15/11/2025
🌿 சோனா இயற்கை நலம் திருவிழா 🌿
📅 தேதி: நவம்பர் 15 முதல் 18, 2025 வரை
📍 இடம்: ஆயுஷ் கிளினிக், சோனா வளாகம், சேலம்
🤝 இணைந்து நடத்துவோர்: ஆயுஷ் கிளினிக் & சேலம் மரபு சந்தை
இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு, இயற்கை வாழ்வையும் ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கும் வகையில் சோனா இயற்கை நலம் திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது.
இந்த விழாவில் நம்முடைய உள்நாட்டு விவசாயிகள் தாங்களே வளர்த்த ஆர்கானிக் காய்கறிகள், மூலிகைகள், மரபுக் காய்கறி விதைகள், பாரம்பரிய அரிசி வகைகள், கைவினைப் பொருட்கள், மரபுச் செடிகள், பாரம்பரிய உணவுகள் மற்றும் சிற்றுண்டிகள் ஆகியவற்றை காட்சிப்படுத்துகிறார்கள்.
மேலும், சோனா ஆயுஷ் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் பற்றிய விழிப்புணர்வும், ஆரோக்கிய ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
பொது மக்கள் ஆரோக்கியமான மற்றும் இயற்கை வழி வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளவும், இயற்கை பொருட்கள், சிறுதானியங்கள், மூலிகைச் செடிகள் மற்றும் தற்சார்பு பயன்பாட்டு பொருட்கள் ஆகியவற்றை அனுபவிக்கவும் இந்த விழா சிறந்த வாய்ப்பாக அமையும்.
🌱 அனுமதி இலவசம்!
✨ அனைவரும் வருக! ஆரோக்கியத்துடன் வாழ்க!
📞 தொடர்புக்கு: 94427 00366 | 82482 39908
#சோனா_மரபுச்சிகிச்சை #இயற்கைநலம்