ராகு கேது பெயர்ச்சி

  • Home
  • India
  • Pune
  • ராகு கேது பெயர்ச்சி

ராகு கேது பெயர்ச்சி 12 ராசிக்காரர்களுக்குமான ராகு - கேது ப?

29/05/2025
12 ராசிக்கும் ராகு, கேது பெயர்ச்சி பலன்கள் 2025 - 2026ராகு,கேது பெயர்ச்சி  26.4.2025 சனிக்கிழமை மாலை 04 மணி 08 நிமிடத்தி...
24/05/2025

12 ராசிக்கும் ராகு, கேது பெயர்ச்சி பலன்கள் 2025 - 2026
ராகு,கேது பெயர்ச்சி 26.4.2025 சனிக்கிழமை மாலை 04 மணி 08 நிமிடத்திற்கு நடைபெற உள்ளது.
ராகு பகவான் கும்பராசியிலும் கேதுபகவான் சிம்மத்தில் அமர்ந்து 12 ராசிகளுக்கான பலன்களை தர இருக்கிறார்கள்.
ராகு,கேது பெயர்ச்சி பலன்களை சுருக்கமாக பார்க்கலாம்.
🐏மேஷம் | முழுமையான பலன், பரிகாரத்துக்கு > ராகு,கேது பெயர்ச்சி பலன்கள் 2025 https://youtube.com/shorts/LixfOXGtjnw?si=Pe5g7YIo_NJOOQIV
🐂ரிஷபம் | முழுமையான பலன், பரிகாரத்துக்கு > ராகு,கேது பெயர்ச்சி பலன்கள் 2025 https://youtube.com/shorts/EDAyeX2_5hg?si=Vxl0C4v-GORKrcGB
👫மிதுனம் | முழுமையான பலன், பரிகாரத்துக்கு > ராகு,கேது பெயர்ச்சி பலன்கள் 2025 https://youtube.com/shorts/RfqaemNtIc4?si=Se44B0fFgTQ-rXi5
🦀கடகம் | முழுமையான பலன், பரிகாரத்துக்கு > ராகு,கேது பெயர்ச்சி பலன்கள் 2025 https://youtube.com/shorts/QKFbRf4zn8g?si=V1QyVBndDr4QR2zh
🦁சிம்மம் | முழுமையான பலன், பரிகாரத்துக்கு > ராகு,கேது பெயர்ச்சி பலன்கள் 2025 https://youtube.com/shorts/5HkLcorVHT0?si=cxtvK0pVemVURBkZ
🤷🏻♀கன்னி | முழுமையான பலன், பரிகாரத்துக்கு > ராகு,கேது பெயர்ச்சி பலன்கள் 2025 https://youtube.com/shorts/t4z12efkPaM?si=KyzCGePkW96MZSq4
⚖துலாம் | முழுமையான பலன், பரிகாரத்துக்கு > ராகு,கேது பெயர்ச்சி பலன்கள் 2025 https://youtube.com/shorts/9Kl0zBYAoqE?si=yTQrzwjzENctwRKs
🦂விருட்சிகம் | முழுமையான பலன், பரிகாரத்துக்கு > ராகு,கேது பெயர்ச்சி பலன்கள் 2025 https://youtube.com/shorts/5YCJUuyUIMk?si=lG7OzW_pgiIx0O7P
🏹தனுசு | முழுமையான பலன், பரிகாரத்துக்கு > ராகு,கேது பெயர்ச்சி பலன்கள் 2025 https://youtube.com/shorts/js7nUt-N1KQ?si=H0kggE1LGlTxy-J8
