05/07/2024
வீட்டுல ட்ராகன் ப்ரூட்னு ஒண்ணு வாங்கி வெச்சிருந்தாங்க,
இதை பழக்கடையில பாத்திருக்கேன்,
ஆனா இது பழமா இல்லை காய்கறில எதாவதொண்ணானு ஒரு சந்தேகம்,
எனக்கு இந்த மாதிரி புது விசயங்களைப் பார்த்தா ஒரு பயம் இருக்கும்,
ஏன்னா என்னன்னு தெரியாம,
எதாவது செஞ்சு அசிங்கப்படக் கூடாதுன்னு ஒரு எச்சரிக்கை உணர்வு
அதனால பாத்துட்டு நகர்ந்திருவேன்.
அப்படியும் ஒருதடவை ரொம்ப காலத்துக்கு முன்னால ஹோட்டல்ல போய் உட்கார்ந்தேன்,
சாப்பிடறதுக்கு கேட்டாங்க
சொல்லிட்டேன்.
சாப்பாடு வர்றதுக்கு முன்னாடி ஒரு கப்புல எலுமிச்சை போட்டு கப் நெறய தண்ணி வெச்சாங்க,
எனக்கு ஒரே குழப்பம்
ஒருவேளை சாப்பிடறதுக்கு முன்னாடி லெமன் ஜுஸ் எதாவது தர்றானா குடிக்கறதுக்குனு,
ஆனா நாமதான் ஆர்டர் பண்ணலையேனும் தோணுது
ஒரே கன்ப்யூஸ்ல உட்கார்ந்துட்டு இருந்தேன்,
அதுக்குள்ள சர்வர் வந்தவரு அதை எடுத்துட்டுப் போய்ட்டாரு,
என்னடா இது அவங்களே வெச்சாங்க,
அவங்களே எடுத்துட்டுப் போய்ட்டாங்கன்னு மறுபடி கன்ப்யூஸ்,
அப்புறம் ரொம்ப பின்னாடிதான் தெரிஞ்சுட்டேன்
அது கைகழுவ வெச்சதாம்
நல்லா குடுக்கறீங்கடா டீட்டெய்லுனு நெனச்சுட்டேன்.
இது மாதிரி எதுவும் நடந்திறக் கூடாதுன்னுதானு புது ஐட்டங்கள் பக்கம் போறதேயில்லை,
இப்ப வீட்டுல ட்ராகன் பழத்தை கட் பண்ணிக் குடுத்தாங்க,
சாப்பிட்டுப் பார்த்தேன்,
அப்பத்தான் தெரிஞ்சுது
" அட இது நம்ம சப்பாத்திக்கள்ளி "
அப்படீனு
சின்ன வயசுல ஸ்கூல் லீவுல வேலி வேலியா தேடிட்டுப் போய் சப்பாத்திக் கள்ளி பழத்தை பறிச்சு,
( அதுல இருக்கற முள்ளு கையில ஏறிடும் அது தனி வலி )
அதுல இருக்கற முள்ளை சுத்தம் பண்ணி
ரெண்டா பிளந்து
டார்க் பிங்க் கலர்ல அந்தப் பழத்தை சாப்பிட்ட அனுபவங்கள் நியாபகத்துக்கு வந்திருச்சு
ஆனாலும் சப்பாத்திக்கள்ளிப் பழத்தை ஒப்பிடும் போது இந்தப் பழத்தோட ருசி குறைவுதான்.
புதுசா பழங்களை கண்டுபிடிக்கறாங்களா
இல்லை வேற நாட்டுல
இதே சப்பாத்திக்கள்ளி இப்படி இருந்து அதை இங்க கொண்டு வந்தாங்களானு தெரியல
சோறு வைக்கறது பெரிசில்ல
அதுக்குப் பேரு வைக்கறதுதான் பெரிசு
நல்லா வெச்சீங்கடா பேரு