
25/07/2025
சங்கத்தினருக்கு வணக்கம்
24/7/25
இன்றைய கூட்டத்தில் பெருவாரியான உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சங்கத்துடன் உதவி கூறி விண்ணப்பித்த இரண்டு பள்ளிகளின் கோரிக்கைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன.
1. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தைலாநகர் குழந்தைகளுக்கு ஒரு சுகாதார வளாகம் கோரிக்கை மனு பெறப்பட்டிருக்கிறது.
2. மாந்தாங்குடி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் போர்டு கோரிக்கை பெறப்பட்டிருக்கிறது.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.
Rtn மலையப்பன், Rtn பாலாஜி விதைக்கலாம் அமைப்பு குறித்து கூறி வரும் ஞாயிறு அன்று மேதகு கலாம் அவர்களின் நினைவு நாளில் நிகழ இருக்கிற மரம் நடு விழாவில் கலந்து கொள்ள அனைவரையும் அழைத்தனர். இந்த நிகழ்வை நமது சங்கமும் இணைந்து செய்ய இருக்கிறது.
அடுத்ததாக புதிய உறுப்பினராக இணைந்திருக்கும் சிட்டி கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் Rtn முகமது மீரா அவர்கள் தனது சுய அறிமுகத்தை கொடுத்தார்.
தொடர்ந்து துணை ஆளுநர் Rtn விக்னேஷ் லீட் கான்கிளேவ் குறித்து விரிவாக பேசி மேலும் உறுப்பினர்கள் பதிவு செய்வதை உறுதி செய்தார்.
மாவட்ட தேர்தலுக்காக நாமினேட்டிங் கமிட்டி ஆர்வலர்களின் விவரம் கேட்டு வந்த தபாலை முன்னாள் தலைவர் Rtn ஸ்ரீனிவாசன் அவர்கள் சபையில் வாசித்தார்.
உடனடி முன்னாள் தலைவர் Rtn. ஆர் எஸ் ஆனந்த் அவர்கள் ரோட்டரி ஹால் கணக்குகளையும் சாவியையும் புதிய தலைவர் வசம் ஒப்படைத்தார்.
நமது சங்கத்தின் உறுப்பினர் Rtn Dr. அருண் அவர்களின் பிறந்தநாள் சங்க உறுப்பினர்களின் வாழ்த்துகளோடு கொண்டாடப்பட்டது.
இறுதியாக செயலாளர் Rtn. சொக்கலிங்கம் நன்றி கூற வராந்திர கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.