திருவையாறு - Thiruvaiyaru

திருவையாறு - Thiruvaiyaru About Thiruvaiyaru, Health news, Health Courses, Alternative Medicines

08/09/2016

ஆணிகால் இது நரம்புக் கழிவுகளால் வருவது. அக்ரஹாரம் மூலிகையின் வேரை எழுமிச்சை பழத்தில் சொருகி வைத்து வேர் நன்கு அழுகிய பின் அதை வழித்து வைத்துக்கொண்டு தினந்தோறும் தடவி வர நல்ல பலன் கிட்டும். இம்மூலிகை தெரியாதவர்கள் அம்மாம்பச்சரிசி மூலிகை செடியை அதன் தண்டு பகுதியை உடைத்தால் வரும் பாலை தடவி வர நல்ல பலன் கிட்டும். மேலும் விபரங்களுக்கு 9443182537. மேலும் மூட்டு வலி, குடிபோதை மறக்க. கிட்னி கல் (மூன்று நாள் மருந்தில்)கரைத்து வெளியேற்றலாம். இருதய. அறுவை சிகிச்சையில்லாமலேயே சரி படுத்தலாம்.

21/08/2016

கிட்னியில் கல்லா கவலை வேண்டாம் மூலிகையின் துணையோடு 3 நாளில் கரைத்து வெளியேற்றப்படும் மேலும் மூட்டு வலி. குடிபோதை மறக்க மூலிகை மருந்து கிடைக்கும். தொடர்புக்கு 94431 82537

09/06/2016

சர்க்கரை நோயாளிகள் அதிக பட்ச சர்க்கரை அளவை குறைக்க காலையில் வெறும் வயிற்றில் நூர்கோல் காயின் சாரை 100 மிலி 2 நாட்கள் குடித்து விட்டு டெஸ்ட் பண்ணி பார்த்து மறுபடியும் சாறு குடிக்க வேண்டும். மற்றும் லவங்க பட்டை சிறு துண்டை குறட்டில் அடக்கி சாறை விழுங்க சர்க்கரை அளவு குறையும். வெண்டைக்காயை 1 நீளவாக்கில் வெட்டி இரவு தண்ணீரில் போட்டு வைத்து காலையில் உள் பகுதி சதையையும் விதை யையும் சாப்பிட்டு அந்த தண்ணீரையும் குடித்துவரலாம். ஆவாரை கசாயமும் குடித்தும் தீர்வு காணலாம்.

திருவையாறு இம்மாகுலேட் மெட்ரிக் பள்ளியில் நவராத்திரி கொழுகொண்டாட்டம். இதை ஏற்பாடு செய்த தாளாளர் அன்னைக்கு உளமா்ாந்த பாரா...
13/10/2015

திருவையாறு இம்மாகுலேட் மெட்ரிக் பள்ளியில் நவராத்திரி கொழுகொண்டாட்டம். இதை ஏற்பாடு செய்த தாளாளர் அன்னைக்கு உளமா்ாந்த பாராட்டுக்கள்.

13/10/2015

பசியை தூண்ட. 1.நாய்வேளை விதையை (நாய்கடுகு) துவையல் செய்து சாப்பிட்டால் பசியை தூண்டும். 2.எழுமிச்சை பழச்சாறு அதறகு சமஅளவு இஞ்சி சாறு கலந்து 10நிமிடம் வைத்து பின் தெளிவை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பித்தம் குறைந்து நன்கு பசியை தூண்டும். 3.பொடுதலையின் காயை வதக்கி மருந்து குழம்பு அதாவது கண்டதிப்பிலி, சதைகுப்பை, மிளகு, பூண்டு போன்றவைகளைசேர்த்து குழம்பு வைத்து சாப்பிட நன்கு பசிக்கும். 4. நாட்டு மருந்து கடையில் தீபாக்கினி சூரணம் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நன்கு பசியை தூண்டும்

03/10/2015

வசம்பு; அற்புதமான இயற்கை நமக்கு தந்த அற்புத படைப்பு.ஆம். 1. நாம் வீட்டில் வைத்திருக்கும் அரிசி பருப்பு மளிகை பொருட்களில் அளவுக்கு தகுந்தார் போல் 1 அல்லது 2 துண்டுகளை போட்டு வைப்பதால் பூச்சி தொல்லைகளிலிருந்து பாதுகாக்கலாம்.. 2. ஒரு துண்டு வசம்பை தேங்காய் எண்ணையில் சேர்த்து காய்ச்சி தலைக்கு தடவி வர பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம். 3. வசம்பை சுட்டு கரியை தேனில் மத்திச்சி சாப்பிட்டால் வாந்தி பேதி
யை உடன் நிறுத்தும். 4.மூளை நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்க உதவுகிறது. 5.வசம்பு தூளை தேனில் கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர திக்குவாய் குணமாகும். மேலும் பசியின்மை, செரியாமை, தொண்டைகம்மல் மற்றும் குழந்தைகளுக்குண்டாகிற இருமல், கபம்,சுரம், வயிற்றுவலி, கழிச்சல்,வயிற்று பொருமல் இப்படி பல்வேறு நோய்களிலிருந்து விடுதலை பெறலாம். மருத்துவர் சி.ராஜா சாக்ரடீஸ்.

15/09/2015

இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு. ஆம் நண்பர்களே. உடம்பு குண்டாக வேண்டுமென்றால் எள் சேர்த்துக்கொளள வேண்டும். உடல் இளைக்கவேண்டுமென்றால் கொள்ளு சேர்த்துக்கொள்ள வேண்டும் அளவாக வாரத்துக்கு 3தடவை. சேர்த்துகொள்ளலாம்.சித்த மருத்துவர் ராஜா சாக்ரடீஸ்

31/08/2015

கறிவேப்பிலையை நாம் சமையலி்ல (கூட்டு,பொரியல்,அவியல.ரசம்,,குழம்பு,இப்படி எல்லாவற்றிலும்) சேர்பது ஏன் ? தெரியுமா உங்களுக்கு. வாசத்துக்காகவா,ருசிக்காகவா சத்துக்காகவா(இரும்பு சத்து அதிகம்உள்ளது) அதனாலயா. இதற்கு உண்மையான பெயர் கறிவெப்ப இலை எனவேதான் சமையலி்ல் சேர்க்கும்போது உணவுபொருள்களில் உள்ள வெப்பத்தையும் குளிர்ச்சியையும் சமன் செய்து தரும் ஆற்றல் உள்ள ஒரு மூலிகையாகும் எனவேதான் சித்தர்பெருமக்கள் உணவில் கறிவேப்பிலையை எல்லா சமையலிலும் சேர்க்கும் முறையை தந்துள்ளார்கள்
உடலையும் உள்ளத்தையும் பேணி காப்போம்
சித்தமருத்துவர் ராஜா சாக்ரடீஸ்

19/05/2015

நாளிரண்டு, வாரமிரண்டு, மாதமிரண்டு, ஆண்டிரண்டு, புரியவில்லையா உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க. நாளுக்கு காலை மாலை மலம் கழிக்க வேண்டும், வாரத்துக்கு இரண்டு தடவை எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும், மாதத்துக்கு இரண்டு தடவைமட்டும் உடலுறவு கொள்ளல் வேண்டும், ஆண்டுக்கு இரண்டு தடவை பேதியாக்க வேண்டும்

04/05/2015

உடலில் இரத்தம் ஊற. முருங்கைக் கீரை சூப். முருங்கைக் கீரை இரண்டு பிடி, பூண்டு 2 பல், மிளகு 5, சின்ன வெங்காயம் 2 மிக்சியில் ஒன்று இரண்டாக அரைத்து தேவையான அளவு உப்பு 4 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி ஒரு டம்ளராக காய்ச்சி வடிகட்டி காலை மாலை தினசரி குடித்து வர உடலில் இரத்தம் ஊறி தெம்பு தரும், இரத்த சோகை போகும். கர்ப்பினி பெண்களுக்கு நல்லது.

02/05/2015

உயர் இரத்த அழுத்தம் குறைய கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், பூண்டு, உப்பு அரைத்து (தாளிக்காமல்) இட்லி, பழையதுக்கோ சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் சீராகும்.

Address

North Street
Thiruvaiyaru
613204

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருவையாறு - Thiruvaiyaru posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share