
10/07/2025
*பௌர்ணமி சிறப்பு தியானம்*
ஆத்மாக்களின் சங்கமத்தில் பயணிக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் வணக்கம்... 🙏
இன்று *(10.07.2025) வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு சிறப்பு பௌர்ணமி தியானம்** நடைபெற உள்ளது.
🌸 *முற்றிலும் இலவசம்* 🌸
அனைவரும் கலந்து கொள்ளுங்கள் ஸ்ரீ!
பௌர்ணமி தியானத்தின் தத்துவம்:
🪷 பௌர்ணமி நாளன்று சந்திரனின் தாக்கம் பூமியின் மீது அதிகமாக விழுகிறது.
🪷 சந்திரன் உயிர்களின் மீது பலவிதமான தன்மைகளையும் சக்திகளையும் உருவாக்குகிறது.
🪷 சந்திரன் நம் உடலில் ரத்தத்தோடும் நம் மனதோடும் தொடர்புடைய கோள். எனவே ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனை மனோகாரகன் என்று அழைப்பர்.
🪷 வளர்ச்சியை நோக்கி வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இந்நாள் உகந்த நாள்.
🪷 சந்திரனின் ஆகர்ஷ சக்தி ஆனது பௌர்ணமி நாளன்று உலக உயிர்களை மேல் நோக்கி இழுக்கப்படுகிறது.
🪷 இதனால் அந்நாளில் மகா சமுத்திரமும் கொந்தளிப்பு ஏற்படுவதை நாம் அறிந்திருப்போம்.
🪷 இதேபோல் நம் உடலில் ரத்த ஓட்டமும் மூளை நோக்கி இழுக்கப்படுகிறது.
🪷 இதனால் நாம் எவ்வகையான உணர்வுகளில் இருக்கின்றோமோ அவ் உணர்வுகள் அதிகமாக தூண்டப்படுகிறது.
🪷 உதாரணமாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அன்றைய நாளில் அதிகமாக உணர்ச்சி வயப்படுவதை நாம் கண்டிருப்போம்.
🪷 இதை உணர்ந்த நம் முன்னோர்கள் இந்நாளின் சக்தியை ஆன்ம வளர்ச்சிக்காக பயன்படுத்தும் விதமாக வழிபாட்டுக்குரிய நாளாக அமைத்தனர்.
🪷 பௌர்ணமி நாள் பெண் தன்மை வாய்ந்ததால் அம்பாள் வழிபாடு அதிகமாக செய்யப்பட்டது.
🪷 பௌர்ணமி தியானத்தின் போது மனம் நுண்ணிய அலைச்சூழலில் சந்திரனின் சக்தியை கிரகிக்கும் பொழுது அவை உடல் செல்கள் மற்றும் மூளை செல்களில் குழுமையையும் அமைதியையும் ஏற்படுத்தி பரவசநிலைக்கு நம்மை இழுத்துச் செல்கிறது.
🪷 இந்நிலையை நாம் அடையும் பொழுது அந்த உணர்வில் இருக்கக்கூடிய சித்தர்கள் அவரவர் குருமார்கள் இஷ்ட தெய்வங்கள் என அனைவரின் தரிசனமும் ஆசிர்வாதமும் கிடைக்கப்பெறுகிறது.
🪷 இத்தகைய தரிசனங்கள் மூலம் நம் வாழ்க்கை அருளும் பொருளும் நிறைந்ததாக வளர்ச்சியடைகிறது.
🪷 எனவே இதாதியானத்தில் மகிமையை உணர்ந்து தியானத்தோடு ஒன்று கலந்து உயிர்க்கலப்பு பெறுவோம்.
தியானத்தில் கலந்து கொள்ள *விருப்பமுள்ள ஆத்மாக்கள்* கீழே உள்ள link கை கிளிக் செய்யவும் 👇👇👇
https://meet.google.com/fqj-mycj-iop
நன்றி ஆத்மாக்களே !🙏🙏🙏🙏🙏🙏🙏