18/11/2025
பைல்ஸ்...!!
இந்த பிரச்சனையை பற்றி டாக்டர்கிட்ட கூட பேச தயங்குவாங்க... ஏனோ ஒரு வரக்கூடாத வியாதி வந்த மாதிரி. ஆனா.. பல பேருக்கு இது வர்ற வியாதி தான்... !!
எந்த பிரச்சனை வந்து டாக்டர் கிட்ட போனாலும் ரெஸ்ட் எடுங்கன்னு சொல்வாங்க. கை வலிச்சா கைக்கு ரெஸ்ட் குடுக்கலாம், ஏன் கண் வலிச்சா கூட கண்ணுக்கு ரெஸ்ட் குடுக்கலாம். ஆனால், இந்த இடத்துல இருக்கிற பிரச்சனைக்கு ரெஸ்டே இல்ல.. !
நிறைய பேர் நினைக்கிற மாதிரி இது சூட்டினால வருவது இல்ல. இது ஒரு “Wear and Tear” பிரச்சனை. உள்ளே இருக்கிறதை வெளியே அனுப்பவும் வெளியே இருந்து எதுவும் (அதிக வன்முறை இன்றி) உள்ளே வராம இருக்கவும் தயாரிக்கபட்ட ஆசன வால்வு அதிக பயன்பாடு அல்லது அழுத்தத்தால சேதாரம் ஆகிடுச்சுன்னா... அதான் பைல்ஸ்..!
தொடர்ச்சியான இருமல், தும்மல், பளூ தூக்குதல், கர்பத்தில் குழந்தையை சுமத்தல் மாதிரி சமயங்களில்... வயிற்றுக்கு உள் பகுதியில் ஏற்படும் அழுத்தம் காரணமா.. (Intra Abdominal Pressure) ஆசன வால்வு அழுத்தபட்டு, அது டேமேஜ் ஆக ஆரம்பிக்குது.
நம்மாளுங்க இதய வால்வு பழுதுபட்டாலே யோசிச்சு வைத்தியம் பார்ப்போம். இதையெல்லாமா கண்டுக்க போறோம். மொத்த வால்வும் புட்டுகிட்டு அப்புறமா உள்ளிருக்கும் உறுப்பு வெளியேறுற வரை காத்திருப்போம். அப்புறமா அறுவை சிகிச்சை தான்... 😢
நிறைய ஆயுர்வேத / ஹோமியோபதி மருந்துகள் பைல்ஸ் பிரச்சனையை அழகா சரி செய்யும். இந்த “Wear and Tear” அதிகமான பயணத்தினால்
அல்லது உட்கார்ந்து கொண்டே இருப்பதால் உராய்வு ஏற்பட்டும் வர கூடும். அந்த மாதிரி சமயத்துல கொஞ்சம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினாலே இது வராமல் தடுக்கலாம்.
பெரும்பாலும் மருத்துவரை சந்திப்பதை தவிர்த்து சுயமாக மருந்துகள் எடுப்பது இந்த பிரச்சனையை பெரிதாக்கும். பைல்ஸுக்கும் பவுத்திரத்துக்கும் (Fistula), அசன வாய் வெடிப்புக்கும் (A**l fissure), ஆசன வாய் கட்டிகளுக்கும் (Abscess) வித்தியாசம் தெரியாமல் பலர் இதை மருத்துவம் செய்ய தாமதிச்சு அதனால அறுவி சிகிச்சையை தவிர்க்க இயலாத சூழலுக்கு போய் விட்டுருவாங்க.
வலி அல்லது எரிச்சல் அல்லது மலச்சிக்கல் என ஆரம்ப நிலையிலேயே கவனிச்சு ட்ரீட்மெண்ட் பாக்குறதால பைல்ஸ் அதிகமா தொந்தரவு கொடுக்காம பாத்துக்கலாம். “பைலோனில் லேகியம்” பைல்ஸ்க்கு ஒரு நல்ல மருந்து.
மருந்தை ஆன்லைனில் பெற கீழே உள்ள எண்களை தொடர்பவும்.
நன்றி
Dr. M. Saravana Kumar BHMS MD
Dhanvandhiri Vaidyasala
Theni, Chennai , Thiruvannamalai, Madurai
9080052846, 9842775242
Pls visit www.dhanvandhirivaidyasalatheni.com for more details