30/04/2024
28.04.2024.
தேனி மாநகர் ஜமாத் கமிட்டி சார்பில் இலவச மருத்துவ முகாம். தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை நடத்தியது.
தேனி மாநகர் ஜமாத் கமிட்டி மற்றும் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை இணைந்து சுப்பன் தெருவில் உள்ள புது பள்ளிவாசலில் (28.04.2024) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
முகாமிற்கு மாநகர் ஜமாத் கமிட்டி தலைவர் அப்பாஸ் தலைமை தாங்கினார். தேனி நகர காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்தீபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
முகாமில் மகளிர் நலம், குழந்தைகள் நலம், சர்க்கரை நோய், எலும்பு முறிவு, தோல் நோய், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, நுரையீரல் சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, குழந்தையின்மை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்தார்கள். அனைவருக்கும் இரத்த பரிசோதனைகள், இரத்த அழுத்த பரிசோதனைகள் இலவசமாக பார்க்கப்பட்டது.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை பொதுமேலாளர் சாந்தி, விளம்பர மேலாளர் சலீம், மக்கள் தொடர்பு மேலாளர் ஷேக் பரீத், புதுப்பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சர்புதீன் ஆகியோர் செய்து இருந்தார்கள்