🐊மகரம்| முழுமையான பலன், பரிகாரத்துக்கு >ராகு,கேது பெயர்ச்சி பலன்கள் 2025 https://youtube.com/shorts/3g9pi_XAlYI?si=sFkbf1-PeqFuztlv
🧁கும்பம் | முழுமையான பலன், பரிகாரத்துக்கு >ராகு,கேது பெயர்ச்சி பலன்கள் 2025 https://youtube.com/shorts/r00m4uO3VF4?si=_y1tphwYLkvgELjQ
🐠மீனம் | முழுமையான பலன், பரிகாரத்துக்கு >ராகு,கேது பெயர்ச்சி பலன்கள் 2025 https://youtube.com/shorts/NbaaW0pn2k4?si=ErsB4xvE2sYCPEMn
#
ஆன்மீக தகவல்களை விரும்புவர்கள் நமது TrendDevotional ஆன்மீக WhatsApp குரூப்பில் இணைந்து கொள்ளலாம்.
WhatsApp குரூப் - 1 (Link 🔗) : https://chat.whatsapp.com/DVBOk4KvR5758BDoPhJixq
குரூப் 1-ல் 1025 நபர்கள் மட்டுமே இணைய இயலும், மேலும் இணைய இயலாதவர்களுக்கு கீழே உள்ள குரூப் 2-வில் இணையலாம்.
WhatsApp குரூப் - 2 (Link 🔗) : https://chat.whatsapp.com/GDnymYotWk17OOzVMs8bm5
குரூப் 2-ல் 1025 நபர்கள் மட்டுமே இணைய இயலும், மேலும் இணைய இயலாதவர்களுக்கு கீழே உள்ள குரூப் 3-வில் இணையலாம்.
WhatsApp குரூப் - 3 (Link 🔗) :
https://chat.whatsapp.com/Cxrpe0DOQXO7Zukpgc6ZVk
மேலும், Social media Channel-ல் இணைய விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள Link மூலமாக இணைந்து கொள்ளலாம்.
Pinterest : https://in.pinterest.com/trenddevotional
Youtube : https://www.youtube.com/
Instagram: https://www.instagram.com/trenddevotional
Telegram : https://t.me/TrendDevotional
X : https://x.com/TrendDevotional
இந்த தகவல் வாயிலாக உங்கள் நண்பர்களும் பயன்பெற ஷேர் செய்து உதவுங்கள். நன்றிகள்🙏
rahu kethu peyarchi 2025, ராகு கேது பெயர்ச்சி, rahu kethu peyarchi 2025, rahu kethu peyarchi, rahu ketu peyarchi palangal, ragu kethu peyarchi in tamil, ராகு கேது பெயர்ச்சி 2025, கேது பெயர்ச்சி 2025, ராகு பெயர்ச்சி 2025, ராகு கேது பெயர்ச்சி 2025 , raghu - kethu peyarchi palangal, rahu ketu transit 2025 in tamil, ragu kethu peyarchi 2025, ragu kethu peyarchi in tamil 2025

 #மீனம்  🐠மீனம் ராசி     தங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் ராகுவும் எட்டாம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்க இருக்கின்றார்கள்...
05/03/2022

#மீனம் 🐠மீனம் ராசி

தங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் ராகுவும் எட்டாம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்க இருக்கின்றார்கள்.

ராகு-கேதுவின் சஞ்சார நிலை தங்களுக்கு சற்றும் ஏற்றதாகவே இல்லை.

ஏப்ரல் 13 முதல் குருவானவர் தங்கள் ராசியில் சஞ்சரிக்க இருப்பதும் தங்கள் நிலையில் பின்னடைவு ஏற்பட காரணமாக அமையும்.

எனினும் தங்கள் ராசிக்கு பதினோராம் இடமாகிய லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரித்து வருவதன் மூலம் அசாத்தியமான சூழ்நிலையும் இருந்து வரும் எடுத்த காரியங்களை சிறப்பாக முடித்து வைக்கும் பேராற்றலும் தங்களுக்குள் இருந்து வரும்.

தொழிலில் சுமுகமானதொரு சூழ்நிலை இருந்து வரும். சுப காரியங்களும் நல்லபடியாய் நடந்தேறும்.

| #പൂരുരുട്ടാതി | #பூரட்டாதி | #పూర్వాభాద్ర| #पूर्वभाद्रपदा | | #ഉത്രട്ടാതി | #உத்திரட்டாதி | #ఉత్తరాభాద్ర | #उत्तरभाद्रपदा | | #രേവതി| #ரேவதி | #రేవతి| #रेवती

 #கும்பம் 🧁கும்ப ராசி       தங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகுவும் ஒன்பதாம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்க விருக்கின்றா...
05/03/2022

#கும்பம் 🧁கும்ப ராசி

தங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகுவும் ஒன்பதாம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்க விருக்கின்றார்கள்.

மூன்றாம் இட ராகுவால் நன்மை உண்டு. ஆனால் ஒன்பதாமிட கேதுவால் நன்மையில்லை.

3மிட ராகுவால் நினைத்த காரியங்கள் நற்பலனைத் தரும். சுகபோகம் மேம்படும். வாகன யோகம் கிட்டும்.

ஏப்ரல் 13 முதல் தங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

தனநிலை மேம்படும் சுபகாரிய பிராப்தம் கிட்டும்.

தொழில் நிலை மேம்படும்.எனினும்,தங்கள் ராசிக்கு 12மிடமாகிய விரய ஸ்தானத்தில் சனியானவர் சஞ்சரித்து வருவதன் மூலம் சற்று நிதானமுடன் செயல்படவேண்டிய நிலையிலும் இருக்கின்றீர்கள்.

| #അവിട്ടം | #அவிட்டம் | #ధనిష్ఠ | #धनिष्ठा | | #ചതയം | #சதயம் | #శతభిష | #शतभिषक्
| #പൂരുരുട്ടാതി | #பூரட்டாதி | #పూర్వాభాద్ర| #पूर्वभाद्रपदा

 #மகரம் 🐊மகரம்ராசி      தங்கள் ராசிக்கு 4 மிடத்தில் ராகுவும் 10மிடத்தில் கேதுவும் சஞ்சரிக்க இருக்கின்றார்கள். கேந்திரங்க...
05/03/2022

#மகரம் 🐊மகரம்ராசி

தங்கள் ராசிக்கு 4 மிடத்தில் ராகுவும் 10மிடத்தில் கேதுவும் சஞ்சரிக்க இருக்கின்றார்கள். கேந்திரங்களில சஞ்சரிக்கும் ராகு கேதுவால் தங்களுக்கு சற்றும் நன்மை இல்லை.

ஏற்கனவே தங்கள் ராசியில் சனி சஞ்சரித்து வருவதும் தங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. ஏப்ரல் 13 முதல் குருவின் சஞ்சாரமும் தங்களுக்கு உகந்ததாக இல்லை.

எனவே, எந்த ஒரு செயலிலும் "ஆழம் தெரியாமல் காலை விடாதே" என்ற பழமொழிக்கேற்ப செயலாற்ற வேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றீர்கள்.

தங்கள் ராசிநாதனாகிய சனிபகவானை வழிபட்டு வருவதன் மூலம் நற்பலன்களை அடையும் வாய்ப்புகளும் தங்களுக்கு உண்டு.

| #ഉത്രാടം | #உத்திராடம்| #ఉత్తరాషాడ | #उत्तराषाढा | | #തിരുവോണം | #திருவோணம் | #శ్రావణ | #श्रवण
| #അവിട്ടം | #அவிட்டம் | #ధనిష్ఠ | #धनिष्ठा

 #தனுஷ் 🏹தனுசுராசி      தங்கள் ராசிக்கு 5 மிடத்தில் ராகுவும் 11மிடத்தில் கேதுவும் சஞ்சரிக்க இருக்கின்றார்கள். 5 மிட ராகு...
05/03/2022

#தனுஷ் 🏹தனுசுராசி

தங்கள் ராசிக்கு 5 மிடத்தில் ராகுவும் 11மிடத்தில் கேதுவும் சஞ்சரிக்க இருக்கின்றார்கள்.

5 மிட ராகுவால் நன்மை இல்லை ஆனால் 11 மிட கேதுவால் நற்பலன்கள் மேலிடும். இதனால் தன தான்ய லாபமும் பூமி லாபமும் உண்டாகும்.

எனினும் தங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சனி சஞ்சரித்து வருவதன் மூலம் தாங்கள் ஏழரைச் சனியின் இறுதிகட்ட பிடியில் இருந்து வருகின்றீர்கள்.

ஏழரைச் சனியின் பிடியில் இருந்து முற்றிலும் விடுபட தாங்கள் இன்னும் ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றீர்கள்.

குருவின் சஞ்சாரமும் தங்களுக்கு உதவுவதாகவே இல்லை. எனவே தாங்கள் எந்த ஒரு காரியத்திலும் பொறுமையுடனும் ஆளுமையுடனும் செயல்பட வேண்டிய கட்டாய நிலையில்தான் இருக்கிறீர்கள்.

| #മൂലം | #மூலம் | #మూల | #मूल | | #പൂരാടം | #பூராடம் | #పూర్వాషాడ | #पूर्वाषाढा
| #ഉത്രാടം | #உத்திராடம்| #ఉత్తరాషాడ | #उत्तराषाढा

 #விருச்சிகம் 🦂விருட்சிகராசி       தங்கள் ராசிக்கு 6 மிடத்தில் ராகுவும் 12-ஆம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கவிருக்கின்றார்...
05/03/2022

#விருச்சிகம் 🦂விருட்சிகராசி

தங்கள் ராசிக்கு 6 மிடத்தில் ராகுவும் 12-ஆம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கவிருக்கின்றார்கள்.

ஆறாமிட ராகுவால் அற்புதம் பல உண்டாகும். ஆனால் 12 மிட கேதுவால் நன்மை இல்லை.

தங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சனி சஞ்சரித்து வருவதும் ஏப்ரல் 13 முதல் தங்கள் ராசிக்கு 5மிட மாகிய யோக ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்க இருப்பதும் தங்கள் வளமான வாழ்க்கைக்கு வளம் சேர்ப்பதாகவே அமைகின்றது.

இதனால், சகல காரிய சித்தி உண்டாகும்.மனைதனில் மங்களம் உண்டாகும். சுபகாரியங்கள் கச்சிதமாய் நடந்தேறும்.தொழில் சார்பான முயற்சிகள் நற்பலனைத் தரும்.ஸர்வ சத்ரு ரோக நிவர்த்தி கிட்டும்.

இதுவரை நிறைவேறாமல் இருந்து வந்த திட்டங்களும் நிறைவேறும். அபிலாசைகள் நற் பலிதமாகும்.

| #വിശാഖം | #விசாகம் | #విశాఖ | #विशाखा
| #അനിഴം | #அனுஷம் | #అనురాధ | #अनुराधा
| #തൃക്കേട്ട | #கேட்டை| #జ్యేష్ట| #ज्येष्ठा

 #துலாம் ⚖துலா ராசி    ராகு வானவர் தங்கள் ராசிக்கு 7 மிடத்திலும் கேது வானவர் தங்கள் ராசியிலும் சஞ்சரிக்கவிருப்பது தங்களு...
05/03/2022

#துலாம் ⚖துலா ராசி

ராகு வானவர் தங்கள் ராசிக்கு 7 மிடத்திலும் கேது வானவர் தங்கள் ராசியிலும் சஞ்சரிக்கவிருப்பது தங்களுக்கு உகந்ததல்ல.

ராகு- கேதுக்கள் கேந்திரங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் நற்பலன்களை வழங்குவதில்லை. சனியானவர் தங்கள் ராசிக்கு 4 மிடத்திலும் குருவானவர் ஏப்ரல் 13 முதல் தங்கள் ராசிக்கு ஆறாமிடத்திலும் சஞ்சரிக்க விருப்பதும் தங்களுக்கு சுமுகமானதொரு சூழ்நிலைக்கு கட்டியம் கூறுவதாக அமையவில்லை.

மனதில் தேவையில்லாத சலிப்புகள் ஏற்படக்கூடும்.இடம் மாறும் சூழ்நிலைகளும் ஏற்படக்கூடும். உடலில் அசௌகரியம் உண்டாகக்கூடும்.

இருப்பினும் மகாலட்சுமியின் திருவருளால் தங்கள் மனதில் நம்பிக்கையும் உற்சாகமும் தொடர்ந்து இருந்து வரும்.

| #ചിത്തിര | #சித்திரை | #చిత్త | #चित्रा
| #ചോതി | #சுவாதி | #స్వాతి | #स्वाती | | #വിശാഖം | #விசாகம் | #విశాఖ | #विशाखा

 #கன்னி 🤷🏻கன்னிராசி   ராகுவானவர் தங்கள் ராசிக்கு 8ஆமிடத்திலும் கேது வானவர் தங்கள் ராசிக்கு 2 மிடத்திலும் சஞ்சரிக்கவிருக்...
05/03/2022

#கன்னி 🤷🏻கன்னிராசி

ராகுவானவர் தங்கள் ராசிக்கு 8ஆமிடத்திலும் கேது வானவர் தங்கள் ராசிக்கு 2 மிடத்திலும் சஞ்சரிக்கவிருக்கின்றார்கள்.

இந்த இரு சஞ்சார நிலவரமும் தங்களுக்கு உகந்ததாக இல்லை. ஏற்கனவே தங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சனி சஞ்சரித்து வருவதும் தங்களுக்கு ஏற்புடையதல்ல.

எனினும் குருவானவர் ஏப்ரல் 13 முதல் தங்கள் ராசிக்கு 7மிடத்தில் சஞ்சரிக்கவிருப்பதன் மூலம் அதிர்ஷ்டகரமான நிலையை அடையவிருக்கின்றீர்கள்.

தடை பட்டு வந்த திருமணங்கள் நல்லபடியாக நடந்தேறும் புத்திர பாக்கியம் கிட்டும்.கணவன் மனைவியர்க்கிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் தீரும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். நினைத்த காரியங்களும் நிறைவேறும்.

| #ഉത്രം | #உத்திரம் | #ఉత్తరఫల్గుని | #उत्तरफाल्गुनी | | #അത്തം | #அஸ்தம் | #హస్త | #हस्त
| #ചിത്തിര | #சித்திரை | #చిత్త | #चित्रा

 #ஸிம்மம் 🦁சிம்மராசி     ராகுவானவர் தங்கள் ராசிக்கு 9 ஆம் இடத்திலும் கேதுவானவர் தங்கள் ராசிக்கு 3ஆமிடத்திலும் சஞ்சரிக்க ...
05/03/2022

#ஸிம்மம் 🦁சிம்மராசி

ராகுவானவர் தங்கள் ராசிக்கு 9 ஆம் இடத்திலும் கேதுவானவர் தங்கள் ராசிக்கு 3ஆமிடத்திலும் சஞ்சரிக்க இருக்கின்றார்கள்.

ராகுவால் நன்மை இல்லை. ஆனால், கேதுவால் நன்மை உண்டு. மேலும், குருவானவர் தங்கள் ராசிக்கு அனுகூலமற்ற நிலையில் சஞ்சரிக்க இருப்பது தங்களுடைய வழக்கமான நிலையில் சற்று தொய்வு ஏற்படும் வாய்ப்புண்டு.

புதிய முயற்சிகளில் தேக்கம் உண்டாகும். எனினும் முருகப் பெருமானின் திருவருளால் நடைமுறை நிகழ்வுகளை தொடரும்.

