மருத்துவம்

மருத்துவம் We'll make a daily video here. It is the people who keep watching everything. That's all we want.Everyone of us can watch the video freely here, and let us

பெண்_குழந்தைகள் இடுப்பு_வலிமை_பெற நம் பாரம்பரிய உணவே மருந்து... 👍கருப்பு_உளுந்து_லட்டுதேவையான_பொருட்கள் :கருப்பு உளுந்து...
21/05/2020

பெண்_குழந்தைகள் இடுப்பு_வலிமை_பெற நம் பாரம்பரிய உணவே மருந்து... 👍

கருப்பு_உளுந்து_லட்டு

தேவையான_பொருட்கள் :

கருப்பு உளுந்து - 1 கப்

பொட்டுகடலை - 2 டேபிள் ஸ்பூன்

பொடித்த வெல்லம் - 3/4 கப்

ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

நெய் - தேவையான அளவு.

சிறு துண்டுகளாக நறுக்கிய
முந்திரி பருப்பு - சிறிதளவு.

செய்முறை :

1.முதலில் கருப்பு உளுந்தை கல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக கழுவி வெயிலில் உலர்த்தி வெறும் வாணலியில் வாசனை வரும் வரை சிவக்க
வறுத்தெடுத்து ஆற வைக்கவும்.

2.வறுத்த பருப்பு நன்கு ஆறியதும் அதனுடன் பொட்டுகடலை சேர்த்து நைசாக பொடித்தெடுத்து சலித்து வைத்துக்கொள்ளவும்.

3.சலித்தெடுத்த மாவுடன் பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

4.ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு நெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும்.

5. சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமானதும் வெல்லம் கலந்து வைத்துள்ள லட்டு மாவில் நெய் ஊற்றி கரண்டியால் கலந்து விட்டு கை பொறுக்கும் சூடு இருக்கும் போதே விருப்பமான அளவில் லட்டுகளாக பிடித்து வைக்கவும்.

6.சத்துக்கள் பல நிறைந்த சுவையான இந்த கருப்பு உளுந்து லட்டு சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும்.

7.முக்கியமாக வளரும் பெண் குழந்தைகளுக்கு இதை அடிக்கடி செய்து கொடுப்பதினால் இடுப்பு எலும்புகள் நல்ல வலுவாக இருக்கும்.

குறிப்பு:

1. சிறிதளவு பொட்டுகடலை சேர்த்து பொடிப்பதனால் உடையாமல் லட்டு பிடிக்க சுலபமாக இருக்கும்.

2.நெய்யை காய வைத்து மாவில் ஊற்றும் போது நன்கு நுரைத்துக்கொண்டு வர வேண்டும்.

3.நெய் மற்றும் வெல்லத்தின் அளவை அவரவர் ருசிக்கேற்ப கூட்டிக்கொள்ளலாம்.

உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து.

உடல்_சூடு_தணிய

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது_விருத்தியாக

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

எலும்பு_முறிவு_இரத்தக் கட்டிகளுக்கு

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுப்பெற

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

🍂குழந்தைகளுக்கு

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்

🍂நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை.

18/05/2020

பல நோய்களைத் தீர்க்கும் #வாழைஇலை_குளியல் இஸ் பண்ணாம பாருங்க

10/05/2020

கொரோனாவிற்கு எளிய நாட்டு மருந்து கூறிய ஐயா அவர்களுக்கு நன்றி

26/04/2020

1 ரூபாய் செலவில்லாமல் #சர்க்கரை_வியாதியை குணப்படுத்தும் #மூலிகை

19/04/2020

கொரானாவை 7 நாட்களில் குணமாக்கும் வாதசுர குடிநீர், இந்தியாவுக்கே சவால் விடும் சித்தர் திரு.க. திருதணிகாசலம் சவால்

26/03/2020

எப்படிப்பட்ட வைரஸையும் அழிக்கும் சக்திவாய்ந்த மூலிகை குடிநீர் | ANTIVIRUS HERBAL WATER | DrSJ

01/03/2020
28/02/2020
26/02/2020
24/02/2020
23/02/2020

Address

Ammer Bin Yasser Street, No 13
Pondichéry
605001

Telephone

8984481609

Website

Alerts

Be the first to know and let us send you an email when மருத்துவம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category