கும்பகோணம் நண்பர்கள் Kumbakonam nanbargal

  • Home
  • India
  • Tamizhagam
  • கும்பகோணம் நண்பர்கள் Kumbakonam nanbargal

கும்பகோணம் நண்பர்கள் Kumbakonam nanbargal கும்பகோணம் நண்பர்கள்

The most excited   is set to grace the screens on Mar 15th. Get ready to witness an interesting content in Big Screens  ...
02/03/2024

The most excited is set to grace the screens on Mar 15th. Get ready to witness an interesting content in Big Screens



Dir by N.A. Rajendra Chakravarthi

.prabhuthilaak

கற்றதினால் ஆய பயன் என்ன? # கற்றலினால் ஆன பயன்தான் என்ன ?? ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பத...
03/01/2021

கற்றதினால் ஆய பயன் என்ன?

# கற்றலினால் ஆன பயன்தான் என்ன ??

ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..

26.09.2014 இல் டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெண்மை நிற புலி இளைஞனை கொன்றது.

கற்றலினால் ஆன பயன் என்ன?

ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி முறை நமக்கு கற்றுக்கொடுக்கவேயில்லையே..

ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது.

பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள்..
கூச்சலிடுகிறார்கள்...

அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.

இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

காரணம்..அறிவின்மை..

என்ன செய்வது என்கிற அறிவின்மை.

மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.

கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.

இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல்..

(a+b)2 =a2 + 2ab + b2

என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?

ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்..

அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன் ????

அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும்.

இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன ???

தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.

மற்றவர்களை மதிப்பது எப்படி..?

மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?

சாலை விதிகள் என்ன?

ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்?

அடிப்படைச் சட்டங்கள் என்ன?

நமக்கான உரிமைகள் என்ன?

காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?

விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது?

விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது?

மாரடைப்பு வந்தால் என்ன செய்வது?

நோய்களை எவ்வாறு கண்டறிவது?

எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?

மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது?

கணவனிடம் எப்படி நடந்து கொள்வது?

மற்றவர்களை நேசிப்பது எப்படி?

நேர்மையாய் இருப்பது எப்படி?

இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?

இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..

இனித் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே..

ஒரு வெண் புலி, உன் வாழ்க்கையை இருளாக்கிவிட்டது

படித்ததில் பிடித்தது!

👍

Swamimalai ....
23/11/2018

Swamimalai ....

18/11/2018
29/06/2018
வெள்ளை  #விஷம் ...நேற்று யதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..ரொம்ப நாளா எனக்கு இருந்த...
21/04/2018

வெள்ளை #விஷம் ...
நேற்று யதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..
ரொம்ப நாளா எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்..
" முன்பெல்லாம் ஒரு தெருவிலே நிறைய வீடுகளில் பசு இருக்கும். மேய்ச்சலுக்கு ஆள் வரும். எருமைகளும் நிறைய ... பசும்பாலுடன் எருமை பாலை கலந்து விற்பது சாதாரணமாக நடக்க கூடியது. கூடிப் போனா தண்ணீர் கலப்பார்கள்..
மக்கள் தொகை குறைவாக இருந்த அந்த காலங்களில் கூட காலை, மாலை இரு வேளைகளில் தான் பால் கிடைக்கும். ஏதாவது கல்யாணம் காட்சி என்றால் .. கோனார்களிடம் முன்பே சொல்லி வைக்க வேண்டும். சில வேளைகளில் பாலுக்கான Demand மிக அதிகமாக இருக்கும்.. குழந்தைக்கு பால் கிடைக்கவில்லை என்றால் நிறைய பால் பௌடர்கள் புழக்கத்தில் இருந்தன..
ஆனால் இப்போ நிலைமை வேறு.. எல்லா இடமும் அபார்ட்மெண்ட் வீடுகள் .. மேய்ச்சல் நிலம் எல்லாம் கான்க்ரீட் மயம்..விவசாய குடும்பங்களே மாடு வளர்ப்பதில்லை... என்னதான் வெண்மை புரட்சி , ஜெர்ஸி பசுக்கள், முர்ரா எருமைகள் என்றாலும் இப்போதுள்ள மக்கள் தொகைக்கு 24 X 7 பால் பாக்கெட் கிடைக்கிறது என்றால் logic இடிக்குதே.. கண்ணு போட்டா தானே மாடு பால் தரும். அவ்வளவு கண்ணு இருந்தா மாடுகள் எண்ணிக்கை எங்கேயோ போயிருக்கணுமே ... எப்படிங்க இவ்வளவு பால் கிடைக்குது ???
"" தம்பி.. நீங்க எந்த உலகத்திலே இருக்கீங்க.. எல்லாம் 20:50:30 தான்.."
"அப்படின்னா "
" 20 % தாங்க மாட்டு பால்.. 50% சோயா பால், மிச்சம் தண்ணி தான்.. நம்மூர்ல கூட சோயா பால் factory இருக்குதே .. தெரியாதா??.. இருக்குற மாடுகளை வச்சிட்டு மாட்டு பால் மட்டும் கொடுத்தா ஆளுக்கு ஒரு ஸ்பூன் பால் கூட கிடைக்காது.. நம்ம ஊர்ல இருந்து தினசரி 80000 லிட்டர் பால் சென்னைக்கு வேற அனுப்பனும்.. சொசைட்டி உத்தரவு.. எப்படி முடியும்??"
எந்த தண்ணிய ஊத்துவீங்க ...
ஹி .. ஹி .. ஊருணி, குளம் , கம்மா தண்ணி தான்.. பின்ன Aquafina வாங்கியா ஊத்த முடியும்..
இல்ல.. பால் சொசைட்டில இந்த லாக்டோமீட்டர் எல்லாம் வச்சு பாக்க மாட்டாங்க ??
பாப்பாங்க ..
அப்புறம்
பாப்பாங்க .. அவ்வளவு தான் தம்பி.. லாக்டோமீட்டர்லாம் பழசு.. வேற என்னென்னமோ டெஸ்ட் எல்லாம் பண்ராங்க இப்ப....
சரி.. அப்போ எல்லா பாக்கெட் பாலும் அப்படி தானா ??
அப்படி சொல்ல முடியாது..
அதெல்லாம் ratio கொஞ்சம் வித்தியாசப்படும் . அவ்வளவு தான்.. ஆனா மாட்டு பால் 20% - 30% தான் தம்பி.. அது போக detergent, ஸ்டார்ச், சோடியம் ஹைட்ராக்சைடு, கொஞ்சம் யூரியா.. இன்னும் என்னன்னவோ ..
சின்ன புள்ளைங்க இந்த பாலை குடிச்சு ... யோவ் .. சோயாக்கே நிறைய side effects இருக்குய்யா .. கொஞ்சம் கூடுச்சின்னா ஆஸ்த்மா .. அலர்ஜி .. Erectile dysfunction, ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி, பெண்களுக்கு ஹார்மோன் imbalance ..
அதுக்கு ...??
அப்புறம் நாங்க சுத்தமான பசும் பால் சாப்பிடணும்னா ??
நீங்க தான் பசு மாடு வளர்க்கணும்..
சரி.. இதுக்கே இப்படி சொல்றீங்களே..
வெள்ளி செவ்வாய்க்கு கடை வாசல்கள்ல உடைக்கிற தேங்காய்களை அள்ளி ஹோட்டல்களுக்கு தர்ற கான்ட்ராக்ட் .,
பெரிய ஹோட்டல்கள்ல ஓரு தடவை பூரி சுட்ட எண்ணெய் வாங்கி ரோட்டு கடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட், கோழி கடைகள்ல மிச்சமாகிற தலை, குடல் வாங்கி சால்னா கடைகளுக்கு கொடுக்குற கான்ட்ராக்ட் , கிராமங்கள்ல நோய்வாய் பட்ட ஆடுகளை சல்லிசா வாங்கி கறிகடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட் ... இப்படி நிறைய இருக்கு தம்பி.. முன்னாடில்லாம் ஊர்ல ஒருத்தன் ரெண்டு பேருக்கு கேன்சர் வரும்.. இப்போ ஒவ்வொரு பெரிய ஆசுபத்திரிலேயும் போய் பாருங்க ..
நன்றி பலரும் அறிய செய்யுங்கள்

நன்றி பாச்கர் செயராம்..புறம் பேசாதீர்!படிக்கவேண்டிய கதை!!காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி. அவர் த...
18/12/2017

நன்றி பாச்கர் செயராம்..

புறம் பேசாதீர்!

படிக்கவேண்டிய கதை!!

காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.

ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார். மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான். மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான்.

மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், ‘மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா?. அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு!’ என்று கூறி விட்டு போய்விட்டார்.

