Namachivayam, M.A, M Phil.Astrology

Namachivayam, M.A, M Phil.Astrology Astrology is a Devine Science.

28/07/2022

அனைத்து இழப்புக்களிலிமிருந்தும் மீண்டு வர என் மூதாதையர்களும் ஈசனும் துணை புரிய திருவையாற்றில் குடிகொண்டிருக்கும் ஐயாறப்பனை ஆடி அமாவாசை நன்னாளில் வேண்டுகிறேன்.

15/03/2022

Basic level intraday strategy using ichimoku

01/11/2021

K.S.K அவர்களுக்கு நமஸ்காரம்.

05/10/2021

மீள் பதிவு.

எங்கள் வீட்டில் ராதை?
30/08/2021

எங்கள் வீட்டில் ராதை?

17/06/2017

நடைபெற இருக்கும்
கிரிக்கெட்
இறுதிப் போட்டியில்
வெற்றி யாருக்கு?
நம் இந்திய அணிக்கா?
எதிர் அணியான பாக்கிஸ்தானுக்கா?
ஒரு ஜி.எம்.பி பிரசன்னம்!!
கேள்வி நேரம் 17-6-2017
சனிக்கிழமை மதியம் 2.58 மணி.
கேள்வி நேரத்தில்
லக்கின உதயம்
கன்னியில் 18 டிகிரி.
புதன் ராசியில் சந்திரன் உபகிரகத்தில்.
புதன் ரிஷபத்தில்.
சந்திரன் கும்பத்தில்
இருவரும் கேந்திரம்,
எனவே கேள்விக்கு பதில் உண்டு.
சந்திரன் கேள்வியை சுட்டிக்காட்டுகிறதா?
ஆம்!
சந்திரன் கேள்வி நேர லக்கினமான கன்னிக்கு 6 ஆம் இடத்தில் (போட்டி).
போட்டிக்கான இடமான கும்பத்தில் இருந்து 3/11 பார்க்க வேண்டும்.
3 ஆம் இடமான மேஷத்திற்கு அதிபதி செவ்வாய் மிதுனத்தில்.
11 ஆம் இடமான தனுசின் அதிபதி குரு கன்னியில்! இருவரும் கேந்திரத்தில் இருக்கிறார்கள்.
எனவே இந்த போட்டியில் இந்தியா ஜெயிக்கும்!! அனைத்து வெற்றிகளும் குருஜிக்கே சமர்ப்பணம்!! வாழ்க குருஜி! வெல்க ஜி.எம்.பி!!

13/03/2017

மீள் பதிவு!!!!!!
Namachivayam Paramasivam
14 பிப்ரவரி, 08:29 AM ·
நடக்கப் போகும்
ஒரு
காரியத்திற்காக
எதிர் பார்த்திருக்கும்போது மட்டும்
இந்த
கடிகாரங்கள்
மெதுவாகவே
ஓடுவதாக
மனதில்
தோன்றுகிறது!.................10-30 மணி?
·
Suresh Kumar Suresh ஜயா வணக்கம் நம்ம பிரசன்னம் என்ன சொல்லுது?
Namachivayam Paramasivam
ஓம் ஸ்ரீ கிருஷ்ண வில்லோத்பனாய ஸ்வாஹா
கேள்வி: திருமதி.வி.கே.சசிகலா அவர்களுக்கு இன்று தண்டனை கிடைக்குமா?
தேதி: 14/02/2017 நேரம்:8:29 A.M. மாசி - 2
லக்னம்: மீனம், குரு - சனி
லக்ன பாகை: 09-30
குரு / சனி கேந்திரமாக உள்ளனர்.
3: ரிஷபம் - சுக்கிரன்
11: மகரம் - சனி
சனி / சுக்கிரன் கேந்திரம்
லக்னம், 3/11 தொடர்பு உள்ளது கேள்வியை தொடரலாம்.
சந்திரன்:
சந்திரன் 5/7 மற்றும் 1/10, 2/9, 3/8, 11/12 ஆகிய வீடுகளை காட்டுகிறார்.
சசிகலா என்று கேள்வி வந்ததால் ஏழாம் வீடு:
ஏழு: கன்னி
3: விருச்சிகம் - செவ்வாய்
11: கடகம் - சந்திரன்
செவ்வாய் / சந்திரன் கேந்திரம்.
தண்டனை கிடைக்குமா என்பது கேள்வி, அனைத்தும் கேந்திரமாக உள்ளது.
எனவே, தண்டனை கிடைக்கும். இன்னும் இரண்டு மணி நேரத்தில் விடை தெரிந்துவிடும்
குருஜிக்கு நன்றிகள்.

02/12/2016

ஒரு பர்சனல் லோன் விஷயமாக ஸ்டேட் பாங்கிற்கு போகவேண்டி இருந்தது. பொதுவாக ஸ்டேட் பாங்க் ஊழியர்களைப் பற்றி நல்ல அபிப்ராயம் கிடையாது. அதுவும் இந்த பண நோட்டு நெருக்கடி நேரத்தில் என்ன நடக்குமோ என கவலை! ஒரு ஜி.எம்.பி பிசன்னம் போட்டுப் பார்த்து விட்டு போகலாம் என ஒரு எண்ணம் வந்தது. 1-12-2016 காலை 8 மணி. 6.56 வரை விருச்சிக லக்னம். 8.56 வரை தனுசு லக்னம். பிரசன்ன நேரத்தில் லக்ன உதயம் தனுசில் 17 டிகிரி. குரு/சுக்= கேந்திரம். கேள்விக்கான பதில் உண்டு. கேள்வியைத் தொடரலாம். அடுத்து வங்கி தனுசில் இருந்து 8 ஆம் வீடு கடகம். அதற்கு 3/11 புதன்/சுக்ரன்.... இருவரும் தனுசில் லக்ன கேந்திரம். சாதகமான பதில் உண்டு. அப்பொழுதே குரு/சுக்கிரனில் பரஸ்தானம் வைத்துவிட்டேன்.(சாய்ஜி உபயம்) வங்கி மேலாளரை 11.22 (சனி/ராகு) க்கு சந்திக்க திட்டம். 11 மணிக்கு வங்கிக்குள் சென்றால் சுமார் 10 நபர்கள் மட்டுமே. ஏனென்றால் வங்கியில் பணப் பட்டுவாடா இல்லை.மேலாளர் கண் பார்வையில் அமர்ந்து அவரின் நடவடிக்கையை கவனித்துக் கொண்டிருந்தேன்.( புதிய நபர் சமீபத்தில் தான் இங்கு வந்திருக்கிறார்.எல்லோரையும் நிற்க வைத்தே பேசி அனுப்பிக்கொண்டிருந்தார் ) ஒவ்வொருவராக சந்தித்து விட்டு வந்தவண்ணமாக இருந்தனர். சரியாக 11.20 க்கு என்னை அவரே அழைத்தார். என்னுடைய தஸ்தாவேஜுக்களுடன் என்னுடைய விசிட்டிங்க் கார்டையும் சேர்த்துக் கொடுத்தேன். அவ்வளவுதான். என்னை அமரச்சொல்லி என் கோரிக்கையை ஒரு வார காலத்தில் செய்து தருவதாகவும் சொல்லிவிட்டு, ஜோதிடத்தை பற்றி பேச ஆரம்பித்து விட்டார். இடையிடையே வங்கி வாடிக்கையாளர்களையும் டீல் செய்தார். அய்யா நீங்கள் ஓய்வாக இருக்கும் நேரத்தில் வருகிறேன் எனச் சொல்லி விடைபெற்றேன். எல்லாம் ஜி.எம்.பி யின் மகத்துவம்! வளர்க ஜி.எம்.பி! குருஜிக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்!!

