28/09/2025
*⚫இரங்கல் செய்தி⚫*
27-9-25 அன்று கரூர் மாநகரில் நடைபெற்ற த.வெ.க. கட்சித் தலைவர் திரு விஜய் அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் , பெண்கள் உள்பட 39 பேர் இறந்தனர் என்ற செய்தி நம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இறந்து போன குழந்தைகள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் குடும்பத்தினருக்கு எமது சங்கம் சார்பில் ஆறுதலையும் வருத்தத்தையும் பகிர்ந்து கொள்கிறோம்.
காயமுற்று கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு கரூர் மாவட்ட அரசு மருத்துவர்கள் மட்டுமின்றி திருச்சி, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, சேலம், கோவை மாவட்டத்தில் இருந்தும் அரசு மருத்துவர்கள் ஏறத்தாழ 300+ மருத்துவர்கள் அரசு உத்தரவின் பேரில் உடனடியாக கரூரில் அயலிடப் பணியாக வந்து மக்கள் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் பணியில் எப்போதும் போலவே அரசு மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்று உறுதி கூறுகிறோம்.
அயலிடப் பணியாக வந்துள்ள அரசு மருத்துவர்களுக்கு செவிலியர், இதர மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான உரிய உண்டு, உறைவிட வசதிகளை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டுகிறோம்.
இவண்
*🛡️அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம்.SDPGA🔖*