Guna Ayush Hospital

Guna Ayush Hospital Preventive & Promotive Through Natural Way, We Treat The Cause Not The Symptoms

மூளை வாதம் மற்றும் மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம் – முதல் சிகிச்சையிலேயே நல்ல பலன்!எங்கள் Subamasthu Nature Care Hospi...
26/02/2025

மூளை வாதம் மற்றும் மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம் – முதல் சிகிச்சையிலேயே நல்ல பலன்!

எங்கள் Subamasthu Nature Care Hospital-க்கு அண்மையில் ஒரு நோயாளி மூளை வாதம் (Stroke) மற்றும் மூட்டு வலி (Joint Pain) காரணமாக வந்தார். அவர் நடக்க கடினமாக இருந்தது, மூட்டுகளில் கடும் வலி இருந்தது. நாங்கள் அவருக்கு இயற்கை மருத்துவத்தின் சிறப்பான முறைகளை கொண்டு சிகிச்சை அளித்தோம்.

✅ Ela Kizhi (Patra Pinda Sweda) – மூட்டுகளில் உள்ள வலி மற்றும் வாதத்தை குறைக்கும் சிறந்த சிகிச்சை
✅ Abhyanga (Oil Massage) – நரம்புகளை உற்சாகப்படுத்தி ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் தேஹ சிகிச்சை
✅ Varmam Therapy (Varmalogy) – உடலில் உள்ள முக்கியமான புள்ளிகளை செயல்படுத்தி வலி மற்றும் உறைபோக்கை குறைக்கும் சிகிச்சை
✅ Reflexology – பாதம் மற்றும் கைப்புள்ளிகளை தூண்டி நரம்பு முறையை சீராக செயல்பட வைக்கும் முறை
✅ Yoga Therapy – உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் பயிற்சிகள்
✅ Naturopathic Diet & Lifestyle Advice – உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உடல்நல உணவு வழிமுறைகள்

முதல் முறையிலேயே நோயாளிக்கு நல்லளவு நிவாரணம் கிடைத்தது. நடக்க கூட சிரமப்பட்ட இவர், சில நாட்களில் சிறிது தூரம் சுயமாக நடக்க ஆரம்பித்தார். இது இயற்கை மருத்துவத்தின் மகத்துவத்தைக் காட்டும் ஒரு சிறந்த உதாரணம்!

நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தாருக்கு இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தால், நமது Subamasthu Nature Care Hospital-ல் இயற்கை மருத்துவத்தின் மூலம் தீர்வு பெறலாம்.


மூளை வாதம் மற்றும் மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம் – முதல் சிகிச்சையிலேயே நல்ல பலன்!எங்கள் Subamasthu Nature Care Hospital-க்கு அ.....

Guna Ayush Hospital (குணா ஆயுஷ் மருத்துவமனை) affiliated by Subamasthu Nature Care Hospital (SNCH) on Google: https://pos...
12/10/2022

Guna Ayush Hospital (குணா ஆயுஷ் மருத்துவமனை) affiliated by Subamasthu Nature Care Hospital (SNCH) on Google: https://posts.gle/qMgYJW

15/08/2022
Thanks for coming
15/08/2022

Thanks for coming

09/02/2021
11/01/2018

Say no for chemical medicine make healthy future for our children's

18/02/2017

உங்களுக்கு தெரியுமா?

நமது தொப்புள் (நாபி) கடவுள் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு.
ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

அறிவியல் படி,
கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.

நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும்.
காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது.

நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா? நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.

*கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*முழங்கால் வலி*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?*

நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .

ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

*முயற்சியுங்கள். இப்படி முயற்சி செய்வதில் எந்த ஒரு கெடுதலும் இல்லை!*

ஒரு நல்ல நண்பர் இந்த மதிப்புமிக்க மற்றும் மிக பயனுள்ள தகவலை என்னிடம் பகிர்ந்துள்ளார். அவருக்கு மிகவும் நன்றி. நான் உங்களுக்கு பகிர்வதில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே!

28/01/2017

மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு நெல் ரகம்...

இந்த அரிசியை சாப்பிட்டால் சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை!

தமிழகத்தில் வழக்கொழிந்து போன ஆயிரம்,
ஆயிரம் தமிழ் பாரம்பரிய நெல் ரகங்கள்.