மன்னன் நடுங்கி விட்டான். தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருந்தினான்.
தான தர்மங்கள் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான். அரண்மனை ஆடம்பர சுகத்தை மறந்தான். தன் நாட்டிலுள்ள இளம்பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பிவைத்தான். இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.

அரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டி விட்டனர். ‘மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்’ என்று திரித்துக் கூறினர். இப்படியாக பல விமர்சனங்கள் வந்தவண்ணமிருந்தன.

ஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள். அந்த கணவன், ‘நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?’ எனக் கேட்டான்.
‘அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு’ என்று பதிலளித்தாள் அந்தப் பெண்.
அதற்கு அவளது கணவன், ‘ஓ! தானம் கொடுப்ப தாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா?’ என்றான். அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாயைப் பொத்தினாள்.

பின் மெதுவாக தன் கணவனிடம் கூறத்தொடங்கினாள். ‘சுவாமி! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்பதற்காக தயாரானது. அவ்விஷயம் மன்னனுக்குத் தெரிய வரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு, கன்னியருக்கு தானதர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறான்.

ஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசி கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள். மேலும் அடுத்தப் பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள்’ என்று கூறினாள். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அவளது கணவன்.

தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும்.

உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக்கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக்கொள்கிறார்கள். அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.

நாம் செய்த பாவத்தை சுமக்கவே, நமக்கு இந்த ஒரு பிறவி போதுமா என்பது தெரியாத நிலையில், தேவையில்லாமல் புறம்பேசி அடுத்தவரின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன!

-படித்ததில் பிடித்தது.

குடந்தை சங்ககாலச் சோழரின் செல்வக் கருவூலம்!சங்ககாலத்தில் சோழர்கள் தம் நாட்டுமக்கள் தந்த வரிப்பணத்தை இந்தக் குடந்தை நகரில...
09/10/2017

குடந்தை சங்ககாலச் சோழரின் செல்வக் கருவூலம்!

சங்ககாலத்தில் சோழர்கள் தம் நாட்டுமக்கள் தந்த வரிப்பணத்தை இந்தக் குடந்தை நகரில் வைத்துப் பாதுகாத்துவந்தனர். அதை இப்போதும் நிரூபிக்கும் வகையில் வரி வருவாயை மாவட்ட தலைநகர் தஞ்சைக்கு நிகராக வழங்கி வருகிறது குடந்தை நகரம். ஆனால் அரசு குடந்தை முன்னேற்றதிற்கு பெரிதாக எந்த முனைப்பும் காட்டவில்லை. மகாமகம் என்ற திருவிழா இல்லையென்றால் இவர்கள் குடந்தையை முற்றிலும் புறக்கணித்து இருப்பார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக காவிரியில் தண்ணீர் வரவில்லை, விவசாயம் சிறப்பாக இல்லை, என்றாலும் கூட குடந்தை சிறப்பாகவே இயங்கி கொண்டுள்ளது.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாமல் இவ்வளவு கோவில்கள் அமைந்திருப்பது குடந்தையில் தான். சுற்றுலாவில் அரசு இன்னும் கவனம் செலுத்தினால் வருடம் முழுவதும் பணம் கொழிக்கும் தொழிலாக இருக்கும்.

அதே போல் படித்த இளைஞர்கள் பிழைக்கு இங்கு பெயருக்கு கூட ஒரு நிறுவனமும் இல்லை. அதனால் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சில SIPCOT எங்களுக்கு வேண்டும்.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் கொண்டு வந்து எங்கள் வளங்களை அழிக்க முடியும் போது தாராளமாக ஐடி, பிபிஓ நிறுவனங்கள் இங்கு வரலாம்.

டெல்டா மாவட்டத்திற்கு வரும் எந்த பெரும் வர்த்தக நிறுவனமும் அதன் கிளையை தொடங்க முதலில் தேர்ந்தெடுப்பது கும்பகோணத்தை தான். தனியார் நிறுவனத்திற்கு தெரிகிறது எங்கு மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகமாக உள்ளது என்று. எப்படி அரசிற்கு இது தெரியாமல் போனது?? அல்லது தெரிந்தும் ஏன் இந்த புறக்கணிப்பு??

10/06/2017

Address

Kumbakonam
Tamizhagam
612302

Telephone

7373934513

Website

Alerts

Be the first to know and let us send you an email when கும்பகோணம் நண்பர்கள் Kumbakonam nanbargal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram