08/12/2025
🫶
" தாய்க்கு பின் தாரம்" என்ற பழமொழி யாவரும் அறிந்ததே...
தாய்க்கு அடுத்ததாக எப்படி தாரத்தை வைத்துள்ளார்கள்? ஏன் தங்கை, அக்காவை வைக்கவில்லை? ஏன் அப்பா , அண்ணன், தம்பியை வைக்கவில்லை? என்று பலகாலம் எனக்குள் கேள்விகள் இருந்தது. அது தொடர்பாக யாரிடமும் கேட்க விரும்பவில்லை.
தாய்களுக்கெல்லாம் தாயான தேவியை வேண்டி என் சந்தேகம் கேட்க அம்மா அளித்த பதில் உங்கள் பார்வைக்கு. இது எம் தேவி தந்த தெரிவிப்பு. சரியான கருத்து வேறேதும் இருந்தால் தெரிவிக்கலாம்.
ஏற்கனவே நம்முடைய பிறவி என்பது நாம் இறந்த பின் மட்டும் நிகழ்வதில்லை. நாம் பெற்றெடுக்கும் குழந்தைகளே நாம்தான் என்று பதிவிட்டுள்ளேன். பிறந்த குழந்தை வேண்டுமானால் ஆண், பெண், பெயர்கள், உருவம் வேறுபட்டு இருக்கலாம். ஆனால் உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் இருப்பது நீங்கள்தான். உங்கள் பிறவி தான்.
உங்களை பெற்றெடுத்த தாயும், மீண்டும் உங்கள் மூலம் உங்களையே குழந்தை வடிவில் பெற்றுக்கொடுத்த மனைவியும் உங்களுக்கு தாயாகவே இருக்கிறாள்.
மேலோட்டமாக பார்த்தால் அம்மா செய்த வேலைகளை , அன்பை மனைவி வந்த பின்னர் மனைவி தருவார் என்பது போல இருக்கும். இங்கு யாரும் யாருக்கும் இணையாக முடியாது.
ஒவ்வொரு பிறவிக்கும் தனிச் சிறப்பு உண்டு. தாய் என்றால் தாய்தான். மனைவி என்றால் மனைவிதான். தாயால் கொல்லப்படும் குழந்தையும் உண்டு. குழந்தையால் கொல்லப்படும் தாயும் உண்டு. மனைவியால் கொல்லப்படும் கணவரும் உண்டு. கணவரால் கொல்லப்படும் மனைவியும் உண்டு.
எத்தனை உறவுகள் இருந்தாலும் உங்களுக்கு பிறவி தரும் இரண்டு உயிர் தாயும், மனைவியும் மட்டுமே. இந்த இருவரும் இரண்டு கண்கள். தூசு துரும்பு படாமல் காக்க வேண்டிய கடன் ஒவ்வொரு உயிருக்கும் உண்டு.
வாழ்க தாயும், மனைவியும்...
அன்புடன்,
கஞ்சமலையார்
கஞ்சகம் உணவு மருத்துவமனை,
ஓமலூர், சேலம் மாவட்டம்.