‘‘ஒசுவக்குத்தாலை,
சிவப்புக்குடவாழை,
வெள்ளையான்,
குருவிகார்,
கல்லுருண்டை,
சிவப்பு கவுணி,
கருடன் சம்பா,
வரப்புக் குடைஞ்சான்,
குழியடிச்சம்பா,
பனங்காட்டுக் குடவாழை,
நவரா,
காட்டுயானம்,
சிறுமணி,
கரிமுண்டு,
ஒட்டடையான்,
சூரக்குறுவை...

இதெல்லாம் நம்ம தமிழ் பாரம்பரிய நெல் ரகங்கள்.

மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு ரகம்... சாப்பிட்டா சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை!

கவுணி அரிசி நாள்பட்ட புண்ணையெல்லாம் ஆத்திடும்.

கருங்குறுவை, யானைக்காலை குணமாக்கும்.

பால்குடவாழையில சமைச்சுச் சாப்பிட்டா குழந்தை பெத்த பெண்களுக்கு பால் நல்லா ஊறும்.

தங்கச்சம்பாவை தங்க பஸ்பம்னே சொல்வாங்க.
( தங்கமே தங்கம் பாடலில் வருவதுதான்)

புயல், மழை, வெள்ளம், வறட்சி எல்லாத்தையும் தாங்கி வளர்ற ரகங்கள் ஏராளம் இருக்கு.

விதைச்சு விட்டுட்டா அறுவடைக்குப் போனா போதும்.

கடற்கரையோர உப்புநிலத்துக்கு ஒசுவக்குத்தாலை,
சிவப்புக்குடவாழை,
பனங்காட்டுக் குடவாழை.

மானாவாரி நிலங்கள்ல குறுவைக் களஞ்சியத்தையும், குருவிக்காரையையும் போட்டா காடு நிறையும்.

காட்டுப்பொன்னியை தென்னை, வாழைக்கு ஊடுபயிரா போடலாம்.

வறட்சியான நிலங்களுக்கு காட்டுயானம்,

தண்ணி நிக்கிற பகுதிகளுக்கு சூரக்குறுவை,
இலுப்பைப்பூ சம்பா...

இப்படி நுணுக்கம் பார்த்துப் போடணும்.

வரப்புக்குடைஞ்சான்னு ஒரு ரகம்... ஒரு செலவும் இல்லை. விளைஞ்சு நின்னா வரப்பு மறைஞ்சு போகும்.

இதையெல்லாம் இன்னைக்கு இழந்துட்டு நிக்கிறோம்.

விவசாயம் நசிஞ்சதுக்கு காவிரிப்பிரச்னை மட்டும்தான் காரணம்னு சொல்றாங்க.

அது உண்மையில்லை. விவசாயிகளோட மனோபாவமும் காரணம்.

எந்த மண்ணுக்கு எந்த நெல்லைப் போடணும், எப்போ போடணும்னு கணக்குகள் இருக்கு.

அதை எல்லாரும் மறந்துட்டாங்க..

புது தொழில்நுட்பம்னு சொல்லி நிலத்தை நாசமாக்கிட்டாங்க.

நம்ம இயற்கை தமிழ் விவசாயத்தை அழிச்சு, உரத்தையும் பூச்சிமருந்தையும் நம்ம மண்ணுல கொட்டுன நாடுகள், இப்போ இயற்கை விவசாயம் பண்றாங்க.

உலகத்துக்கே கத்துக்கொடுத்த தமிழர்கள் இன்று தொழில்நுட்பத்தைக் கடன் வாங்குறோம்.

திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள கட்டிமேட்டில், பழமையான ஆதிரெங்கன் கோயிலை ஒட்டியிருக்கிறது செயராமனின் குடில். குடிலைச் சுற்றிலும் பச்சைப் பசேலென உடல் விரித்துக் கிடக்கிறது வயற்காடு. தழைத்து நிற்கிற அத்தனையும் தமிழ் பாரம்பரிய ரகங்கள்.

இவர் ஒரு நாடோடியைப் போல அலைந்து திரிகிறார் தமிழர் செயராமன்.

வயற்காடுகளையும், விவசாயிகளையும் தேடி அவரது பயணம் நீண்டுகொண்டே இருக்கிறது.

தமிழகத்தில் வழக்கொழிந்து போன 10 ஆயிரம் தமிழ் பாரம்பரிய நெல் ரகங்களையும் மீட்டு, தமிழக விவசாயத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதுதான் அவரது இலக்கு.

படித்தது பத்தாம் வகுப்புதான். ஆனால் ஒரு பேராசிரியரின் தெளிவோடு விவசாயமும், விஞ்ஞானமும் பேசுகிறார்.

