப்பதால் ,
அந்த அறியாமையை பயன்படுத்தி ,
அதனை மூலதனம் ஆக்கும் மருத்துவ முகமூடிகள் இங்கு மிக அதிகம் .,
நான் என்னுடைய நோயாளிகளுக்கு பல முறை சொல்லும் வி்ளக்கம் இதுதான்
நம்மூரில் எவரும்
வருமான வரி பற்றிய சந்தேகங்களுக்கு போகும் போக்கில் விளக்கம் தர மாட்டார்கள்
ஐ.எச்.ஆர்.ஓ அடுத்ததாக களமிறக்கபோகும் ககன்யான் விண்வெளி ஏவுகணை பற்றி எதுவும் பேச மாட்டார்கள்.,
பங்குசந்தை வர்த்தகம் , இன்றைய சென்சக்ஸ் , இன்றைய மியூச்சுவல் ஃபண்ட் இக்விட்டி பற்றி கேளுங்கள் ,
அதெல்லாம் தெரியாது பா என்பார்கள்
ஆனால்.
சர்க்கரை நோய்க்கு என்ன செய்யலாம் ?
தைராய்டுக்கு என்ன சாப்பிடலாம் ?
மூல வியாதிக்கு என்ன மருந்து என சும்மா கேட்டு பாருங்கள்
ஆட்டோ ஓட்டுணர் ,
முடி திருத்தம் செய்யும் நபர் ,
பால்காரர் ,
பேப்பர் காரர்
போஸ்ட் மேன் ,
மளிகை கடை அண்ணன் என ஒவ்வருவரும் ஒவ்வொரு வைத்திய முறைகளை அள்ளி வீசுவர் .,
அதற்கான சான்றும் சொல்வார்கள் .!!
இதுதான் கடந்த பல ஆண்டுகளாக மனித இனத்தை நோய்ப்பிடியில் இருந்து இறுக்கமாக அணைத்து வைத்திருக்கும் கனமான சரடு .,
மருத்துவர்களை தவிர அனைவருமே மருத்துவ அறிவுரை சொல்ல ஆரம்பித்ததன் விளைவு ,
நோயின் கடைசி முற்றிய நேரத்தில் மருத்துவம் நாடும் அவலம் நம் நாட்டில் மிக அதிகம் .,
நோய் அறிவியல் என்பது சாதாரண விடயம் அல்ல.,
அதனை அறியாது நலம் பேண நினைப்பது நிச்சயமாக மூடத்தனம் .,
நோய் அறிவியல்
நவீன மருத்துவ அறிவியலுக்கு தான் அடங்கும் என்பது நியதி.
நன்றி
மீண்டும் சந்திப்போம்.!