20/08/2018
* * * * * * * * * * * * * * * * * * * *சிறுநீரகங்கள் (கிட்னி) பாதித்தால் உண்டாகும் அறிகுறிகள்
Symptoms Of Kidney Disease
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஒரு தாயின் வயிற்றில் கரு உருவான நான்காவது மாதத்தில் உருவாகி இயங்க ஆரம்பித்து கடைசி வாழ்நாள் வரையில் இடைவிடாது இயங்கும் மிக முக்கிய உறுப்பு சிறுநீரகம். நம் எல்லோருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன என்று தெரியும். இரத்தத்தில் சேரும் கழிவுப்பொருள்களை வடிகட்டி சிறுநீராக வெளியேற்றும் மிக முக்கியமான பணியை இவை செய்கின்றன. மனித உடலில் மிக முக்கிய செயலாற்றும் உறுப்பு இது..
நகரத்தில் வேலை செய்யும் துப்புரவுப்பணியாளர்கள் ஓரிருநாள் வேலை நிறுத்தம் செய்தால் எப்படி நகரம் நரகமாகி விடுமோ.. அது போல. உடலில் சிறுநீரகங்கள் வேலை நிறுத்தம் செய்தால் உடலே நரகமாகி விடும்..
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எலும்புக் கூண்டுக்குள் அவரை விதை வடிவில் சிறிதாக இருப்பவை. நம் உடலில் உள்ள உலகின் மிகச்சிறந்த, மிக நுண்ணிய சுத்திகரிப்பு ஆலை, கழிவுமண்டலத்தின் முக்கிய காரியதரிசி என்றே சிறுநீரகங்களை கூறலாம். ஒரு சிறுநீரகத்தில் 10 லட்சம் நெஃப்ரான்கள் உள்ளன. கிட்டதட்ட 11லிருந்து14செ.மீ நீளமும், 6செ.மீ அகலமும் மற்றும் 4செ.மீ தடிமனும் கொண்டது.
இரத்தத்தைச் சுத்தம் செய்து அதிலிருக்கும் கழிவுகளை பிரித்தெடுத்து சிறுநீர் மூலம் கழிவாக வெளியேற்றுகிறது. உடல் முழுவதுக்கும் தேவைப்படும் ஆக்சிஜனில் 10 சதவீதம் சிறுநீரகத்துக்கு செல்கிறது. இதயத்திலிருந்து வெளிப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சென்று சுத்திகரிக்கப்படுகின்றது. உடலில் உள்ள கழிவுப்பொருட்களை சிறுநீராக வெளியேற்றுவது மட்டுமே சிறுநீரகங்களின் வேலை இல்லை..ஒரு நிமிடத்துக்கு 2.4 லிட்டர் ரத்தத்தை வடிகட்டி, அதில் உள்ள கழிவுகளை நீக்குகின்றன. ஒருவரது உடலில் இருந்து அன்றாடம் சராசரியாக 1,500 மில்லி முதல் 2500 மில்லி வரை சிறுநீர் பிரிகிறது.
உடலுக்கு தேவையான நீர்சத்து சம நிலையில் இருக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருப்பதும், உடலின் திரவநிலையை சமநிலையில் பராமரிப்பதும், இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான எரித்ரோபாய்டின் என்ற சுரப்பினை சுரப்பதும், எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சம அளவில் வைத்திருக்கக்கூடிய வைட்டமின் டி3 யைத்தருவதும், அமில, காரத்தன்மைகளையும், சோடியம், பொட்டாசியம், அம்மோனியா போன்றவைகளை சரிவிகிதத்தில் வைத்திருப்பதுமான செயல்பாடுகளை செய்வதும் சிறுநீரகங்கள்தான்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க சிறுநீரகங்கள் உதவுகின்றன. நாம் உண்ணும் உணவு ஜீரண உறுப்புகளால் சத்தாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதே போல் உடல் உறுப்புகள் வெளியேற்றும் கழிவுகளும் ரத்தத்தில் கலந்து சீறு நீரகங்களுக்கு வருகிறது. ரத்தத்தில் கலந்து வரும் கழிவுகளான யூரியா, கிரியாட்டினன் போன்றவற்றை சிறு நீரகங்கள் பிரித்து சிறுநீராக வெளியேற்றுகிறது.
தினமும் நமது உடலில் உள்ள தேவையற்ற உப்பு மற்றும் தண்ணீரை சுத்திகரித்து, வெளியேற்றி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பணியை சிறுநீரகம் செய்கிறது. இவ்வாறு அத்தனை பணிகளையும், மேலும் பல பணிகளையும் ஒரு மனிதன் ஆயுள் முழுவதும் சிறுநீரகங்கள் செவ்வனே செய்கின்றன.
சிறுநீரகங்கள் செயல் இழப்பு ஏற்பட்டு, கழிவுகளை வெளியேற்றாமல் உடலில் தங்கி விடும் போதுதான் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. நாளடைவில் அதுவே உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. ஓயாமல் இறுதி மூச்சுவரை உழைக்க தயாராக இருக்கும் சிறுநீரகங்கள் இடையில் திடீரென வேலை நிறுத்தம் செய்யவும், பழுதடையவும் காரணங்கள் என்ன?? சிறுநீரகங்கள் வேலை நிறுத்தம் செய்ததை எப்படி ஆய்வது.. இதனால் ஏற்படப்போகும் பாதிப்புகள் என்ன..? சற்று விரிவாக பார்க்கலாம்..
முதலில் சிறுநீரகங்கள் பாதித்தால் உண்டாகும் அறிகுறிகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
உடல் எடை இழப்பு, குமட்டல், பசியின்மை, வாந்தி, சுறுசுறுப்பின்மை, அதிக தாகம், அடிக்கடி விக்கல், சிறுவயதில் பற்கள் விழுதல், கர்ப்பப்பை கோளாறுகள், எப்போதும் சோர்வு, உடல்நலக் குறைவு, தலைவலி, தூக்கத்துடன் கூடிய மந்தமான நிலை, குழப்பம், மனப்பிரமை, நினைவற்ற நிலை, தோல் நிறம் வெளுத்துப் போதல், தசை துடிப்பு அல்லது தசை பிடிப்பு, உடல் முழுவதும் ஏற்படும் அரிப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரின் அளவு கூடுவது அல்லது குறைவது, இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கும் போது வலி, சுலபமாக காயம் ஏற்படுதல் அல்லது இரத்தம் வடிதல், வாந்தியில் அல்லது மலத்தில் இரத்தம், கைகள் பாதங்கள் மற்றும் உடலில் சில பகுதிகள் மரத்துப் போதல், முறையற்ற நகங்களின் வளர்ச்சி, சுவாசிப்பதில் நாற்றம் மற்றும் சிரமம், கணுக்கால், பாதத்தில் வீக்கம், சிறுநீரகம் உள்ள இடத்துக்கு மேல் விலாபுறத்தில் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் சிறுநீரகங்கள் பழுதடைய ஆரம்பித்துள்ளன என்று நாமே உணரலாம்.
உடலின் மற்ற உள்ளுறுப்புகள் முறையாக செயலாற்ற முக்கிய காரணியாக திகழ்வது இந்த சிறுநீரகங்கள் தான். ஒரு மனிதனின் உயிர்சக்தி இருக்கும் இடமான மூலாதார சக்தி என்று அழைக்கப்படும் சிறுநீரகங்கள்