தமிழ் பாரம்பரிய நெல் சாகுபடி பற்றி பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பயிற்சி அளிப்பதோடு, விவசாயிகளுக்கு தமிழ் பாரம்பரிய விதைகளை இலவசமாகவும் வழங்குகிறார்.

வழக்கொழிந்து போன 63 நெல் ரகங்களை மீட்டு, வயற்காட்டுக்கு கொண்டு வந்த இவர், ‘ தமிழ் விதை வங்கி’ ஒன்றையும் நடத்துகிறார்.

அரசாங்கம் ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய ஏக்கருக்கு 30 கிலோ விதையைப் பரிந்துரைக்கிறது.

ஆனால் தமிழர் செயராமன் வெறும் 240 கிராம் போதும் என்கிறார்.

‘‘ஒவ்வொரு வருஷமும் மே மாதம் கடைசி சனி, ஞாயிறுகள்ல எங்க குடிலுக்குப் பக்கத்தில நெல் திருவிழா நடக்கும்.

நெல் உற்பத்தி முதல் விற்பனை வரை உள்ள பிரச்னைகள் பத்தி விவாதிப்போம்.

தமிழ் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி பண்ற பயிற்சிகளும் தருவோம். நிகழ்ச்சியோட இறுதியில, ஒரு விவசாயிக்கு ரெண்டு கிலோ வீதம் தமிழ் பாரம்பரிய விதைகளைக் கொடுப்போம்.

ஒரே ஒரு கண்டிஷன். 2 கிலோ விதையை வாங்கிட்டுப் போறவங்க, அதை சாகுபடி பண்ணி அடுத்த வருஷம் நாலு கிலோவா தரணும்.

இந்த வருஷம் நடந்த நெல் திருவிழாவுல 1860 விவசாயிகளுக்கு விதை கொடுத்திருக்கோம்’’ என வியக்க வைக்கிறார் தமிழர் செயராமன்.

இதைத்தான் பழங்கால தமிழர்கள் சோழர் காலத்திலயும் செஞ்சிருக்காங்க.

இவர்களை போன்றவர்களை அரசு உக்குவிக்காது, பாராட்டாது.

நீங்களாவது பகிருங்கள். அனைவரும் அறிய உதவுங்கள்.

24/11/2016

*🍋மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்கு பயன்படும்.🍋(பொடி என்பது பச்சை இலை போன்றவை உலர்த்தி யது மற்றவை நேரிடையாக ,கிடைக்கும் பொடி)🍋
*பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*✳அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*✳நெல்லிக்காய் பொடி* பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*✳கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*✳வில்வம் பொடி* அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*✳அமுக்கலா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*✳சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*✳வல்லாரை பொடி* நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*✳தூதுவளை பொடி* நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*✳துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*✳ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*✳கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*✳ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*✳ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*✳ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*✳திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*✳வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*✳நிலவாகை பொடி*
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*✳நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*✳கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*✳வேப்பிலை பொடி* குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*✳திரிபலா பொடி* வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*✳அதிமதுரம் பொடி* தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*✳துத்தி இலை பொடி* உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*✳செம்பருத்திபூ பொடி* அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*✳கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*✳சிறியாநங்கை பொடி* அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*✳கீழாநெல்லி பொடி,* மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*✳முடக்கத்தான் பொடி* மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*✳கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*✳குப்பைமேனி பொடி* சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*✳பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*✳முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.

*✳லவங்கபட்டை பொடி* கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*✳வாதநாராயணன் பொடி*
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*✳பாகற்காய்( பவுட்ர)்* குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*✳வாழைத்தண்டு சரு*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*✳மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

✳சித்தரத்தை பொடி*
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*✳பொடுதலை பொடி* பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*✳சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*✳ஆடாதொடை பொடி* சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*✳கருஞ்சீரகப்பொடி* சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

✳*வெள்ளருக்கு பொடி* இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

✳*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*✳நெருஞ்சில்(முள்) பொடி* சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*✳பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*✳கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*✳பூலாங்கிழங்கு பொடி*
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*✳வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

✳*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*✳கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்

🍃இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

🍃 இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

🍃இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

🍃இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

🍃 இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

🍃இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

🍃காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

🍃பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி நீங்கும் நலமுடன் வாழலாம் 🍏🍏🍏🍏இனிய காலை வணக்கம் அடியேன் ஃ

Address

No. 1, Mariyamman Kovil Street, , Mudaliyar Chathiram, , Trichy
Tiruchirappalli
620001

Telephone

+919080146090

Alerts

Be the first to know and let us send you an email when Guna Ayush Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Guna Ayush Hospital:

Share

Category