
06/08/2025
நம்மிடம் சிகிச்சை பெறுவோரின் பொது நலனை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஹெல்த் அண்ட் வெல்னஸ் என்ற ஆன்லைன் (session) வகுப்பானது இன்று இனிதே தொடங்கியது.
இந்த வகுப்பு ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் Dr. P.சசிப்பிரியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது .
இந்த வகுப்பில் பல் பராமரிப்பு மற்றும் வாய் தூய்மை பற்றிய கருத்துக்களை பகிர்ந்து டாக்டர் சௌமியா . மற்றும் மருந்து உட்கொள்ளும் விதம் அதற்கான கால இடைவெளி போன்ற கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் Dr. ஆன்னி கிறிஸ்டி.
உடலை வலிமைப்படுத்தும் விதம் மற்றும் உடல் சோர்வு குறைய என்ன பயிற்சிகள் இருக்கிறது என்பதை அறிமுக உரையில் கூறினார் Dr. மரியா . பின்பு உடல் வலிமையோடு மனவலிமையும் அவசியம் என்பது பற்றியும் மன அழுத்தம் கவலை பற்றி எதிர்கொள்வது எப்படி என்பதை அறிமுக உரையில் கூறினார் Dr. திலகவதி .
முடிவில் நம்மிடம் சிகிச்சை பெறுவோர் மற்றும் அவர்களின் உறவினர்கள் தங்கள் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டனர் .இந்த ஆன்லைன் session வகுப்பானது நம்மிடம் சிகிச்சை பெறுவோர் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கும் நமக்குமான இடைவெளியை குறைத்து ஒரு சுமூகமான உறவையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமையும் வகையில் திருச்சியிலே முதன்முறையாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளது நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.