28/03/2023
பெரும்பாலும் 35 வயதை கடந்தவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் உங்கள் வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது முக்கியம். இல்லையெனில், இது உயிருக்கு ஆபத்தான பல உடல்நல சிக்கலை ஏற்படுத்தலாம்.
உங்கள் ஆரோக்கியத்தில் மன அழுத்தமும் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் மன அழுத்தத்திற்கு ஏற்ப இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் நீங்கள் கவனிக்க வேண்டியது முக்கியம். நீங்கள் பின்பற்றும் தவறான பழக்கம் உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகாரிக்கும். அவை என்னென்ன பழக்கங்கள் என்று பார்க்கலாம்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த, நாம் சர்க்கரைக்கு மாற்றாகப் எதை பயன்படுத்துகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், சிலர் குறைவான சர்க்கரையைச் சாப்பிடுவதால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம் என்றும் பல நீரிழிவு நோயாளிகள் வழக்கமான சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்புகளை உட்கொள்ளலாம் என்றும் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது. இது உங்கள் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.
நாம் தூக்கத்தை அலட்சியப்படுத்துகிறோம். ஆனால், தூக்கம் நம் ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. குறைவான நேரம் மட்டுமே தூங்குவது உங்கள் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். தூக்கமின்மை இன்சுலின் சரியாகப் பயன்படுத்தும் உடலின் திறனைத் தொந்தரவு செய்கிறது. எனவே, தினமும் சரியான நேரம் தூங்காமல் இருப்பது, உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். மேலும், பல உடல்நல பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம்.
இரவில் வெகுநேரம் கழித்து உறங்கச் செல்வது, காலையில் வெகுநேரமாக எழுந்து, அலுவலகத்திற்குத் தயாராகும் வேலைகளில் விரைந்து செல்வது என்பது நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. தற்போதுள்ள பிஸியான காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் காலை உணவைத் தவிர்த்து வருகிறார்கள். காலை உணவு நம் நாளை சுறுசுறுப்பாக மாற்ற உதவும். உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். காலையில் எழுந்த ஒரு மணி நேரத்திற்குள் ஏதாவது சாப்பிடுவது முக்கியம்.
உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு விறுவிறுப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஓட்டம் மற்றும் ஜாக