Neyveli Lignite Corporation

Neyveli Lignite Corporation THE LIGNITE LEGEND OF TAMIL NADU

A CHRONOLOGY

It is a long history with lots of efforts behind the birth of baby of Coal family, the fossil fuel, "LIGNI

https://youtu.be/iuIrCbnuAUs?feature=shared
15/12/2024

https://youtu.be/iuIrCbnuAUs?feature=shared

கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி மற்றும் ஐ.டி.பி.சி.எல் அனல்மின் நிலையங்கள் மற்றும் சுரங்க....

09/03/2023
உலகம் முழுவதும் நிலக்கரியை வைத்து மின்சாரத் தயாரிப்பை விடவேண்டும் என்கிற கோரிக்கைகள் அதிகமாகி வருகின்றன. பல நாடுகள் புதி...
06/03/2023

உலகம் முழுவதும் நிலக்கரியை வைத்து மின்சாரத் தயாரிப்பை விடவேண்டும் என்கிற கோரிக்கைகள் அதிகமாகி வருகின்றன. பல நாடுகள் புதிதாக அனல் மின்நிலையங்களை அமைக்க மாட்டோம் என்றும், செயல்படும் நிலையங்களும் படிப்படியாக மூடப்படும் என்றும் அறிவித்துவிட்டன. தமிழ்நாடும் புதிதாக அனல் மின்நிலையங்களை அமைக்கப்போவதில்லை என்று அறிவித்துவிட்டது. இப்பின்னணியில் சூழலை மிகமோசமாக மாசுபடுத்தும் “பழுப்புநிலக்கரிக்கென புதிதாக சுரங்கம் அமைக்க முயல்வது அறிவிற் சிறந்த செயலாகாது. என்எல்சி போன்ற நிறுவனங்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ளவேண்டும். அந்திமகாலத்தில் உள்ள தொழில்நுட்பங்களை கைவிட்டுவிட்டு புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களை கையில் எடுக்க வேண்டும். குவிக்கப்பட்ட மின்னுற்பத்தியிலிருந்து பரந்துபட்ட உற்பத்தியை நோக்கிப்போவதுதான் என்எல்சி போன்ற நிறுவனங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும், இல்லையேல் காலம் அந்நிறுவனங்களை அகற்றிவிட்டு முன்னோக்கிச் சென்றுவிடும். நெய்வேலியில் இரண்டாவது சுரங்க விரிவாக்கம், மூன்றாவது சுரங்கம் அமைப்பது கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு மட்டும் பாதிப்பல்ல, சென்னைக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். சென்னைக்கான குடிநீர் வீரணத்தை நம்பி உள்ளது. வீராணம் என்றால் அந்த நீர்நிலையில் தண்ணீர் இல்லாதபோதும் பல ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு சென்னையின் தாகம் தீர்க்கப்படுகிறது. சிறந்த ஆர்டீசன் ஊற்றுகள் இருந்த அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் ஏற்கெனவே நெய்வேலி சுரங்கப்பணிகளால் அதிகமான ஆழத்திற்குச் சென்றுவிட்டது. இந்த நிலையில் புதிதாக சுரங்கம் அமைந்தால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாதிப்படையும், ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர நேரிடும். எனவே இத்திட்டத்தைக் கைவிடும் படியும், நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்றும் தமிழ்நாடு மற்றும் ஒன்றிய அரசைக் கோருகிறோம்.

நிலத்துக்கு நாங்க அல்லாட..உங்களுக்கு குத்தாட்டம் கேட்குதோ! நள்ளிரவு ஆபாச நடனம்! எல்லை மீறிய என்எல்சி.என்.எல்.சி.க்காக நி...
07/12/2022

நிலத்துக்கு நாங்க அல்லாட..உங்களுக்கு குத்தாட்டம் கேட்குதோ! நள்ளிரவு ஆபாச நடனம்! எல்லை மீறிய என்எல்சி.

என்.எல்.சி.க்காக நிலம் கொடுத்த மக்களுக்கு வேலை வழங்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், அரைகுறை ஆடையுடன் பெண்கள் சிலர் சுரங்கம் அருகே குத்தாட்டம் போட்ட ஆடல் பாடல் வீடியோ காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது

64 ஆண்டுகளுக்கு மேலாக என்எல்சி நிறுவனம் கடலூர் மாவட்ட மண்ணையும் மக்களையும் ஏமாற்றி பழுப்பு நிலக்கரியை எடுத்து வருகிறது. ஒரு காலத்தில் தன்னூத்தாக இருந்த கடலூர் மாவட்டத்தின் நீர்மட்டம் 8000 அடிக்கும் கீழே சென்று விட்டதாக புகார் கூறப்படுகிறது.

என்எல்சி நிறுவனம் தொடர்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சியதால் தற்போது கடலூர் மாவட்டத்தையே பாலைவனமாக மாற்றி விட்டது. இதற்கு முழு காரணமும் என்எல்சி தான். நிலம் கொடுத்த மக்களுக்கு என்எல்சி நிறுவனம் வேலை வழங்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த கரிவெட்டி கிராமத்திற்கு என்எல்சி அதிகாரிகள் நிலம் மனை அளவீடு செய்ய வருகை தந்தனர். இதனை அறிந்த கிராம மக்கள், கிராம எல்லையில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து, ஊருக்குள் விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் பொதுமக்களுடன் என்எல்சி அதிகாரிகளுக்கு, எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆடல் பாடல்

தற்போதைய சூழ்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் நிலம் மற்றும் வீடுகளை இழந்த கடலூர் மாவட்ட மக்கள் கொந்தளிப்பில் இருக்கும் நிலையில் தற்போது போராட்டம் தீவிரமடைந்து இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளும் களமிறங்கி இருக்கின்றன. இந்த நிலையில் கடலூர் என்எல்சி சுரங்கம் அருகே விதிமுறைகளை மீறி அதிகாரி ஒருவருக்காக ஆடல் பாடல் குத்தாட்டம் என கொண்டாட்டங்கள் நடைபெற்றது கடலூர் மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

பிரிவு உபச்சார விழா
சண்டிகரைச் சேர்ந்த ராகேஷ் குமார் என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு என்எல்சி நிதித்துறை இயக்குனராக பணியில் சேர்ந்து இருக்கிறார். 2019 ஆம் ஆண்டு பணி உயர்வு பெற்ற அவர் இந்த ஆண்டு இறுதியில் பணி ஓய்வு பெற இருக்கிறார். இதை அடுத்து அவருக்கு பிரிவு உபச்சார விழா வழங்க திட்டமிட்ட அதிகாரிகள் சிலர் உற்சாக குத்தாட்ட விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கின்றார். அரைகுறை ஆடையுடன் பெண்கள் சிலர் குத்தாட்டம் போட்ட ஆடல் பாடல் வீடியோ காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஆபாச நடனமாடும் பெண்களை அதிகாரிகள் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பதை கண்ட கடலூர் மக்கள் கடும் கோபத்திற்குள்ளாகி இருக்கின்றனர்.

கடும் நடவடிக்கை
நிலத்தையும் கொடுத்து வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாங்கள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க அதிகாரிகளுக்கு குத்தாட்டம் கேட்கிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது நிரந்தர வேலை இன்றி நிலத்திற்காக நாங்கள் போராடிவரும் நிலையில் வடமாநில அதிகாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இந்தி பாடல்களும் குத்தாட்டமும் கேட்கிறதா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ள அப்பகுதி வாசிகள் தொழிலக விதிமுறைகளை மீறி குத்தாட்டம் நடத்திய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சரியாக முடிவெடுக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் மத்திய  மாநில அரசு வேலைவாய்ப்புகளில் இவர்கள்தான்.சிந்திப்பீர் வாக்களி...
06/04/2021

சரியாக முடிவெடுக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் மத்திய மாநில அரசு வேலைவாய்ப்புகளில் இவர்கள்தான்.
சிந்திப்பீர் வாக்களிப்பீர்

28/03/2020

'கொரோனா' முடக்கம்... .

Number of houses in Neyveli Township are kept in Quarantine. In order to extend helping hands to those families in supplying Vegetables and Medicines, it was suggested to form a volunteering team.
Volunteering Team will do the following activities :
Get the requirements from the respective residents once in a week.
Transmit the requirements to the consolidation team.
Consolidation Team will contact the vendors and get it

Next Day the packed item will be arranged to be dispatched to the respective houses.
Volunteers have to ensure that the ordered items reaches the residents.
Only e-Payments / app based payments are allowed. Payments will be made by the residents directly to the vendors.
Detailed modalities of working will be made available in due course.

Interested people may contact Mr. R.Jagadeesh @ 9940141270

14/09/2019





TRENDING. JOIN US.

1. இந்தியா முழுக்கக் கண்டிப்பாக ஒருமொழிதான் வேண்டுமென்றால், தமிழை வைத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு மறுப்பில்லை.

2. அதற்கு விருப்பமில்லையா, நல்லது, இந்தி பேசும் மாநிலங்களெல்லாம் சேர்ந்து 'ஒரே மொழி' பேசும் இந்தியாவாக இணைந்து கொள்ளுங்கள். வேறு மொழிகள் பேசும் நாங்களெல்லோரும் 'அவரவர் மொழி' பேசும் புதிய இந்தியாவாக இணைந்து கொள்கிறோம்.

02/06/2019

उत्तर भारत में ज्यादातर लोग तमिल नहीं जानते हैं। मैं बहुत हैरान हूं। भारत की सबसे पुरानी भाषा सीखे बिना, वे खुद को एक भारतीय कैसे कह सकते हैं कि वह मूर्खतापूर्ण कैसे हो? जब केवल तमिल भाषा को जानने वाला राज्य बड़ा हो जाता है, तो शेष भारत को तमिल भाषा के माध्यम से आगे बढ़ने दें
.

In justice happening to Tamilnadu. NLC established in 1962 in neyveli is a huge lignite based thermal power station. Emp...
08/03/2019

In justice happening to Tamilnadu.

NLC established in 1962 in neyveli is a huge lignite based thermal power station. Employment was promised to many whose lands were taken for the project and local people whose livelihoods were lost.

Like Railways, income tax department, postal department, instead of directly appointing people from North India ( bimaru states) for NLC a unique system has been introduced. All appointments are made in Rajasthan and transfered to neyveli which looks like a regular transfer.

Another unique way to use TamilNadu and it's resources for Hindia.

According to the NLC employees this has reached alarming proportions since 2014.

I kindly request Mr H.Raja, Mrs.Tamilisiai, Mr.S.V.Sekar,Mr.Raghavan, to take this up and render justice to TamilNadu people.

Neyveli Lignite Corporation

நெய்வேலி - என்.எல்.சி ஒரு பார்வைநெய்வேலி கிராமத்தில் 1935 ல் ஜம்புலிங்க முதலியார் நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டும் பொழுத...
25/12/2018

நெய்வேலி - என்.எல்.சி ஒரு பார்வை

நெய்வேலி கிராமத்தில் 1935 ல் ஜம்புலிங்க முதலியார் நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டும் பொழுது கிணற்றிலிருந்து கருமையான பொருள் வெளிப்பட்டது.அதை அரசுக்கு அனுப்பி வைத்தார். அரசு நெய்வேலியை சுற்றிலும் உள்ள இடங்களில் ஆய்வு செய்து நிலத்தடியில் ஏராளமான நிலக்கரி படிவங்கள் இருப்பதை உறுதி செய்தது.
மத்திய அரசு 1956 ல் நிலக்கரியைத் தோண்டி எடுத்து மின்சாரம் தயாரிக்க என்.எல்.சி நிறுவன அமைப்பை ஏற்படுத்தியது

நிலக்கரி வெட்டி எடுக்கவும் என்.எல்.சி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டவும் அலுவலகங்கள் கட்டவும் கீழ்க்கண்ட கிராமங்கள் வெளியேற்றப்பட்டன. 1.வெள்ளையங்குப்பம் 2.பெருமாத்தூர் 3.வேலுடையான் பட்டு 4.கூரைபேட்டை(தாடிக்காரன் கூரைப்பேட்டை, வேதக்காரன் கூரைப்பேட்டை) 5.வெண்ணெய்குழி 6.தாண்டவங்குப்பம் 7.நெய்வேலி 8.கெங்கைகொண்டான் 9.பாப்பனம்பட்டு 10.வேப்பங்குறிச்சி 11.தெற்கு வெள்ளூர் 12.வடக்கு வெள்ளூர் 13.மூலக்குப்பம் 14.காரக்குப்பம் 15.ஆதண்டார்கொல்லை 16.மந்தாரக்குப்பம் 17.சாணாரப்பேட்டை 18.அத்திபட்டு 19.வினை சமுட்டிக்குப்பம் 20.தெற்கு மேலூர் 21.இளவரசன் பட்டு 22.விளாங்குளம் 23.நொடுத்தாங்குப்பம்
வெளியேற்றப்பட்ட கிராம மக்களுக்கு விருத்தாசலத்திற்கு வடக்கில் உள்ள விஜயமா நகரம் மற்றும் கிழக்கே உள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் மனைகள் வழங்கப்பட்டன.

1/12/1957ல் புதுக்கூரைப்பேட்டை கிராமம் அப்போதைய சென்னை முதலமைச்சர் திரு காமராசர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

புதுக்கூரைப்பேட்டை மற்றும் விஜயமானகர கிராம மக்கள் NLCயால் தாங்கள் இழந்த வாழ்வாதரத்தை மீட்டெடுக்க 50 வருடங்களுக்கு மேல் ஆனது.
குடிநீர், தெரு சாலை வசதி, மின் விளக்கு, பள்ளி, வேலைவாய்ப்பு ஏதுமின்றி மக்கள் பட்ட துயரங்கள் என்னற்றவை.

61வருடம் ஆகியும் இந்த கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்திற்கு இன்னும் அரசு நிலப் பட்டா வழங்கவில்லை. எத்தனையோ முறையீடுகள் எத்தனையோ போராட்டங்கள் பயனில்லை. NLC நிர்வாகம் இந்த ஊருக்கு செய்ய வேண்டிய அத்தியாவசிய கட்டமைப்புகளான குடிநீர், தெரு சாலை, மின் விளக்கு, பள்ளி கட்டிடம் , கோவில் போண்ற எந்த ஒரு மேம்பாட்டிற்கும் நிதி ஒதுக்காமல் மக்களை ஏமாற்றி வருகிறது.

எத்தனையோ கிராமங்கள் NLCயில் வெட்டி எடுக்கப்பட்ட மண்ணால் மூடப்பட்டு மண்மேட்டிற்கு அடியிலும், வெட்டப்பட்ட சுறங்க குழியிலும் புதைந்து விட்டன.
அங்கு வாழ்ந்த மக்கள் அவரவர் தொழிலுக்கு ஏற்ப வசதிக்கேற்ப மற்ற ஊர்களுக்கு இடம் பெயர்ந்தனர். சொந்த நாட்டிலேயே மக்கள் நாடோடிகளாகவும் அகதிகலாகவும் ஆக்கப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில் மத்திய மாநில அரசு NLC நிர்வாகம் இன்னும் என்னற்ற கிராம மக்களை அகதிகளாக்க துடிக்கிறது...

இவன்
NLCக்கு பல ஏக்கர் நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட கூரைபேட்டை(தாடிக்காரன் கூரைப்பேட்டை, வேதக்காரன் கூரைப்பேட்டை) கிராமத்தை சர்ந்த தாடிக்காரன்

NLC-to-invest-Rs-1290-bn-to-ramp-up-mining-power-generation-capacityNLC India Limited plans to invest Rs 1,290 billion t...
29/10/2018

NLC-to-invest-Rs-1290-bn-to-ramp-up-mining-power-generation-capacity
NLC India Limited plans to invest Rs 1,290 billion to add new production capacity in mining and power generation by 2025. The company, which traditionally focused on lignite and coal-based power, also plans to set up renewable energy projects which can generate power up to 4251 Mw.

The total power-producing capacity of NLC, earlier known as Neyveli Lignite Corporation, is expected to go up from 4,731 MW as on June 30, 2018, to 21,011 MW with an addition of 16,280 MW by 2025, from various sources of power generation, according to the company. The plan also includes the investments it would make through subsidiaries and joint ventures.

By 2025, the company plans to double the lignite-based power from the current 3,240 MW capacity with the addition of another 3,540 MW, while the coal-based power generation would be increased multifold, from the 1,000 MW as on the end of June, this year, with another 5,980 MW.

The renewable sector would see a major investment, as the capacity is expected to go up from 491 MW as on June, with an addition of 3,760 MW by 2025. The company would also look at acquiring power assets to add capacities to the tune of around 3,000 MW during the period.

In terms of the medium-term plan, NLC plans to ramp up the capacity by 6,660 MW, mainly through the acquisition of power assets to the tune of around 3,000 MW and increasing the renewable business to 2,760 MW. However, lignite-based power production will add a meagre 900 MW and no new capacity will be added in the coal-based power facilities during the period.

At present, the company is working on four lignite projects to add 8.55 MW. With an investment of around Rs 17.45 billion, all of these projects are expected to be completed on or before September 2019. Two upcoming projects in lignite - Palayamkottai and Vellar and the third mine in Neyveli - would add 11.5 MT capacity each, with an investment of around Rs 108.72 billion in March 2022 and March 2021 respectively.

In terms of coal projects, two coal blocks - Talabira II and III and South Pachwara, are expected to come up with 20 and 11 MW capacity with an investment of Rs 24.01 billion and 17.95 billion, respectively.

The ongoing and upcoming projects in the lignite power production are expected to be around 3,540 MW with an investment of around Rs 283.72 billion. In the coal-based thermal power stations, it is expected to add around 5,980 MW with a total investment of around Rs 521.72 billion. In Tamil Nadu, 3560 MW of renewable energy, including solar systems of around 909 MW, are to be added.

The company would spend Rs 160.95 billion for the completion of the projects, the last one scheduled to be executed in September 2020.

The company has been rated as the highest by various credit rating agencies. Its outstanding loans has grown to Rs 87.20 billion during the year 2017-18 compared to Rs 69.59 billion during the previous year. It has employed Rs 151.98 billion capital during 2017-18, as against Rs 125.01 billion during the previous financial year.

'என்.எல்.சி குவித்து வைத்திருக்கும் மணலால் விவசாயம் பாதிக்கிறது' - கொதிக்கும் விவசாயிகள்   http://bit.ly/2CvTe0Dhttps://...
07/10/2018

'என்.எல்.சி குவித்து வைத்திருக்கும் மணலால் விவசாயம் பாதிக்கிறது' - கொதிக்கும் விவசாயிகள்

http://bit.ly/2CvTe0Dhttps://www.facebook.com/189960617729403/posts/2158058744252904/

'என்.எல்.சி குவித்து வைத்திருக்கும் மணலால் விவசாயம் பாதிக்கிறது' - கொதிக்கும் விவசாயிகள்

http://bit.ly/2CvTe0D

For  .
24/08/2018

For .

India mourns . End of an era in dravidan politics 😢. RIP
07/08/2018

India mourns . End of an era in dravidan politics 😢. RIP

வடபுலத்து ஆரியனை வீழ்த்தவந்துதித்த ஆதவனே  நீதான்..தென்புலத்து திராவிடரின் வாழ்வை..திசையறிந்து செலுத்தியவனும்  நீயே..உனது...
06/08/2018

வடபுலத்து ஆரியனை வீழ்த்த
வந்துதித்த ஆதவனே நீதான்..
தென்புலத்து திராவிடரின் வாழ்வை..
திசையறிந்து செலுத்தியவனும் நீயே..
உனது பாத சுவட்டில் தமிழினம் வாழும்
உனது பெயரை உரக்க சொல்லி பாடும்..!

29/04/2018

Now We Opened(25/04/2018) Our First GENERIC MEDICAL SHOP @ NEYVELI TOWNSHIP- All are Welcome.
(மக்கள் மருந்தகம் )
Door no :10A.MAINBAZAR ,
BLOCK -12,NEYVELI-3
phone :7010905848,9688517474

மக்களுக்கு உண்ணத நோக்கத்துடன் தரமான மருந்துகள் மிக குறைந்த விலையில் மத்திய அரசு அனுமதியுடன் JAN AUSHADHI MEDICAL STORE Generic Medical Shop துவங்கியுள்ளோம். இதை NEYVELI மக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் அணைத்து வகையான ஆங்கில மருந்துகளும் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும் .

உதாரணமாக :
இதய நோயாளிகளுக்கு :
மாதம் : ரூ.1500 மருந்து வாங்குபவர்களுக்கு
நம் மத்திய அரசு மருந்தகத்தில்
ரூ:150 மட்டுமே ஆகும்..

மருந்துக்கு தொடர்பு:7010905848,9688517474


மிகவும் முக்கியம்......

மருந்து விலைப் பட்டியல் பற்றி அறிய கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்றவும்.........

(1) "1MG Health App For India" என்பதை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்யவும்.

(2) மருந்து பெயரை தேடவும்...........

(3) பயன்படுத்தும் மருந்து தேடவும்.

(உதாரணம்...லிரிகா 75 மில்லி கிராம்) (பிபிசர் கம்பெனி).......

(4) கம்பெனி பெயர், மருந்து பெயர், விலை,கலந்துள்ள வேதிப் பொருட்கள் முதலிய விபரம் பற்றி அறியலாம்.

(5) Substitute என்பதை க்ளிக் செய்யவும்.......

(6) அதே மருந்துகள் மிக குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப் படுவீர்கள்.....

(உதாரணம்.லிரிகா என்ற மருந்து பதினான்கு மாத்திரை 768.56 ரூபாய்க்கு கிடைக்கிறது.

ஒரு மாத்திரை ரூ.54.89. ஆனால் அதே மாத்திரை Prebaxe என்ற பெயரில் சிப்லா என்ற கம்பெனி பத்து மாத்திரை 59 ரூபாய்க்கு தருகிறது.

ஒரு மாத்திரை ரூ.5.90 மட்டுமே......
EX
1 GLYCOMET GP 1. - 10 மாத்திரை விலை ₹7
2 GLYCOMET GP 2 -10 மாத்திரை விலை ₹12
3 GEMER 2 - 10 மாத்திரை விலை ₹12
4 ATORVA 10. -10 மாத்திரை விலை ₹5
5 ATORVA 20. - 10 மாத்திரை விலை ₹10
6 GLYCINORM M80- 15மாத்திரை விலை ₹32
7 GULCORED FORT -10 மாத்திரை விலை ₹11
8 PAN D -10 மாத்திரை விலை ₹19
9 SHELCAL- 10 மாத்திரை விலை₹4
10 ATORLIP F- 15மாத்திரை விலை₹30
11

இதை DELETE செய்யாமல் FORWARD செய்யவும்.... உங்களது போன் புக்கில் உள்ள எல்லா நம்பருக்கும்...... அனைவரும் பயன் பெற

சுப்ரீம் கோர்ட் தலையிட்டு கவனம் செலுத்தி வருகிறது.........

உயிர் காக்கும் மருந்துகளை கிடைக்காமல் செயவதில் கம்பெனிகள் அக்கறை காட்டுகின்றன.

ஆனால் சாமானியனின் மருத்துவ தேவையை கவனத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் செயல்படுகிறது......

அன்புக்கு விலை இல்லை.....மற்ற குருப்பில் பதிவிடவும்.....
மற்றவர்க்கு உதவுவதே உருப்படியான காரியம்...

( டோர் டெலிவரி மற்றும் வெளியூர்களுக்கு கொரியர் சர்வீஸ் செய்யப்படும்) நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

- Sources forwarded from Sadha...

Address

Neyveli Lignite Corporation
Neyveli
607801

Website

Alerts

Be the first to know and let us send you an email when Neyveli Lignite Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share