29/11/2016

எங்கள் பகுதியில் எந்த ஏ.டி.எம் உம் திறந்திருக்கவில்லை. எல்லாம் மூடியே கிடக்கிறது. ஒரு வேலையாக திருமானூர் போக வேண்டி இருந்தது. அங்கே ஏதாவது ஏ.டி.எம். திறந்திருக்குமா? பணம் கிடைக்குமா? என மனதில் ஒரு கேள்வி பிறந்தது. சரி.ஒரு ஜி.எம்.பி பிரசன்னம் போட்டேன். கேள்வி நேரம் காலை 9.50. லக்ன உதயம் மகரம் 12 டிகிரி. சனி/சந்த் கேந்திரம். பதில் உண்டு. கேள்வியை தொடரலாம். வங்கி/ஏ.டி.எம் 8 ஆம் இடம் சிம்மம். அதற்கு 3/11 சுக்/புத கேந்திரம். ஏ.டி.எம் இல் பணம் கிடைக்கும். புறப்பட்டுப் போனேன். எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் திறந்திருந்தது. 3 நபர்கள் நின்றிருந்தார்கள். நான்காவது நபராக நான் நின்றேன். நான் 5 நிமிடத்தில் பணம் எடுத்து திரும்புவதற்குள் சுமார் 20 நபர்கள் வரிசையில். வாழ்க குருஜி. வளர்க ஜி.எம்.பி.
விரும்பு
விரும்பு
அன்பு
ஹாஹா
ஆச்சர்யம்
சோகம்
கோபம்
கருத்துபகிர்

29/11/2016

7-7-2016 காலை 9 மணிக்கு ஒரு அழைப்பு,
அய்யா, தஞ்சாவூரிலிருந்து சாந்தி பேசுகிறேன், தங்களிடம் ஜோதிடம் பார்க்க எப்போது வரலாம்?
மாலை 5 மணிக்குள் எப்போதும் வரலாம்.
சரி, அய்யா. வருகிறேன்.
11 மணிக்கு சாந்தி எனது முன்!
என்னம்மா செய்தி?
நான் அரசுப்பணியில் இருக்கிறேன்.
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன.
அடுத்து ஒரு ஒரு கர்ப்பம் அபார்ஷன் ஆகிவிட்டது. தற்போது 3 மாத கர்ப்பமாக இருக்கிறேன். இது ஆண் குழந்தையாக இருக்குமா? என சொல்ல முடியுமா?
இல்லை அம்மா!
7 மாதத்தில்தான் என்னால் என்ன குழந்தை என்று சொல்லமுடியும். அதற்கு முன்னால் என்னால் சொல்ல முடியாது.
அய்யா. நேற்று ஒரு சித்த மருத்துவரிடம் சென்றிருந்தேன். அவர் தான் உங்களைப்பற்றி சொன்னார். அதனால் வந்தேன். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள், தயவு செய்து சொல்லுங்கள் அய்யா!
அம்மா பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல!
என்னால் 7 மாதத்திற்கு முன் சொல்ல இயலாது. தயவு செய்து சென்று வாருங்கள்.
பொய்மையும் வாய்மை யிடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின்!!

23/11/2016

1978 -79 களில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கிறது.. ஒரு குழந்தை தஞ்சை நகரத்தில் காய்கறி வியாபாரி வீட்டில், மற்றொரு குழந்தை கணபதி அக்ரஹாரத்தில் விவசாயி வீட்டில். அப்போது நான் ஜனன ஜாதகத்தையும்,எண்கணிதத்தையும் இணைத்து பலன் சொல்ல பயிற்சி செய்து கொண்டிருந்த காலம்.(Astro numarology.).............. இரண்டு குழந்தைகளுக்கும் நான் தான் பெயர் வைத்துக்கொடுத்தேன்............................................................. ஒரு பெயர் N.கிருபாஹரன், ..........................................மற்றொரு பெயர், S.கிருபா ஷங்கர்..................................... ..............................................நகரத்தில் வியாபாரி வீட்டில் பிறந்த N.கிருபாஹரன் தற்போது Cognizant-இல் Senior Consultant. .................................கணபதி அக்ரஹாரம் கிராமத்தில் விவசாயி வீட்டில் பிறந்த S.கிருபா ஷங்கர், தற்போது அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் தலைமை அதிகாரி (தற்போதும் என்னுடைய வாடிக்கையாளர்). இவை உதாரணத்திற்கு !! இன்னும் எத்தனையோ!!

Address

Ganapathi Agraharam
Thanjavur
613001

Telephone

+918220870031

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namachivayam, M.A, M Phil.Astrology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Namachivayam, M.A, M Phil.Astrology:

Share