எதிர்பாராத நிலையில் சில விஷயங்கள் சந்தோஷத்தைத் தரும்.

| #മകം | #மகம் | #మాఘ | #मघा
| #പൂരം | #பூரம்| #పూర్వఫల్గుని | #पूर्वफाल्गुनी
| #ഉത്രം | #உத்திரம் | #ఉత్తరఫల్గుని | #उत्तरफाल्गुनी

 #கடகம் 🦀கடகராசி      ராகுவானவர் தங்கள் இராசிக்கு 10 மிடத்திலும் கேதுவானவர் 4 மிட த்திலும் சஞ்சரிக்கவிருக்கின்றார்கள். க...
05/03/2022

#கடகம் 🦀கடகராசி

ராகுவானவர் தங்கள் இராசிக்கு 10 மிடத்திலும் கேதுவானவர் 4 மிட த்திலும் சஞ்சரிக்கவிருக்கின்றார்கள்.

கேந்திரங்களில் சஞ்சரிக்கும் ராகு-கேதுக்களால் தங்களுக்கு நன்மை இல்லை.எனினும், ஏப்ரல் 13 முதல் குருவின் சஞ்சாரம் தங்களுக்கு அனுகூலமான நிலையில் இருக்கப் போவதால் எந்த ஒரு சூழ்நிலையிலும் லாபகரமான நிலையே இருந்து வரும்.

நினைத்த காரியங்கள் நிறைவேறும். சுப காரியங்கள் நல்லபடியாக நடந்தேறும்.

நிலம் சம்பந்தப்பட்ட காரியங்கள் நற்பலி தம் ஆகும். தொழிலில் மேன்மை உண்டாகும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். உடல் சுகம் மேம்படும்.

| #പുണർതം | #புனர்பூசம் | #పునర్వసు | #पुनर्वसु
| #പൂയം | #பூசம் | #పపుష్యమి | #पुष्य
| #ആയില്യം | #ஆயில்யம் | #ఆశ్లేష| #आश्लेषा

 #மிதுனம் 👫மிதுனராசி     ராகுவானவர் தங்கள் ராசிக்கு 11-ம் இடத்திலும் கேதுவானவர் தங்கள் ராசிக்கு 5ம் இடத்திலும் சஞ்சரிக்க...
05/03/2022

#மிதுனம் 👫மிதுனராசி

ராகுவானவர் தங்கள் ராசிக்கு 11-ம் இடத்திலும் கேதுவானவர் தங்கள் ராசிக்கு 5ம் இடத்திலும் சஞ்சரிக்கிவிருக்கின்றார்கள்.

11மிடமாகிய ராகுவால் தங்களுக்கு நன்மை உண்டு. ஆனால் கேதுவால் தங்களுக்கு நன்மை இல்லை. ஏற்கனவே சனியானவர் தங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் அஷ்டமத்துச் சனியாக சஞ்சரித்துக் கொண்டு பல இடையூறுகளை கொடுத்து வரும் நிலையில் குருவும் தங்கள் ராசிக்கு பத்தாமிடமாகிய தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பது தங்கள் நிலையில் சற்று பின்னடைவுகள் ஏற்படும் வாய்ப்புண்டு.

எனினும், 11ம் இட ராகுவால் எடுத்த காரியங்களில் வெற்றி அடைந்தே தீருவீர்கள். எதிர்நோக்கிய பணவரவுகள் நற் பலிதமாகும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

| #മകയിരം | #மிருகசீரிடம் | #మృగశిర #म्रृगशीर्षा
| #തിരുവാതിര | #திருவாதிரை | #ఆర్ద్ర | #आद्रा
| #പുണർതം | #புனர்பூசம் | #పునర్వసు | #पुनर्वसु

Address

Pune

Website

Alerts

Be the first to know and let us send you an email when ராகு கேது பெயர்ச்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram