29/10/2023
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை, உடலில் எந்த பாகமும் வெளியே தெரியாதபடி, வாழை இலைகளால் மூடப்பட்டு அளிக்கப்படும்.
இந்த சிகிச்சைக்கு சூரிய ஒளி அவசியம்.
வாழை இலையில் பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற தாதுகளும் வைட்டமின், `ஏ, சி, கே' உட்பட ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன. உணவில் உள்ள நச்சுப் பொருள்களை வாழை இலையில் உள்ள குளோரோபில் உட்கிரகித்துக்கொள்ளும். அதேநேரத்தில் உணவின் சுவையைக் கூட்டி, செரிமானத்துக்கு உதவும். விஷப்பூச்சிகள் கடித்தால் அதற்கும் வாழை இலை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற இலைகளைவிட வாழை இலையில் ஏராளமான மருத்துவப்பலன்கள் இருக்கின்றன. சூரிய ஒளியின் ஆற்றலையும், வாழை இலையின் மருத்துவக் குணங்களையும் ஒன்றிணைத்து உடலுக்குப் பெற்றுத்தருகிறது இந்த சிகிச்சை.
உடலில் கழிவுகள் தேங்குவதால்தான் நோய்கள் உருவாகின்றன. கழிவுகளை வெளியேற்றும் முக்கியப் பணியை தோல் செய்கிறது. இதன் அடிப்படையில் வியர்வை மூலம் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுகள் வெளியேற்றப்படுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தோல்களில் வியர்வைச் சுரப்பியின் செயல்பாட்டைச் சீராக்குவதால், சருமப் பிரச்னைகள் நெருங்காது. தோல் நோய்களிருந்து காப்பதுடன் உடலுக்குப் பொலிவு கூட்டும். மெலட்டோனின் ஹார்மோனின் சுரப்பைச் சீராக்குவதால், தூக்கமின்மை பிரச்னை தீரும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவும். சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி கிடைக்கச் செய்வதால், எலும்புகள் வலுப்பெற உதவும். பெண்களுக்கான சிறுநீரகக் கோளாறுகள், கருப்பை மற்றும் சினைப்பை கட்டிகளை குணமாக்க உதவும். இதுபோன்று இதன் பலன்கள் ஏராளம்.