27/03/2026
⚫⚪⚫1929-வது நாளின் காலைத்தியானம் .... 28/03/2026 !!!
இந்தக் காலைவேளையில், "இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்" ...... "I CONSIDER THAT OUR PRESENT SUFFERINGS ARE NOT WORTH
COMPARING WITH THE GLORY THAT WILL BE REVEALED IN US” என்று (ROMANS) ரோமர் 8:18-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.
தங்கள் வாழ்க்கைப் பாதையில், பாடுகளை ஒருவரும் விரும்புவதில்லை. ஆனால், பாடுகள் இல்லாத மனிதர் யாருமில்லை. பாடுகளின் பின்னால் ஏதோ நன்மையான ஒன்று இருக்கத்தான் செய்கிறது.
வேதத்திலே தங்கள் வாழ்க்கையில் சாதனைகளைப் படைத்த தேவமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், இந்த உயர்வை எட்ட அவர்கள் பட்ட பாடுகள் விரிவாக கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.
ஆம், 2 கொரிந்தியர் 4:17-ல் “மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது” என்று வாசிக்கிறோம்.
இந்த பூமிக்குரிய துன்பங்கள் தற்காலிகமானவை. தேவன் வெளிப்படுத்தப்போகும் பரலோக மகிமை நித்தியமானது. உலக பாடுகளுக்கும், பரலோக மகிமைக்கும் எந்தவித ஒப்பீடும் இல்லை.
ஆகவே, 1 பேதுரு 4:13-ல் கூறப்பட்டபடி “கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்”
எனவே பிரியமானவர்களே, நம் வாழ்க்கையில் கடந்து வருகிற பாடுகளையும் உபத்திரவங்களையும் கண்டு சோர்ந்து போகாதிருப்போம். நிச்சயமாகவே நித்திய மகிமையைப் பெற்று அனுபவிப்போம்.
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, இக்காலத்துப் பாடுகள் இனி எங்களில் வெளிப்படும் மகிமையான வாழ்வுக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.
ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும் 24/7 - 9967228488.
7400472200 WhatsApp
Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India.