16/01/2017
சந்தை விலை என்பது ஒரு மாயை.
We should adapt the Pattern of Market rather than the Market Price.
ஆரம்ப நிலைகளில் சந்தை விலையை முழுவதுமாக நம்மால் மறுத்து கடந்த செல்வது கடினம்,
இணையான மாற்று சந்தை முறைகளை முன்னெடுப்பதன் மூலமாக , We can make Market Price Obsolete
in long term.
உற்பத்தியாகும் செலவு + லாபம் வைத்து விற்பது தான் தொழில் அறம்.
அவ்வாறு செய்வது மூலம் தான் அந்த தொழில் மேன்மை பெறும்.
விவசாயம் வாழ்கை முறை தான், அதை தொழிலாக பார்க்ககூடாது என்ற கருத்தை நூகர்வோர் புரிதலுக்கு சொல்லப்பட்டது.
பணம் என்பது ஆற்றலின் குறியீடு,
ஒரு கிலோ அரிசியை நீங்கள் 50 ரூபாய்க்கு வாங்கமுடியும் என்றால்
அதே ஒரு கிலோ அரிசியை 50 ரூபாய்க்கும் குறைவாக உற்பத்தி செய்யமுடியும் என்று தானே பொருள்.
ஒரு கிலோ தக்காளியை 10 ரூபாய்க்கு வாங்கும் நாம் அதே பத்து ரூபாய்க்கும் குறைவாக ஒரு கிலோ தக்காளியை உற்பத்தி செய்துவிட முடியுமா ?
முடியாது என பெரும்பாலோர் சொல்வர்.
அப்படி என்றால் இங்கே உழைப்பு சுரண்டப்படுகிறது என்று தானே பொருள்.
அரசியல்,தொழில் கொள்கை,இடைத்தரகு, போன்ற காரணிகள் மறைமுகமாக கொடுக்கின்ற அழுத்தங்களால்
இந்த குறைந்த விலைக்கு விவசாயி விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.
உற்பத்தி அதிகமானால் விலை குறையும்
பொதுவாக எல்லாரும் வைக்கும் வாதம், இது சரி தான் , ஆனால் அதை எப்படி பார்க்கவேண்டும்
ஒரு விவசாயி ஒரு ஏக்கரில் ஆத்தூர் கிச்சலி சம்பா பயிர் செய்கிறார்,
அவருக்கு 20 மூட்டை நெல் கிடைக்கிறது.
அவர் செலவு செய்யும் தொகை ரூ.25000
அப்படியென்றால் ஒரு மூட்டையின் அடக்க விலை தொராயமாக ரூ.1250
அடுத்த ஆண்டு
அவருக்கு 25 மூட்டை நெல் கிடைக்கிறது
அவர் செலவு செய்யும் தொகை ரூ.25000 என வைத்து கொண்டால்
ஒரு மூட்டையின் அடக்க விலை தொராயமாக ரூ.1000
இத கொஞ்சம் கவனமா பாருங்க , ஒரே விவசாயிக்கு உற்பத்தி அதிகமான தான், விலையை குறைக்க முடியும்.
அதவிடுத்து மொத்தமா போனா ஆண்டோட இந்த ஆண்டு 100 மூட்டை அதிகமாயிருக்கு
ஆகையால் உற்பத்தி(Supply) அதிகம் என கண்மூடித்தனமாக முடிவேடுத்தால் சிக்கல்.
Style of Farming and Marketing இப்ப மாறிக்கொண்டு வருகிறது.
கலப்பு பயிர்,ஒருகினைந்த வேளாண்மை, இயற்கை வழி வேளாண்மை, நேரடி விற்பனை போன்ற உத்திகளால்
மாற்றம் காணப்படுகிறது.
பாராட்டி புனிதப்படுதி ஓரமாக உக்கார வைக்கும் தந்திரங்கள் இனி மெல்ல மறையும்.
விவசாயின் உழைப்பின் வாயிலாக வரும் பொருட்கள் அவனுக்கே செழிப்பை தரவில்லையென்றால்,
வாங்கி உண்பவர்களின் நிலை....
உழைப்பு சுரண்டல் வழியாகவும் நோய்கள் நம்மை தொற்றிக்கொள்ளும்.
தொற்றா நோய்கள், இன்றைய சமூகத்திடம், அறம் நடத்தும் போராட்டம்