
14/09/2023
நமது ஊரில் வருடாந்திரம் நிகழும் ஜாத்திரை விழா நேற்று துவங்கியது.
இதையொட்டி இன்று மதியம் கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடந்தது.
மாலையில் பாடும்பறவைகள் இன்னிசை குழுவினரின் இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
ஜாத்திரை திருவிழா ஒட்டி ஊர் முழுதும் வேப்பிலை மற்றும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிகளை மிகவும் சிறப்பாக நடத்திய விழாக்குழுவினருக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.