
08/01/2025
உலக அளவில் அபுதாபியில் 2024 ஆம் ஆண்டிற்கான பென்காக் சிலாட் சேம்பியன்ஷிப் ஜூனியர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு வெண்கலப்பதக்கத்தை வென்ற தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேலூர் அண்ணா நகரில் வசிக்கும் T. பீர்முகம்மது மகன் "P. முகம்மது பாசித் "என்ற பள்ளி மாணவனுக்கு 07/01/2025 அன்று மாலை 7.30 மணியளவில் SDPI கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து மாவட்டத்தலைவர் T. சிக்கந்தர் அவர்கள் கேடயம் வழங்கி கெளவுரவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மருத்துவ சேவை அணியின் செயலாளர் M. முகம்மது அஸ்கர் அலி, கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி தலைவர் சேக் முகம்மது ஒலி மற்றும் செங்கோட்டை நகரச் செயலாளர் முகம்மது அலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வாழ்த்துக்களுடன்..............
M. முகம்மது அஸ்கர் அலி
மாவட்ட செயலாளர்
மருத்துவ சேவை அணி
தென்காசி மாவட்டம்
SDPI