Uyirthuli Blood donors communication Centre

Uyirthuli Blood donors communication Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Uyirthuli Blood donors communication Centre, Blood bank, 33, Arulpadayachi Street, Nellitope, Pondichéry.

மெகா இரத்த தானம் முகாம். இந்திராணி செவிலியர் கல்லூரி  ஜிப்மர் இரத்த வங்கி , NDSO, மற்றும் உயிர்த்துளி பவுண்டேஷன் இணைந்து...
30/04/2026

மெகா இரத்த தானம் முகாம்.

இந்திராணி செவிலியர் கல்லூரி ஜிப்மர் இரத்த வங்கி , NDSO, மற்றும் உயிர்த்துளி பவுண்டேஷன் இணைந்து செய்த மெகா இரத்த தானம் முகாம் ICON ஆடிடோரியமில் இன்று 26/4/26 நடைபெற்றது .

இம்முகாமில் ஸ்ரீ வெங்கடேஷ்வரா குழுமத்தின் தலைவர் திரு. B.ராமச்சந்திரன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு வெங்கடேஸ்வரா குழுமத்தின் மாணவர்கள் 97 யூனிட்கள் இரத்த தானம் செய்தனர்.
இதில் 34 யூனிட் இரத்தம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவமனைக்கும், 63 யூனிட் இரத்தம் ஜிப்மர் மருத்துவமனைக்கும் கொடுக்கப்பட்டது.

இரத்த தானம் செய்த அனைத்து மாணவர்களுக்கும் உயிர்த்துளி சார்பாக நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

C.Prabhu
Uyirthuli Founder
9894404632 / 086955 66777

Mega blood donation Camp
27/04/2026

Mega blood donation Camp

உயிர்த்துளி ஃபவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற 72வது ரத்ததான முகாமில் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர் 🙏
06/04/2026

உயிர்த்துளி ஃபவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற 72வது ரத்ததான முகாமில் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர் 🙏

உயிர்த்துளி ஃபவுண்டேஷன் சார்பில் நடைபெறும் 72வது ரத்ததான முகாமில் ரத்ததானம் வழங்க தன்னார்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்.🙏🤝
27/02/2026

உயிர்த்துளி ஃபவுண்டேஷன் சார்பில் நடைபெறும் 72வது ரத்ததான முகாமில் ரத்ததானம் வழங்க தன்னார்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்.🙏🤝

உயிர்த்துளி ஃபவுண்டேஷன் சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, உயி...
15/02/2026

உயிர்த்துளி ஃபவுண்டேஷன் சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, உயிர்த்துளி ஃபவுண்டேஷன் சார்பாக ஜிப்மர் இரத்த வங்கியுடன் இணைந்து, காமதேனு சாரிட்டிஸ் மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் பாண்டிச்சேரி ஹோஸ்ட் ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன், இரத்ததான முகாம் மற்றும் இரத்ததான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை எதிரில் 2026 பிப்ரவரி 8ஆம் தேதி மாலை 5 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி, உயிர்த்துளி இரத்ததானம் குழு தலைவர் வசந்த் அவர்களின் தலைமையிலும், செயலாளர் ராமமூர்த்தி அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சட்டமன்ற உறுப்பினரும் உயிர்த்துளி அன்னதான குழுவின் கௌரவத் தலைவருமான செல்வம் அவர்களும், உயிர்த்துளி ஃபவுண்டேஷன் நிறுவனர் பிரபு அவர்களும் இணைந்து தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயாளிகளுக்கு இரத்தத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக கீமோதெரபி மற்றும் அவசர சிகிச்சை மேற்கொள்ளப்படும் நோயாளிகளுக்கு இரத்தம் மிக அவசியமாக இருப்பதாகவும் இந்நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. இவ்வகை நோயாளிகளின் உயிரைக் காக்க பொதுமக்கள் தன்னார்வமாக இரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் என்பதே இந்த முகாமின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

இந்த நிகழ்ச்சியில் உயிர்த்துளி இரத்ததானம் குழு கமிட்டி உறுப்பினர் கருணாகரன், உயிர்த்துளி உறவுகள் குழு கௌரவத் தலைவர் முத்துராமன், செயலாளர் மணிகண்டன், அன்னதானம் குழு தலைவர் பிரகாஷ், செயலாளர் சிவகுமார், குழு உறுப்பினர் நிஷா, பசுமை பயணம் குழு கௌரவத் தலைவர் சுந்தர முருகன், செயலாளர் ரூபி, கமிட்டி உறுப்பினர் ஹென்றி பால், மருத்துவ உதவி குழு ஒருங்கிணைப்பாளர் ஆதிநாராயணன், விலங்கு நலம் மற்றும் பாதுகாப்பு குழு தலைவர் செல்வமுத்துராயன், செயலாளர் ஆபெல், கமிட்டி உறுப்பினர் ஏஞ்சலா ஜோஸ்பின், சமூக செயல்பாட்டாளர் விஜய், உயிர்த்துளி உறுப்பினர்கள் சந்தியா, சபரி, ஸ்ரீதரன், தனிஷ் கென்னடி, இந்திராணி கல்லூரி மாணவ, மாணவிகள், ஸ்ரீ சடகுலத்து அய்யனார் கலைக்குழுவினர், சமூக அமைப்பு பொறுப்பாளர்கள் எலிசபெத் ராணி, தனலட்சுமி, சோபியா, திருநங்கை கிரிஜா நாயக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்த இரத்ததான முகாமில் மொத்தம் 41 தன்னார்வலர்கள் இரத்ததானம் செய்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயாளிகள் உள்ளிட்ட அவசர மருத்துவ தேவையுள்ள நோயாளிகளின் உயிர்காக்கும் பணிக்கு தங்களது மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கினர்.

அன்புடன்,
உயிர்த்துளி ஃபவுண்டேஷன்
நிறுவனர் – பிரபு
📞 09894 404632

04/02/2026
🎗️ உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு 🎗️புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்கு ரத்தத்தின் தேவை அதிகம் இருப்ப...
03/02/2026

🎗️ உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு 🎗️

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்கு ரத்தத்தின் தேவை அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு,

உயிர்த்துளி பவுண்டேஷன் சார்பாக ரத்ததான முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரத்ததான முகாம் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு உயிர் காக்கும் உதவி செய்யும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.

🩸 ரத்ததானம் செய்வது ஒரு மனிதாபிமான சேவை மட்டுமல்ல, பல உயிர்களை காப்பாற்றும் உயர்ந்த தர்மமாகும்.

இந்த நற்செயலில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

📅 தேதி : பிப்ரவரி 8
⏰ நேரம் : மாலை 5.00 மணி – 8.00 மணி
📍 இடம் : புதுச்சேரி கடற்கரை சாலை, காந்தி சிலை எதிரில்

📞 தொடர்புக்கு:
உயிர்த்துளி பவுண்டேஷன்
98944 04632 / 86955 66777

“ஒரு ரத்ததானம் – பல உயிர்களுக்கு புதிய நம்பிக்கை”

Puducherry Chief Minister Presents Shield and Certificate to Uyirthuli FoundationA National Voluntary Blood Donation Meg...
23/01/2026

Puducherry Chief Minister Presents Shield and Certificate to Uyirthuli Foundation

A National Voluntary Blood Donation Mega Camp was organized on January 22, 2026, in Puducherry, jointly by the Indira Gandhi Medical College and Research Institute and the Pondicherry Blood Transfusion Council.

The event was presided over by the Honourable Chief Minister of Puducherry, Thiru N. Rangasamy. During the function, the dedicated services of Uyirthuli Foundation, which has been actively involved in blood donation and humanitarian activities, were highly appreciated.

In recognition of its outstanding contributions, the administrators of Uyirthuli Foundation were honoured with a Shield of Appreciation and Certificates by the Honourable Chief Minister.

C.Prabhu.Founder,
Uyirthuli Foundation
📞 98944 04632 / 86955 66777

நன்றி : தில்லை மெயில்
23/01/2026

நன்றி : தில்லை மெயில்

23/01/2026

உயிர்த்துளி ஃபவுண்டேஷன் பாராட்டி புதுச்சேரி முதலமைச்சர் கேடய மற்றும் சான்றிதழ் வழங்கினார்

இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பாண்டிச்சேரி இரத்த பரிமாற்ற குழுமம் இணைந்து, ,தேசிய தன்னார்வ இரத்ததான மகா விழா 2026 ஜனவரி 22 அன்று புதுச்சேரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.N.ரங்கசாமி அவர்கள் தலைமை வகித்தார். விழாவில் இரத்ததானம் மற்றும் மனிதநேய சேவைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் உயிர்த்துளி ஃபவுண்டேஷன் அமைப்பின் சேவைகள் பாராட்டப்பட்டு, அமைப்பின் நிர்வாகிகளுக்கு பாராட்டு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பிரபு. நிறுவனர்,
உயிர்த்துளி ஃபவுண்டேஷன்
📞 98944 04632 / 86955 66777

Road Safety Month January 2026
12/01/2026

Road Safety Month January 2026

சர்தார் வல்லபாய் பட்டேல் 150வது பிறந்தநாளை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவரின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக ஜிப்மர் இரத்...
13/11/2025

சர்தார் வல்லபாய் பட்டேல் 150வது பிறந்தநாளை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவரின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக ஜிப்மர் இரத்தவங்கி மற்றும் காமதேனு சாரிடிஸ் & NDSO இணைந்து உயிர்த்துளி பவுண்டேஷன் சார்பாக
*இரத்ததான முகாம்*

16 நவம்பர் 2025, மாலை 5 மணிமுதல் 8.30 மணிவரை காந்தி சிலை அருகில், கடற்கரை சாலை, புதுச்சேரி.

INITIATED BY
UYIRTHULI FOUNDATION

9894404632 | 9345459306 | 9943372011
9344628956 8608956916 | 9500000434

Address

33, Arulpadayachi Street, Nellitope
Pondichéry
605005

Alerts

Be the first to know and let us send you an email when Uyirthuli Blood donors communication Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Uyirthuli Blood donors communication Centre:

Share

Category