20/11/2022
புஷ்கரநவாம்சம் பற்றிய சில தகவல்கள்
வாழ்க்கையில் முதல் தர யோகம் எது என்று பார்த்தால் அடிப்படை சிறப்பாக அமைவது. அடிப்படை என்றால் குடும்ப செல்வ செழிப்பாக இருப்பது வசதியாக இருப்பது இப்படி இருந்து விட்டால் அடுத்த நிலையை நோக்கி பயணிக்க எந்த சிக்கலும் இருக்காது. ஒரு பொருளாதார பாதுகாப்பு இருக்கும்.
ஆனால் சிலர் தான் சுயமாக எதையும் செய்யும்போது சொந்த முயற்சியில் தனம் தேடுவது என்றால் போராட்டம் தான் ஒரு கட்டமைப்பை உருவாக்கவே வாழ்க்கையில் பெரும் பகுதியை செலவு செய்ய வேண்டும் அதில் வெற்றி பெறுபவர்களும் இருக்கிறார் தோல்வி பெற்றவர்களும் இருக்கிறார் ஆனால் வெற்றி தோல்வி எல்லாவற்றிற்கும் காரணம் என்ன.?
🌑கிரகங்கள்.தான் என்றால் அவர்களின் நிலையை ஜாதகத்தில் ஆராய வேண்டி இருக்கிறது சிலருக்கு வாழ்க்கை இயல்பாக யோகம் ஜாதகத்தில் இருக்கும் இயல்பு என்பதற்கு யோகமாக அமைந்த கிரகங்க சொல்லலாம் எண்ணற்ற யோகங்களை வரிசை கட்டி ஜோதிட விதிகளும் சொல்ல நாமும் அவற்றை யோகம் ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம் பலரும் பல யோகங்கள் இருந்தும் பயன் தரவில்லை என்ற கேள்வியை எழுப்புகின்றார்கள்.இதற்கு ஊழ்வினை பூர்வ புண்ணியம் என்று தான் பதிலாக தருகிறது ஜோதிட சித்தாந்தம்.
யோக அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தும் அந்த தசா புத்தி வராமல் போனாலும் அந்த யோகத்தால் எந்த பலனும் இல்லை சிலருக்கு யோகங்கள் குழந்தை வயதில் வருகிறது சிலருக்கு யோகம் இளமையில் வருகிறது சிலருக்கு முதுமை காலத்தில் யோகம் வருகிறது அவரவர் வாங்கி வந்த வரம்
சில ஜாதகங்களை பார்த்தால் பெரிதாக எந்த யோகமும் இருக்காது ஆனால் அவர்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் பின்னடைவு இல்லாமல் போய்க் கொண்டு இருக்கும் காரணம் என்ன ஆராய்வோம்
ஜோதிடத்தில் எத்தனையோ விதிகள் அதில் ஒன்றுதான் (புஷ்கர நவம்சம்). அதாவது ஜாதகத்தில் கிரகங்கள் எந்த நிலையில் இருந்தாலும்
(புஷ்கரநவாம்சத்தில்) இருந்து அந்த கிரகங்களின் தசா நடத்தால்
மிக பெரும் யோகங்களைத் தரும் என்பது அதன் விதி
உதாரணமாக தனுசு லக்னத்தில் பிறந்த ஒருவர் என்று எடுத்துகொள்வோம் தனுசு லக்னத்திற்கு 10 வீடா,னா கன்னி ராசி வருகிறது கன்னி ராசியின் அதிபன் புதன்
புதன் மீன ராசியில் நீச்சம் பெற்று இருக்கிறார் புதனும் வீடு கொடுத்த கிரகம் குருவும் மகரத்தில் நீச்சம் இருக்கிறார் 10 அதிபதி 4ல் நீசம் பெற்று
வீடு கொடுத்த லக்னாதிபதியும் நான்காம் அதிபதியும் குரு மகர ராசி நீசம் பெற்று கெட்டுப் போய்விட்டார்கள்
அப்படியானால் அவனுக்கான முன்னேற்றத்தில் தடை முயற்சிகளில் தோல்வி வருமான வாய்ப்புகளில் சிக்கல் தொழில்துறை பிரச்சனை வேலைவாய்ப்பில் சிக்கல் என பிரச்சனைகள் நிறைந்ததாகவே இருக்கும் என்றால் முடிவுக்கு வருவோம் ஜோதிட விதிகளும் அப்படித்தான் சொல்கிறது
ஆனால் இந்த ஜாதகர் பல ஆட்களை வைத்து வேலை செய்யும் முதலாளியாகவே அல்லது அரசு துறைகளில் உயர் பதவியில் இருக்கின்றார் என்றால் காரணம் என்ன??
இங்குதான் (புஷ்கர்நவம்சம்) வேலை செய்கிறது என்று பொருள் ஜனன ஜாதகத்தில் கிரகங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி புஷ்கரநாமம்சத்தில் இருந்து விட்டால் மாறான பலன்களை தரும் என்பது அதன் விதி இருந்தும் பலன்களை பார்ப்பதற்கு
ராசி கட்டம் மற்றுமே போதாது நவாம்சகட்டமும் பாதாச்சாரமும் வேண்டும் 9கிரகங்கள் மொத்தம் 27 நட்சத்திரங்கள் ஒவ்வொரு 🌓🌓கிரகங்களுக்கும் 3நட்சத்திரம். புஷ்கரமம் சத்தில் இடம்பெறாத நட்சத்திரங்கள்
கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி .மகம் .மூலம் .
செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிடம் .சித்திரை. அவிட்டம்.
புதனனின் நட்சத்திரமான ஆயில்யம் .கேட்டை .ரேவதி
ஆகிய நட்சத்திரங்கள் புஷ்கர் நவம்சத்தில் இடம் பெறுவது இல்லை மற்ற கிரகங்களின் நட்சத்திரங்கள் புஷ்கரநாமம்சத்தில் இடம்பெறும்
சூரியனின் நட்சத்திரம் 1 4 பாதங்கள் மட்டும் கார்த்திகை உத்திரம் உத்திராடம்
குருவின் நட்சத்திரம்2.4 பாதங்கள் மட்டும் புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
சனி நட்சத்திரம் 2பாதம் மட்டும் பூசம் அனுஷம் உத்திரட்டாதி
சந்திரனின் நட்சத்திரம2 பாதம் மட்டும் ரோகிணி அஸ்தம் திருவோணம்
சுக்ரனின் நட்சத்திரம் 3 பாதம் மட்டும் பரணி. பூரம் .பூராடம்
ராகுவின் நட்சத்திரம்4 பாதம் மட்டும் திருவாதிரை சுவாதி சதயம் ஆகியவைகள் புஷ்கரநவாம்சத்தில் இடம்பெறும்🙏
உங்கள் ❤️ ஜோதிடர் சதீஸ்.குமார்.கே
ஜோதிட ஆலோசனைகளுக்கு.9042607110