Venad Health care & Charitable trust

Venad Health care & Charitable trust We at Venad Healthcare & Charitable trust focus on providing both physical and mental well being to the people for whom it is not reached yet.

Venad Healthcare & Charitable Trust சார்பாக ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் துணிகள் Round Table - Nagercoil குழுவினர் மற்ற...
26/09/2024

Venad Healthcare & Charitable Trust சார்பாக ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் துணிகள் Round Table - Nagercoil குழுவினர் மற்றும் சில தன்னார்வலர்கள் பங்களிப்பில் இன்று வழங்கப்பட்டன.

15/05/2024
From the free Medical camp conducted on 12/05/2024
13/05/2024

From the free Medical camp conducted on 12/05/2024

Free medical camp on 12/05/2024
10/05/2024

Free medical camp on 12/05/2024

வேணாடு ஹெல்த்கேர் & சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் ஆஜேஎம் பவுண்டேசன், ஆராவமுது உணவகம் உடன்  இணைந்து நடத்திய மாபெரும்  இலவச ...
05/02/2024

வேணாடு ஹெல்த்கேர் & சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் ஆஜேஎம் பவுண்டேசன், ஆராவமுது உணவகம் உடன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவமுகாம் நாவல்காடு ஏவிஎம் சமூக நலக்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை நாவல்காடு ஆர்.சி. ஆலய பங்குத்தந்தை சிறப்புரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார். ஏஜேஎம் பவுண்டேசன் ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் மற்றும் வேணாடு ஹெல்த்கேர் & சேரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் பிரவீன் ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏஜேஎம் பவுண்டேசன் ஆலோசகர் அனிட்டர் ஆல்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பெஜான்சிங் கண் மருத்துவமனை , பென்சாம் மருத்துவமனை மற்றும் டேவிட் பல் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டு கண், பல், காய்ச்சல், நீரிழிவு பரிசோதனைகள், கை, கால், மூட்டு வலி உட்பட பல நோய்களுக்கு இலவச சிகிச்சைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். இந்த இலவச மருத்துவமுகாம் மூலம் அந்தப்பகுதி சுற்றுவட்டார பொதுமக்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இலவசமாக மருந்துகளும் சலுகை விலையில் கண்கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. பெஞ்சமின், கரிகாலன், கண்ணதாசன், ஜெயன், சதீஷ்குமார், சசிகுமார், ரூபன், மணிகண்டன், சேகர் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Free medical camp on 04/02/2024..
31/01/2024

Free medical camp on 04/02/2024..

ஏ ஜே எம் பவுண்டேசன் மற்றும் வேணாடு ஹெல்த்கேர் & சேரிட்டபிள் டிரஸ்ட், புத்தேரி பாறையடி இளைஞர்கள் மற்றும் ஆராவமுது உணவகம் ...
03/12/2023

ஏ ஜே எம் பவுண்டேசன் மற்றும் வேணாடு ஹெல்த்கேர் & சேரிட்டபிள் டிரஸ்ட், புத்தேரி பாறையடி இளைஞர்கள் மற்றும் ஆராவமுது உணவகம் ஆகியோர் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நாகர்கோவில் பாறையடி புத்தேரி அருகில் உள்ள சாம்பவர் சமுதாய நலக்கூடம் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. மருத்துவ முகாமிற்கு ஏ.ஜே.எம். பவுண்டேசன் கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் மற்றும் வேணாடு ஹெல்த்கேர் & சேரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் பிரவீன் ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். நாகர்கோவில் நீதிமன்ற வழக்கறிஞர் அனிட்டர் ஆல்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பெஜான்சிங் கண் மருத்துவமனை, பென்சாம் மருத்துவமனை மற்றும் டேவிட் பல் மருத்துவமனை மருத்துவர்கள் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். கண்பார்வை குறைபாடு, பல் பிரச்சினைகள், சளி, இருமல், காய்ச்சல், இரத்த அழுத்தம், இதய பரிசோதனை மற்றும் நீரிழிவு பரிசோதனைகள் ஆகியவற்றிற்கு இம்முகாமில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாமில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர். நிர்வாகிகள் ஜான், பெஞ்சமின், ஆனி, ஜெயந்த், சமூக ஆர்வலர்கள் கண்ணதாசன், சதீஷ்குமார், கரிகாலன், அனீஷ் குமார், மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Free medical camp on 03/12/2023..
02/12/2023

Free medical camp on 03/12/2023..

தினத் தந்தி 18.10.2023...
21/10/2023

தினத் தந்தி 18.10.2023...

இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயதே ஆன கல்லூரி மாணவர் இசக்கிராஜ் அவர்களுக்கு அறு...
17/10/2023

இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயதே ஆன கல்லூரி மாணவர் இசக்கிராஜ் அவர்களுக்கு அறுவைச்சிகிச்சை செலவுக்காக கன்னியாகுமரி மாவட்டம் வேணாடு ஹெல்த்கேர் சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக சிறு பங்களிப்பு தொகை காசோலையாக 17/10/2023 அன்று வழங்கப்பட்டது.....

வேணாடு ஹெல்த்கேர் & சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் AJM பவுண்டேசன்   ஆகியோர் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நாகர்கோவில...
16/10/2023

வேணாடு ஹெல்த்கேர் & சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் AJM பவுண்டேசன் ஆகியோர் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நாகர்கோவில் வடசேரி RC பரதர் தெருவில் உள்ள புனித வியாகப்பர் சமூக நலக்கூடம் அரங்கத்தில் நடைபெற்றது. மருத்துவ முகாமிற்கு AJM பவுண்டேசன் கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் மற்றும் வேணாடு ஹெல்த்கேர் & சேரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் பிரவீன் ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். நாகர்கோவில் நீதிமன்ற வழக்கறிஞர் அனிட்டர் ஆல்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பெஜான்சிங் கண் மருத்துவமனை, பென்சாம் மருத்துவமனை மற்றும் டேவிட் பல் மருத்துவமனை மருத்துவர்கள் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். கண்பார்வை குறைபாடு, பல் பிரச்சினைகள், சளி, இருமல், காய்ச்சல், இரத்த அழுத்தம், இதய பரிசோதனை மற்றும் நீரிழிவு பரிசோதனைகள் ஆகியவற்றிற்கு இம்முகாமில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாமில் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர். நிர்வாகிகள் ஜான், பெஞ்சமின், ஆனி, ஜெயந்த், சமூக ஆர்வலர்கள் கண்ணதாசன், சதீஷ்குமார், கரிகாலன், ரூபன் மற்றும் சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேணாடு ஹெல்த்கேர் சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும்  AJM பவுண்டேசன் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் வருகின்ற 15...
10/10/2023

வேணாடு ஹெல்த்கேர் சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் AJM பவுண்டேசன் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் வருகின்ற 15/10/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள புனித வியாகப்பர் சமூக நலக்கூடத்தில் வைத்து நடைபெறும். கண், பல் மற்றும் பொது மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும். மேலும் சிகிச்சை பெறும் பொதுமக்களுக்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்படும்.



Free medical camp on 15/10/2023....

Address

Nagercoil
629001

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Telephone

+919043381966

Website

Alerts

Be the first to know and let us send you an email when Venad Health care & Charitable trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Venad Health care & Charitable trust:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram