Sri Velava Tours And Travels

Sri Velava Tours And Travels ஆன்மிக அதிசய தகவல்கள், பரிகாரங்கள், கோவில்கள், இவற்றை பற்றிய வீடியோக்கள் தொடர்ந்து வெளியிடப்படும்.

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகில் இருக்கும் சில கோவில்கள் எண்ணிலடங்கா புகழ்வாய்ந்தவை அதிக சக்தி வாய்ந்தவை அவற்றுள்...
17/11/2025

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகில் இருக்கும் சில கோவில்கள் எண்ணிலடங்கா புகழ்வாய்ந்தவை அதிக சக்தி வாய்ந்தவை அவற்றுள் திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவில் ரொம்பவும் சக்தி வாய்ந்தது. சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் இரவு பூஜையின்போது நான் போகும்போது அதிக கூட்டம் இல்லை சாதாரண நாளில் சென்றேன். லலிதாம்பிகை அம்மனை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். இந்த அம்பிகையை மனமார தரிசித்தேன். அப்படி ஒரு அமைதி நிலவியது இவர் சன்னதியில். நல்லதொரு அதிர்வலைகளை கொடுத்தது கூட்டம் வேறு இல்லை என்பதால் ரொம்பவும் மனதுக்கு அமைதியாய் இருந்தது. இப்படி ஒரு அருமையான மனதுக்கு மகிழ்வான ஒரு தரிசனத்தை நான் வாழ்நாளில் கண்டதில்லை. அற்புதம் என்றால் அப்படி ஒரு அற்புதம் இந்த கோவில். இக்கோவிலில் கடுமையான சக்தி உள்ளது என்பதை எனது மனது உணர்த்தியது.

வைஷ்ணவி தேவி ஆலயம் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் திரிகூடமலையில் உள்ள சக்தி வழிபாட்டில் ஒரு முக்கிய அங்கமாக திகழும் இந்த கோவ...
14/11/2025

வைஷ்ணவி தேவி ஆலயம் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் திரிகூடமலையில் உள்ள சக்தி வழிபாட்டில் ஒரு முக்கிய அங்கமாக திகழும் இந்த கோவிலில் உள்ள வைஷ்ணவி தேவி அன்னை பார்வதியின் அம்சம் ஆவாள்.

இவளை வணங்கினால் சகல சம்பத்துகளும் நம்முடைய கர்மாப்படி கிடைக்கும். வைஷ்ணவி தேவி புகழ்பரப்பும் வகையில் அவரின் படம் போட்ட காசு ஒன்றை சில வருடங்கள் முன் இந்திய அரசு வெளியிட்டது. பரவலாக தற்போதும் கைகளில் புழங்க கூடிய இந்த காசு கைகளுக்கு கிடைத்தால் வாங்கி சக்தி வழிபாடுகள் பூஜைகள் செய்து அந்த காசை பர்ஸில் வைத்துக்கொள்ளுங்கள் செலவு செய்யாதீர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார ரீதியில் சுபிட்சம் கிடைக்கும். இந்த காசை கொடுத்தால் அவ்வளவு இவ்வளவு கிடைக்கும் என சொல்வார்கள் அதை எல்லாம் நம்ப வேண்டாம். முழு மனதுடன் வைஷ்ணவி தேவியை வேண்டி பர்சுக்குள் வையுங்கள் நல்லதே நடக்கும்.

இராமநாதபுரத்தில் உள்ள வழி விடு முருகன் கோவில் புகழ்பெற்றது. இங்கு மூலஸ்தானத்தில் அண்ணன் விநாயகரும் தம்பி முருகனும் இணைந்...
13/11/2025

இராமநாதபுரத்தில் உள்ள வழி விடு முருகன் கோவில் புகழ்பெற்றது. இங்கு மூலஸ்தானத்தில் அண்ணன் விநாயகரும் தம்பி முருகனும் இணைந்து காட்சியளிக்கின்றனர். இது ஒரு அரிதானது.

ஒரு காலத்தில் இந்த கோவில் இருந்த இடத்துக்கு அருகில் கோர்ட் இருந்தது. கோர்ட்டுக்கு செல்பவர்கள் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என வேண்டி இங்கு வைத்திருந்த வேலுக்கு கற்பூரம் காட்டி செல்வார்களாம். பலருக்கு வழக்கில் வெற்றி கிடைத்ததன் அடிப்படையில் பின்னாட்களில் இங்கு கோவில் எழுப்பப்பட்டது. கோவிலை இராமநாதபுரத்தை சேர்ந்த கணபதி சேர்வை என்பவர் கட்டினார். இன்று இராமநாதபுரத்தின் முக்கிய கோவில்களில் ஒன்றாக நகரின் முக்கிய அடையாளமான கோவிலாக இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகிலேயே உள்ளது. இங்கு உள்ள சாயா மரம் தல விருட்சம். இது சனீஸ்வர பகவானின் அம்மாவாக பார்க்கப்படுகிறது. இந்த சாயா மரம் தமிழ்நாட்டில் எந்த கோவிலிலும் ஸ்தல விருட்சமாக இல்லை. இலங்கையில் சில கோவில்களில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்ரீவேலவா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்கீழக்கரை மற்றும் இராமநாதபுரம்97865455026382908287 அணுகவும்
25/11/2022

ஸ்ரீவேலவா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்
கீழக்கரை மற்றும் இராமநாதபுரம்
9786545502
6382908287 அணுகவும்

தாங்கள் மனதில் நினைக்கும் அனைத்து விதமான ஊர்களுக்கும் பேக்கேஜ் டூர்கள் செய்து தரப்படும். ஆன்மிக டூர்ஸ், ஹனிமூன் டூர்ஸ், ...
25/11/2022

தாங்கள் மனதில் நினைக்கும் அனைத்து விதமான ஊர்களுக்கும் பேக்கேஜ் டூர்கள் செய்து தரப்படும். ஆன்மிக டூர்ஸ், ஹனிமூன் டூர்ஸ், ஜாலி டூர்ஸ், இந்தியாவில் உள்ள ஊர்கள் இலங்கை மலேசியா, சிங்கப்பூர் என அனைத்து நாடுகள் என செய்து தரப்படும்
அணுகவும்
அபிராம் அருணாச்சலா
9786545502
6382908287

25/11/2022

108 வைணவத்தலங்களில் 44வது திவ்யதேசம் திருப்புல்லாணி. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலம். ராமாயணத்துக்கு முந்தைய தலம். இங்குள்ள ஆதி ஜெகநாதரை தசரத சக்கரவர்த்தி வேண்டிய பின் தான் ராமரே பிறந்ததாக வரலாறு. ராமர் சீதையை மீட்க இங்கு தங்கி இருந்து அருகில் உள்ள சேதுக்கரையில் இருந்து இலங்கைக்கு பாலம் கட்டி சென்றதாக ஐதீகம். ராமரே பிறப்பதற்கு வரம் கொடுத்த பெருமாள் என்பதால் புத்திரப்பேறு மற்றும் கல்யாண வரத்திற்கு இங்கு வேண்டி கொள்கிறார்கள். இங்கு பெருமாளுக்கு குங்கும அர்ச்சனை செய்து 48 நாட்கள் பொட்டு இட்டு வர புத்திரப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை.மேலும் புத்திரப்பேறுக்கு இந்த கோவிலில் பாயாசம் நிவேதனம் செய்து அந்த பாயாச பிரசாதத்தை அருந்த வேண்டும். தசரதர் இக்கோவிலில் குழந்தை வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்ததால் இங்கு புத்திர காமேஷ்டி யாகமும் சந்தான கோபால கிருஷ்ணருக்கு யாகமும் செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தொடர்புக்கு:அபிராம் அருணாச்சலா-9786545502

25/11/2022

தங்கள் தாய் தந்தையர், முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு தர்ப்பணம் மற்றும் வருடாந்திர திதி, அமாவாசை தர்ப்பணம் போன்றவற்றை வெளியூர் வெளி மாநிலங்களில் சூழ்நிலை காரணமாக வர முடியாமல் இருப்பவர்கள் போன்றவர்களுக்கு ஆன்லைன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தகுந்த புரோகிதர்கள் மூலம் செய்து வைக்கப்படும்.

Address

Ramanathapuram
623517

Telephone

+919786545502

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Velava Tours And Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sri Velava Tours And Travels:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram