17/09/2025
அஸ்ஸலாமு அலைக்கும்🤝
வாழ்க்கை, சேங்கனூர் சம்பந்தப்பட்ட வீதிகளில் நாய்களின் அதிகரிப்பால் பள்ளிகூடத்திற்கு, பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகள் சிறு பிள்ளைகள், மற்றும் முதியோர்கள் மிகவும் நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.
தெருக்களில் விளையாடக்கூடிய நடந்து செல்லக்கூடிய சின்னஞ்சிறு பிள்ளைகளை நாய்கள் துரத்துவது வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது. எனவே நாய்களை உடனடியாக அப்புறப்படுத்தவும் அதற்கு உண்டான தடுப்பூசிகளை போடவும் வாழ்க்கை மற்றும் சேங்கனூர் ஊராட்சி செயலாளர்களிடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இன்று மனு கொடுக்கப்பட்டிருக்கிறது மனுவை பெற்றுக் கொண்ட ஊராட்சி செயலாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்கள்.
நாளை நன்னிலம் பேரூராட்சி அலுவலகத்திலும் தமுமுக சார்பாக மனு கொடுக்கப்பட இருக்கிறது. நாய்களை முழுமையாக அப்புறப்படுத்தும் வரை இந்த தன்னலமற்ற சமூக சேவையின் முயற்சிகள் தமுமுக சார்பாக தொடரும்.
இன்ஷா அல்லாஹ்
🖤🤍தமுமுக🖤🤍
வாழ்க்கை சேங்கனூர் கிளை