கருப்பையா சித்த மருத்துவ மையம், பரமக்குடி

  • Home
  • India
  • Paramakudi
  • கருப்பையா சித்த மருத்துவ மையம், பரமக்குடி

கருப்பையா சித்த மருத்துவ மையம், பரமக்குடி உணவே மருந்து மருந்தே உணவு. சித்தர்கள?

30/04/2021
பெண்களின் கவனத்திற்கு...1. சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணம் என்ன?பெண்களின் கருத்தரிப்பு பிரச்னைக்கு, சினைப்பை நீர்க...
26/08/2019

பெண்களின் கவனத்திற்கு...

1. சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணம் என்ன?

பெண்களின் கருத்தரிப்பு பிரச்னைக்கு, சினைப்பை நீர்க்கட்டிகள் 30 சதவீதம் காரணமாகின்றன. உணவுப் பழக்கவழக்கம், சிறுவயது முதலே தரப்படும் அதிகமான ஊட்டச்சத்து, துரித உணவுகள், வாழ்வியல் மாற்றங்கள், வேலைப்பளு, மன அழுத்தம், பரம்பரை நோய், மரபணு குறைபாடு இவைகளே சினைப்பை நீர்க்கட்டிகளின் பெற்றோர்.

2. ஒழுங்கற்ற உணவுமுறை சினைப்பை கட்டிகளுக்கு காரணமாகுமா?

ஒழுங்கற்ற உணவுமுறை, ஹார்மோன் சுரப்பில் சிக்கலை உண்டாக்கி, சினைப்பை நீர்க்கட்டிகளை உருவாக்கும். இக்கட்டிகள் உருவாகிவிட்டால், ஆண் இன ஹார்மோன்கள் மிக அதிகமாக சுரக்கும். அதிலும் ‘டெஸ்டோஸ்டிரான்’ மிக அதிகமாக சுரக்கும். இதன் காரணமாக சினைமுட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது முற்றிலும் தடைபடும்.

3. நீரிழிவு நோய்க்கும் சினைப்பை கட்டிகளுக்கும் தொடர்புண்டா?

நிச்சயம் உண்டு. பெற்றோரில் யாரேனும் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கும் பட்சத்தில், அது டைப் 1, டைப் 2 எதுவாக இருந்தாலும், அவர்களின் பெண்ணுக்கு சர்க்கரை நோய்த் தாக்கத்துடன் இத்தகைய நீர்க்கட்டிகளின் தாக்கமும் இருக்கும். பிறப்பிலேயே, அவர்களுக்கு இன்சுலினுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி அமையப் பெற்றிருப்பதும் இதற்கு ஒரு காரணம்!

4. சினைப்பை கட்டிகளோடு, கருவும் உருவாகிவிட்டால் ஆபத்தா?

நிச்சயம் ஆபத்துதான்! கரு உருவாவதற்கு கரு முட்டைகள் அவசியம். ஆனால், கரு வளர்வதற்கு ஏற்ற இடம் கர்ப்பப்பை மட்டுமே! நெல்லிக்காய் அளவில் இருக்கும் சினைப்பையால் கரு வளர்ச்சியின் அழுத்தத்தை தாங்க முடியாது. ஒரு மாத கருவோ அல்லது இரு மாத கருவோ சினைப்பையில் இருந்து வெடித்துவிட்டால், தாய் உயிருக்கே ஆபத்து.

5. சினைப்பை கட்டிகள் எப்படி உருவாகிறது?

கர்ப்பப்பையின் வலது, இடது பக்கங்களில் நெல்லிக்காய் அளவில் முட்டை உற்பத்தி செய்யும் பகுதிதான் சினைப்பை. மாதவிடாய் முடிந்த ஒரு வாரத்தில் இருந்து, இந்த சினைப்பை பகுதியில் நீர்க்கட்டிகள் உற்பத்தியாகும். இரண்டாவது வாரத்தில், இவைகள் வெடித்து, கருமுட்டையை வெளியேற்றும். இம்முட்டைகள் கருக்குழாய் வழியாக கர்ப்பப்பையை அடையும். சில சமயங்களில், ஹார்மோன் சுரப்பிகளின் வேறுபாட்டால், இந்த நீர்க்கட்டி வெடிக்காமல் 25 செ.மீ.,க்கும் மேல் வளர்ந்து விடும்.

