22/03/2025
தொகுதி மறுசீரமைப்பு - நியாமான ஒதுக்கீடு
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திராவிட மாடல் அரசின் நாயகன் கூட்டியுள்ள இந்த வரலாறு சிறப்பு வாய்ந்த கூட்டம் மாநில சுயாட்சிக்கு ஆதரவாக எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகம் முதல் ஆளாக குரல் கொடுக்கும் என்பதை நிருபித்து உள்ளது.
தொகுதி மறுசீமைப்பு
2021 ஆம் எடுக்க வேண்டிய மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்பட வேண்டிய மறுசீரமைப்பு கொரோனா கால நெருக்கடி மற்றும் சில அரசியல் காரணங்களால் 2026 ஆம் ஆண்டு எடுக்கப்படும் என்றும் இந்த மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்னும் அறிவிப்பு தென்னிந்தியாவில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து Joint Action Committee ஒன்றை நிறுவி அதனுடைய முதல் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
தற்போது 543 தொகுதி 1971 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகையில் அடிப்படையில் உள்ளது.
அந்த சமயத்தில் மக்கள் தொகை பெருக்கம் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கிறது என்று மக்கள் தொகையை தீவிரமாக கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தீர்மானித்து போட்ட செயல்திட்டத்தை சரியாக நிறைவேற்றிய தென் மாநிலங்கள் இன்று இந்த தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தில் பாதிக்கப்படுகின்றன.
அரசியலமைப்பின் பிரிவு 82 மற்றும் 170, வின் படி மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் உள்ள இடங்களின் எண்ணிக்கை மற்றும் பிராந்திய தொகுதிகளாகப் பிரிப்பது ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.
இந்த 'எல்லை நிர்ணய செயல்முறை' பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 'எல்லை நிர்ணய ஆணையத்தால்'(Delimitation Committee) செய்யப்படுகிறது.
இதுவரை 1951, 1961 மற்றும் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.
2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி செய்யப்பட்டு இருக்க வேண்டிய மறுசீரமைப்பு அப்போது இருந்த அரசாங்கத்தால் 25 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது 2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய உள்துறை அமைச்சர் தமிழ் நாடு பாதிக்கப்படுமாறு இருக்காது என்று சொன்னாலும் மற்ற இடங்களில் தொகுதி எண்ணிக்கை உயர்த்தப்பட மாட்டோம் என்று கூறவில்லை.
இந்த நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 லிருந்து 31 ஆக குறையும்.
இது போல் இல்லாமல் தமிழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அப்படியே வைத்துக் கொண்டு மற்ற மாநிலங்களில் மறுவரையறை செய்து 848 என்று கொண்டு வரும் போது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்
ஜனநாயகம் என்பது 'மக்களால் ஆட்சி அல்லது அரசாங்கம்' என்று பொருள். இதன் பொருள், 'ஒரு குடிமகன் - ஒரு வாக்கு - ஒரு மதிப்பு' என்ற பரந்த கொள்கையுடன் பெரும்பான்மையினரால் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
1951, 1961 மற்றும் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவையில் இடங்களின் எண்ணிக்கை முறையே 36.1, 43.9 மற்றும் 54.8 கோடியாக இருந்தபோது 494, 522 மற்றும் 543 என நிர்ணயிக்கப்பட்டது. இது பொதுவாக ஒரு இடத்திற்கு சராசரியாக 7.3, 8.4 மற்றும் 10.1 லட்சம் மக்கள்தொகையாக இருந்தது.
தற்போதைய மறு சீரமைப்பு தென் இந்திய மாநிலங்கள் மற்றும் வடக்கில் உள்ள சிறிய மாநிலங்களான பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட், அதே போல் வடகிழக்கு மாநிலங்களும் வடகிழக்கு மாநிலங்களான உத்தரபிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பாதகமாக இருக்கும்.
எனவே இந்த பாதிப்பு அடைய கூடிய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் கூடிய இந்த கூட்டம் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் வகிக்கும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது.