03/08/2018
Dr.பிமல் ராஜ் MBBS., DNB., DM., F.Med., MBA.,
நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர்
நமது மருத்துவரைப் பற்றி...
டாக்டர்.பிமல் ராஜ் கடின உழைப்பாலும் சுயமுற்சியாலும் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றவர். இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் M.B.B.S., பட்டப்படிப்பும், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மூன்று வருட D.N.B., [Post Graduate] முதுநிலை பட்டப்படிப்பும், புதுடெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் நுரையீரல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் முனைவர் பட்டப்படிப்பும் [DM Doctorate] முடித்தவர் ஆவார். நுரையீரல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் முனைவர் பட்டப்படிப்பு [DM Doctorate] என்பது மிகவும் அரிதானது. தமிழ் நாட்டில் இதுவரை மொத்தம் எட்டு மருத்துவர்கள் மட்டுமே இந்த பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தென் மாவட்டங்களில் [மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி & கன்னியாகுமரி] இந்தப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர் ஒருவரே.
மேலும் உலகின் தலைசிறந்த மற்றும் பழமையான பல்கலைக்கழகங்களாக கருதப்படும் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு [Harvard] மற்றும் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் [Cambridge] பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றவர். இவரது மருத்துவ ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் அமெரிக்காவில் காப்புரிமைக்காக [Patent] விண்ணப்பிக்க பட்டுள்ளது. இவரது சாதனைகளைப் பாராட்டி இங்கிலாந்து அரசு இவருக்கு சர்வதேச விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.