06/05/2021
சென்ற ஆண்டு தொற்று காலத்தில் குறிப்பிட்ட மருந்து மட்டுமே பெரும்பான்மை போதுமானதாக இருந்தது.
இம்முறை தொற்றின் நோய்க்குறிகள் வெகுசிலரிடம் மாறுபடுகிறது.
அதனால் மருந்தும் மாறுபடும்.
பொதுவாக ஓமியோபதி மருந்தை ஒவ்வொரு தனிநபரின் தனித்துவமான நோய்க்குறிகள் பொறுத்தே மருத்துவர் தேர்வு செய்வார். இதனாலேயே முன்னரே இந்த நோய்க்கு இந்த மருந்து என்று ஓமியோபதி மருந்தை சொல்லயியலாது.
ஆனால் தொற்று காலங்களில் குறிப்பிட்ட நோய்க்குறிகளின் தொகுப்பே அதிகம் கானும் போது, தொடர்ச்சியாக அதிகமாக பயன்படும் சில மருந்துகளை எளிதில் அடையாளம் காணமுடியும்.
அப்படி இதுவரை விரைவான முன்னேற்றம் தந்த அதிகம் பயன்படுத்தப்பட்ட சில ஓமியோபதி மருந்துகள்.
இவற்றை தற்காப்பாக எவரும் வாங்கி வைத்துக்கொள்ளலாம்.
ஆரம்ப நிலையிலேயே மருந்து எடுத்துக்கொள்வது, தீவிரத்தன்மையை தவிர்த்து விரைவில் நலம் பெற வழிவகுக்கும்.
அசதி , காய்ச்சல், வயிற்றுப்போக்கு , பயம் - Arsenicum album 200c.
காய்ச்சல், அதிக உடல்வலி - Eupatoereum perfoliatum 200c.
1. வரட்சி - வாய், தொண்டை, மலச்சிக்கல்; 2. இவற்றுடன் காய்ச்சல், தலைவலி; 3. வரட்டு இருமல், லேசான மூச்சுத்திணறல் ~ இம்மூன்றில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட நோய்க்குறிகள் இருந்தால் - Bryonia alba 200c.
இவற்றுடன் நுகரும் தன்மை, ருசி - குறைதல்; - pulsatilla 200c or sepia 200c.
திடீர்/ தீவிர மூச்சுத்திணறல் - முழுக்க முழுக்க மருத்துவரது நேரடி ஆலோசனையை பெற வேண்டும்.
நோய்க்குறிகளுக்கேற்ப மருந்தும் அதன் அளவும் மருத்துவரின் ஆலோசனை பெற்றே எடுக்க வேண்டும்
Dr. S.சுப்புலட்சுமி
9597412105
மின்னஞ்சல் kavinhomeopathyclinic@gmail.com.