6. சினைப்பை கட்டிகளுக்கான சிகிச்சை முறைகள்?

15 வயது முதல் 25 வயது திருமணம் ஆகாத பெண் வரை ஹார்மோன் சிகிச்சை; குழந்தைப்பேறு இல்லாதவருக்கு நீர்க்கட்டி உடைந்து போக மருந்துகள்; குழந்தைகள் பெற்ற பெண் என்றால் மாதவிடாய் சீராக நடைபெற மாத்திரைகள் அல்லது கட்டியின் அளவைப் பொறுத்து சிகிச்சைகள்; கட்டிகளை நீக்க வேண்டும் என்றால், நுண்துளை அறுவை சிகிச்சை!

7. சினைப்பையில் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள்?

அபூர்வமாக பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வரும் அல்லது மாதவிடாய் சில மாதங்களுக்கு வராமலே இருக்கும். உடல் பருத்து விடும். முகத்தில் ரோமங்கள் முளைக்கும். தோலின் நிறம் மாறும். உடலில் பல்வேறு இடங்களில் கருமை அதிகரிக்கும். ஆண்தன்மை ஏற்படும்.

8. சினைப்பை நீர்க்கட்டி மலச்சிக்கலை உண்டாக்குமா?

சில கட்டிகள் 35 செ.மீ.,க்கும் மேல் வளர்ந்து, வயிறு முழுவதும் ஆக்கிரமித்துக் கொள்ளும். இதனால், அருகருகே இருக்கும் மற்ற உறுப்புகளை இக்கட்டி அழுத்தும். இதன்மூலம் சிறுநீர் கழிக்கும்போதும், மலம் கழிக்கும்போதும் பிரச்னைகள் உருவாகும்.

9. அதீத மகப்பேறு இடைவெளி நீர்க்கட்டிகளுக்கு ஆதாரமா?

முதலில் ஒரு விஷயத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். முதல் குழந்தை பிறக்கும்போது சினைப்பை நீர்க்கட்டி இல்லை. ஆனால், இரண்டாவது குழந்தைக்கான இடைவெளியில் சினைப்பை நீர்க்கட்டிக்கான தாக்கம் இருந்தால், கண்டிப்பாக இரண்டாவது குழந்தைக்கான வாய்ப்பு தள்ளிப்போகும்.

10. சினைப்பை நீர்க்கட்டிகள் வராமல் தடுக்கும் முறைகள்?

அதிக அளவு எடை உள்ளவராக இருந்தால் எடை குறைக்க வேண்டும். நாள் தவறாத உடற்பயிற்சியும், உணவுக்கட்டுப்பாடும் அவசியம். அதிக கொழுப்பு மிக்க பால் பொருட்கள், சாக்லெட், ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி, எண்ணெய் பலகாரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

உணவே மருந்து மருந்தே உணவு...

07/09/2018

சினைப்பை கட்டி

06/09/2018

KSMC இயற்கை கருத்தரிப்பு மையம்

அன்னக்காடி தயார் செய்த போது
26/01/2018

அன்னக்காடி தயார் செய்த போது

01/08/2016

“இசைந்ததொரு பெண்மலடு எங்குமில்லை

எதனாலே மலடான சேதி கேளுSiddha medicine for ovulation problems in female

அசைந்திருக்கும் பேயாலும் பித்தத்தாலும்

அடிவயிறு நொந்துவரும் வாயுவாலும்

பிசைந்த கர்ப்பப் புழுவாலும் கிரகத்தாலும்

பிணியாலும் மேகி வைசூரியாலும்

துசங்கெட்ட கலவியினால் துலங்காமல்

பிள்ளையில்லை சொல்லக்கேளே“

– அகத்தியர் கர்ப்பக் கோள்

Factors that causes infertility in women mentioned in the above lines are,

பேயாலும் (Psychosomatic Disorders due to stress)

பித்தத்தாலும் (Here it is referred to as hormonal disorders)

ஒழுங்கற்ற மாத விலக்கு (Irregular Menstruation)

சூசிகவாயு,குதக வாயு, சூதகக்கட்டு (amenorrhea)

வைசூரி (Viral infections in s***m)

கர்ப்பப் புழுவாலும் (Vaginal Infections)

துசங்கெட்ட கலவியினால் (Having s*x on non ovulating days and s***m cannot meet eggs to fertilize.)

மேக நோய் (Venereal diseases)

கருக்குழாய் அடைப்பு (Tubal factors like Fallopian tube block)

சினைப்பை கட்டிகள் (PCOS – Polycystic O***y Syndrome)

கருப்பை சவ்வு அழற்சி (Endometriosis)

கருப்பைக் கழலை (Fibroid Uterus).

Also, Siddhar Thiruvalluvar in his medical treatise “Gnanavettiyan-1500” has discussed about the pregnancy problems and reasons which causes infertility in female.

மாதர்கருக் குழியில் செனித் திடுநோய் சூலைsiddha medicine for pregnancy in tamil

வகையாரு விதமதுவு மணங்கு காலைப்

பதராகுங் கருக்குழியில் சதைதான் மூடிப்

பாயாது விந்ததுவும் பாழாய்ப் போகும்

விதுரமாங் கருக்குழியில் கிருமி சூழ்ந்தால்

விந்ததனை யுண்டுவெறும் பாழாம் பூமி

போதரவாய்க் கருக்குழியில் பூநீர் காரம்

பூர்க்குமந்தப் பூமியைப்போல் பூத்தாலாண்டே….(1112)

–ஞானவெட்டியான் -1500

விளக்கம்:

பெண்களுடைய கருப்பையில் உண்டாகும் யோனிச்சூலைகள் ஆறுவிதமாகும்.

கருக்குழியில் சதைவளர்ந்து இருந்தால் அவ்விடத்தில் விந்து பாயதிருப்பது.
கருக்குழியில் கிருமி கூடினால் அவ்விடத்தில் செல்லும் விந்துவை அப்புழுக்கள் புசித்துவிடல்.
கருக்குழியில் பூநீறு பூக்கும் பூமியைப்போல் உவர் பூக்கும், அதனால் விந்துவை பூத்த உப்பு உண்ணுதல்.
விந்துவானது இடம் விட்டு இடம் செல்வதினால், விந்து பாய்கிறது இல்லை.
கருக்குழியில் அதிகமாக வாய்வு சேர்ந்தால் வந்து அவ்விடம் செல்லாது.
புணர்ச்சி காலத்தில் இருவருடைய உஷ்ணத்தினால் விந்து நீர்த்து விடும்.
இந்த ஆறுவித காரணங்களால் விந்து வீணாய் போகிறதே தவிர கரு தங்குவதில்லை.

08/02/2016

பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள்

பெண்கள் 3 நாள் (மாதவிடாய்) பிரச்சனையின் போது, பெண்கள் கடுமையான தசைப்பிடிப்பை வயிற்றில் அனுபவிப்பார்கள்.
ப்ரோஸ்டாக்ளான்டின்ஸ் என்றழைக்கப்படும் தொகுப்பு ஹார்மோன்களுடன் இருக்கும் கருப்பையின் சுவர்கள் கிழிவதால் மாதவிடாய் தசைப்பிடிப்பு வலிகள் வருகின்றன.

ப்ரோஸ்டாக்ளான்டின்ஸ்களும், வலியும் இணை பிரியாமல் ஒரே சமயத்தில் வருகின்றன. மேலும், பிரசவத்தின் போது வலியை வரவழைக்கும் பணியை செய்யும் முதன்மையான காரணியாகவும் ப்ரோஸ்டாக்ளான்டின்ஸ் உள்ளன.

இது மட்டுமல்லாமல் இரத்தம் இல்லாததாலும், தசைகள் உரசுவதாலும் கூட கருப்பையில் வலி உண்டாகும். இவ்வாறு மாதவிடாய் காலத்தில் பெண்கள் அனுபவிக்கும் வலியைக் குறைக்க உதவும் சில வழிமுறைகளைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்..

• கால்சியம் நிறைந்திருக்கும் ஒரு கப் பாலை உங்களுடைய காலை உணவுடன் சேர்த்துக் கொள்வதன் மூலம் வலியை எதிர்த்துப் போராடவும் மற்றும் நிவாரணம் பெறவும் முடியும். நீங்கள் பால் குடிக்க விரும்பாவிடில், மாதவிடாய் நாட்களில் கால்சியம் மாத்திரைகளை சாப்பிட்டு நிவாரணம் பெறலாம்.

• மாதவிடாய்க்கு முன்னதாக நீங்கள் சாப்பிடும் உணவில் பப்பாளியை சேர்த்துக் கொள்ளுங்கள். பப்பாளியில் உள்ள பப்பாயின் என்ற என்ஸைம், மாதவிடாய் வலிக்கு எதிராக திறனுடன் போராடும். மாதவிடாய் நாட்களில் இரத்த ஓட்டத்தை மென்மையாகவும் மற்றும் எளிதாகவும் இந்த என்ஸைம் மாற்றி விடும்.

• உடலில் வரும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் நிவாரணியாக இருக்கும் கற்றாழை, மாதவிடாய் பிரச்சனைக்கும் மருந்து என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. கற்றாழைச் சாற்றில், ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து குடிப்பதன் மூலம் வலியில்லாத இரத்தப் போக்கை உருவாக்க முடியும்.

• மாதவிடாயின் போது காஃபிக் அமிலம் நிரம்பிய ஓமத்தை அதிகளவு சாப்பிடுவதன் மூலம், வலியிலிருந்து பெருமளவு நிவாரணம் பெற முடியும். ஓமத்தை மாசாலாக்கள் மற்றும் மூலிகை தேநீரில் கலந்து குடிப்பதன் மூலம், ஆச்சரியப்படுத்தும் விதமான நிவாரணத்தைப் பெற்றிட முடியும்.

• மாதவிடாய் நாட்களில் வலியைக் குறைக்கும் மருந்தாக இஞ்சியைப் பயன்படுத்த முடியும். அது மட்டுமல்லாமல், தவறி வரும் மாதவிடாய் சுழற்சியை வரைமுறைப்படுத்தவும் இஞ்சி உதவும். இஞ்சியை தேநீராக காய்ச்சி குடிப்பதன் மூலம் ஆச்சரியம் தரும் பலன்களை அடைய முடியும்.

08/02/2016

சீரான மாதவிடாய் சுழற்சி இல்லையா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க... மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும் பிரண்டை

பொதுவாக இறுதி மாதவிடாயானது 45-55 வயதுள்ள பெண்களுக்குத் தான் ஏற்படும். இத்தகைய நிலை ஏற்படுவதற்கு காரணம், பெண்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன்களின் உற்பத்தியானது குறைந்து, இனப்பெருக்க மண்டலமானது மாதவிடாய் சுழற்சியை குறைத்துவிடும். இவ்வாறு ஹார்மோன்களில் மாற்றம் உண்டாவதால், மனதில் அழுத்தம், உறவில் ஈடுபாடின்மை, சோர்வு, தூக்கமின்மை, தலைவலி போன்றவை ஏற்படும்.

ஆனால் அத்தகைய மாதவிடாய் சுழற்சியானது இளம் வயதிலயே சரியாகவும், சீராகவும் நடைபெறாவிட்டால், பின் அது பிற்காலத்தில் கருத்தரிக்கும் போது பிரச்சனையை உண்டாக்கும். எனவே இத்தகைய பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரிசெய்து விட வேண்டும். இதற்காக மருந்து மாத்திரைகள் போன்றவற்றை மேற்கொள்வதை விட, இயற்கை முறைகளைப் பின்பற்றி சரிசெய்து விடலாம்.

பொதுவாக இந்த பிரச்சனை இளம் வயதில் ஏற்படுவதற்கு கால்சியம் குறைபாடும் ஒரு காரணம். எனவே கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டால், மாதவிடாய் சுழற்சியை சீராக்கலாம். அதுமட்டுமின்றி வேறு சில போதிய சத்துக்கள் உடலில் இல்லாததும் மற்றொரு காரணம். இப்போது அந்த மாதவிடாய் சுழற்சியை சீராக்குவதற்கு எந்த மாதிரியான உணவுகளை உண்டால், சீராக்கலாம் என்பதைப் பார்ப்போமா!!!

மீன்கள்
மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. எனவே இதனை பெண்கள் அதிகம் சாப்பிட்டால், இதய நோய் ஏற்படுவதை தடுப்பதோடு, மார்பக புற்றுநோய் உண்டாவதையும் தடுக்கலாம். மேலும் இந்த மீனை பெண்கள் உணவில் அதிகம் சேர்த்தால், சீரான மாதவிடாய் சுழற்சியைப் பெறலாம். குறிப்பாக சால்மன், ஹெர்ரிங் மற்றும் சூரை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது.

பால்

பாலில் அதிகப்படியான கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் உள்ளது. ஆகவே பெண்கள் தினமும் பால் குடிப்பது நல்லது.

தயிர்

எலும்புகளில் நோய்கள் எதுவும் தாக்காமல் ஆரோக்கியமாகவும் வலுவோடும் இருப்பதற்கு, பால் பொருட்களில் ஒன்றான தயிரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் மாதவிடாய் சுழற்சியும் சரியாக நடைபெறும்.

* பிரண்டைச் செடியின் இலைகளும், இளம் தண்டுத் பகுதியும் உடல்நலம் தேற்றுபவை. வயிற்றுவலி போக்க வல்லது. இதன் பொடி ஜீராணகோளாறுகளுக்கு மருந்தாகிறது. தண்டின் சாறு எலும்பு முறிவுகளில் பயன்படுகிறது. ஒழுங்காக மாதவிடாய் வராத கோளறு ஆகியவற்றை தீர்க்கும். வேரின் பொடி எலும்பு முறிவில் கட்டுப்போட உதவுகிறது.

* வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மாதவிடாய் வயிற்றுவலி மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.

* பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில்- பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.

07/01/2016

Normal values in blood

" Cholesterol "
--------------------

Cholesterol --- < 200

HDL --- 40 --- 60

LDL --- < 100

VLDL -- < 30

Triglycerides -- < 150

Cholesterol
-------------------

Borderline --200 -- 239

High ---- > 240

V.High -- > 250

LDL
--------

Borderline --130 ---159

High --- 160 --- 189

V.High -- > 190


Triglycerides
---------------------

Borderline - 150 -- 199

High -- 200 --- 499

V.High -- > 500

-------------------------------------


Platelets Count
--------------------------

1.50 Lac ---- 4.50 Lac

----------------------------------------

Blood
-----------

Vitamin-D -- 50 ---- 80

Uric Acid -- 3.50 --- 7.20

-----------------------------------------

Kidney
-----------

Urea --- 17 --- 43

Calcium -- 8.80 -- 10.60

Sodium -- 136 --- 146

Protein -- 6.40 --- 8.30

--------------------------------------

High BP
---------------

120/80 -- Normal

130/85 --Normal (Control)

140/90 -- High

150/95 -- V.High

Low BP
--------------

120/80 -- Normal

110/75 -- Normal (Control)

100/70 -- Low

90//65 -- V.Low

---------------------------------------

Sugar
-----------

Glucose (F) -- 70 --- 100

(12 hrs Fasting)

Glucose (PP) -- 70 --- 140

(2 hrs after eating)

Glucose (R) -- 70 --- 140

(After 2 hrs)

----------------------------------------

Haemoglobin
---------------------

Male -- 13 --- 17

Female -- 11 --- 15

RBC Count -- 4.50 -- 5.50
(million)

--------------------------------------

Pulse
-----------

72 per minute (standard)

60 --- 80 p.m. (Normal)

40 -- 180 p.m.(abnormal)

---------------------------------------

Temperature
---------------------

98.4 F (Normal)

99.0 F Above (fever)

05/01/2016

இயற்கை மருத்துவம் :-

1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த
🌺
""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும் 🌿 ""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும்
🍃
""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும் 🌿""அரைக்கீரை.""

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
🌿""மணத்தக்காளிகீரை"".

7) உடலை பொன்னிறமாக மாற்றும்
🍂
""பொன்னாங்கண்ணி கீரை.""

8) மாரடைப்பு நீங்கும்
🍊
""மாதுளம் பழம்.""

9) ரத்தத்தை சுத்தமாகும்
🌱
""அருகம்புல்.""

10) கான்சர் நோயை குணமாக்கும் 🍈"" சீதா பழம்.""

11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்.""

12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி.""

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட 🌿""வெந்தயக் கீரை.""

14) நீரிழிவு நோயை குணமாக்க 🍈"" வில்வம்.""

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""துளசி.""

16) மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்.""

17) சளி, ஆஸ்துமாவுக்கு 🌿""ஆடாதொடை.""

18) ஞாபகசக்தியை கொடுக்கும் 🌿""வல்லாரை கீரை.""

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""பசலைக்கீரை.""

20) ரத்த சோகையை நீக்கும் 🍒"" பீட்ரூட்.""

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்🍍"" அன்னாசி பழம்.""

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை
🌾
(முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் 🌿🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை""

25) முகம் அழகுபெற 🍇""திராட்சை பழம்.""

26) அஜீரணத்தை போக்கும்
🍃
"" புதினா.""

27) மஞ்சள் காமாலை விரட்டும்
🌱
“கீழாநெல்லி”

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

05/01/2016

சுக்கு: தினம் காலையில் சுக்குக் காப்பி பருக மூக்கடைப்பு, உடல் பித்தம் குணமாகும். பசியை தூண்டவும், அஜீரணத்தை போக்கவும் வல்லது. ✅மிளகு: சளி, பசியின்மையைப் போக்குகிறது. திடீர் அரிப்பு, தடிப்புக்கு, ஆஸ்துமா, சைனஸ்(நீர்கோவையுடன் மூக்கடைப்பு) சிறந்த நிவாரணமாகிறது. ✅திப்பிலி: திப்பிலியை வெற்றிலை, தூதுவளை சாறில் ஊறவைத்து பொடி ஒரு சிட்டிகை அளவு தேனில் குழைத்து சாப்பிட இருமல் குணமாகும். அதனுடன் தண்ணீர் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை- மாலை வாய்கொப்பளிக்க வாய் நாற்றம், பல் கூசுதல், தொண்டை புண், தொண்டை சளி குணமடையும். ✅தூதுவளை: இதன் இலையை கசக்கி சாறு எடுத்து 2 சொட்டு தினசரி காதில் விட காது அடைப்பு குணமாகும். எப்போதும் இருமல் சளியுடன் இருப்பவர்கள் இதன் பழங்களை தேனில் குழைத்து சாப்பிட சளி நீங்கும். இதில் உள்ள சொலுயூசன்ஸ் சளியை அறுத்து வெளியே தள்ளும் ஆற்றல் மிக்கது. இதனை ரசம் வைத்தும் சாப்பிட பயன்படுத்தலாம். ✅கீழாநெல்லி: தண்டு மற்றும் கீரையை இடித்து துணியில் வைத்துப் பிழிந்து சாறு எடுத்து, சம அளவு விளக்கெண்ணெய் கலந்து காலை- மாலை கண்களில் ஒன்றிரண்டு சொட்டுகள் விட்டு வர கண்புரை கரையும். மஞ்சள் காமாலை ரத்தமின்மைக்கு நல்லமருந்து. ஹெபடைடில் பி எனும் கொடிய வைரசால் பாதிப்புற்ற கல்லீரலை மீட்கிறது. ✅ துளசி: மன அழுத்தத்தைக் குறைக்க துளசி டீ ஏற்றது. வைரஸை எதிர்த்தும் பாக்டீரியாவை செயலிழக்கவும் செய்யவல்லது. ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் கொண்டது. தோல் வியாதி ரத்தத்தை சுத்திகரிக்க, தலைவலி போக்க, சீரணத்தை அதிகரித்து அஜீரணத்தை போக்க வல்லது. சளியுடன் வரும் இன்புளுயன்சா காய்ச்சலுக்கு சிறந்த மருந்து. ✅ நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. 20 துளசி இலைகளை 100மி தண்ணீரில் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை- மாலை வாய் கொப்பளிக்க வாய் நாற்றம், பல் கூசூதல், தொண்டை புண், தொண்டைச்சளி குணமடையும். ✅கரிசலாங்கண்ணி: கல்லீரலில் ஏற்படும் புண் வீக்கம் மற்றும் ரத்தகசிவை குணப்படுத்தும். இதிலுல்ல இரும்பு சத்து ரத்தத்தில் சிவப்பணுக்களை பெருக்கி ரத்த சோகையை நீக்குகிறது. தலைமுடி, பல், கண் தோலுக்கு ஊட்டத்தை தரவல்லது.

05/01/2016

சுக்கு: தினம் காலையில் சுக்குக் காப்பி பருக மூக்கடைப்பு, உடல் பித்தம் குணமாகும். பசியை தூண்டவும், அஜீரணத்தை போக்கவும் வல்லது. ✅மிளகு: சளி, பசியின்மையைப் போக்குகிறது. திடீர் அரிப்பு, தடிப்புக்கு, ஆஸ்துமா, சைனஸ்(நீர்கோவையுடன் மூக்கடைப்பு) சிறந்த நிவாரணமாகிறது. ✅திப்பிலி: திப்பிலியை வெற்றிலை, தூதுவளை சாறில் ஊறவைத்து பொடி ஒரு சிட்டிகை அளவு தேனில் குழைத்து சாப்பிட இருமல் குணமாகும். அதனுடன் தண்ணீர் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை- மாலை வாய்கொப்பளிக்க வாய் நாற்றம், பல் கூசுதல், தொண்டை புண், தொண்டை சளி குணமடையும். ✅தூதுவளை: இதன் இலையை கசக்கி சாறு எடுத்து 2 சொட்டு தினசரி காதில் விட காது அடைப்பு குணமாகும். எப்போதும் இருமல் சளியுடன் இருப்பவர்கள் இதன் பழங்களை தேனில் குழைத்து சாப்பிட சளி நீங்கும். இதில் உள்ள சொலுயூசன்ஸ் சளியை அறுத்து வெளியே தள்ளும் ஆற்றல் மிக்கது. இதனை ரசம் வைத்தும் சாப்பிட பயன்படுத்தலாம். ✅கீழாநெல்லி: தண்டு மற்றும் கீரையை இடித்து துணியில் வைத்துப் பிழிந்து சாறு எடுத்து, சம அளவு விளக்கெண்ணெய் கலந்து காலை- மாலை கண்களில் ஒன்றிரண்டு சொட்டுகள் விட்டு வர கண்புரை கரையும். மஞ்சள் காமாலை ரத்தமின்மைக்கு நல்லமருந்து. ஹெபடைடில் பி எனும் கொடிய வைரசால் பாதிப்புற்ற கல்லீரலை மீட்கிறது. ✅ துளசி: மன அழுத்தத்தைக் குறைக்க துளசி டீ ஏற்றது. வைரஸை எதிர்த்தும் பாக்டீரியாவை செயலிழக்கவும் செய்யவல்லது. ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் கொண்டது. தோல் வியாதி ரத்தத்தை சுத்திகரிக்க, தலைவலி போக்க, சீரணத்தை அதிகரித்து அஜீரணத்தை போக்க வல்லது. சளியுடன் வரும் இன்புளுயன்சா காய்ச்சலுக்கு சிறந்த மருந்து. ✅ நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. 20 துளசி இலைகளை 100மி தண்ணீரில் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை- மாலை வாய் கொப்பளிக்க வாய் நாற்றம், பல் கூசூதல், தொண்டை புண், தொண்டைச்சளி குணமடையும். ✅கரிசலாங்கண்ணி: கல்லீரலில் ஏற்படும் புண் வீக்கம் மற்றும் ரத்தகசிவை குணப்படுத்தும். இதிலுல்ல இரும்பு சத்து ரத்தத்தில் சிவப்பணுக்களை பெருக்கி ரத்த சோகையை நீக்குகிறது. தலைமுடி, பல், கண் தோலுக்கு ஊட்டத்தை தரவல்லது.
சற்றுமுன் ·
தனியுரிமை: பொது

Address

தலைமை தபால் நிலையம் எதிரில், ஆற்றுப்பாலம்
Paramakudi
623707

Telephone

+917639466755

Website

Alerts

Be the first to know and let us send you an email when கருப்பையா சித்த மருத்துவ மையம், பரமக்குடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share