
21/06/2023
டாக்டர் Prema Gopalakrishnan அவர்களின் பதிவு நன்றியும் வணக்கமும் டாக்டரம்மாவுக்கு.
உங்க டூத்பேஸ்ட்டுல உப்பு இருக்கா?
எங்க டூத்பேஸ்ட்டே உப்புதான்!
மரு. கோ. பிரேமா BHMS,
ஒரு சிட்டிகை இந்துப்பு, ஒரு சிட்டிகை தூய மஞ்சள் தூள்... இரண்டையும் எடுத்து...
இது ஏதோ சமையல் குறிப்பு என்று எண்ணிவிட வேண்டாம்.
இது பல்துலக்க மிகச்சிறந்த, எளிதாக நாமே நம் அடுப்பங்கரையில் இருந்து செய்து கொள்ளும் பல்பொடி.
இந்துப்பு கிடைக்கவில்லை எனில் கடல் உப்பை நுணுக்கி வைத்து கொள்ளலாம்.
மற்றபடி பாக்கெட் தூள் உப்போ ஐயோடின் உப்போ உபயோகிக்க கூடாது.
தூய மஞ்சள். இயற்கை வழி இராசயனங்கள் இல்லாத மஞ்சள்தூள் கிடைத்தால் சாலச் சிறந்தது.
கிடைக்காதவர்கள் இருக்கிற மஞ்சள்தூளை உபயோகித்து கொள்ளலாம்.
தேவைப்படுபவர் இதை கடைகளில் கிடைக்கும் மென்மையான பல்குச்சியிலேயே உபயோகப்படுத்தலாம்.
இதிலென்ன அப்படி விசேசம், பார்ப்போமா?
உப்பு மஞ்சள் இரண்டுமே சிறந்த இயற்கை கிருமிநாசினி.
உப்பு பற்களை அதன் இயற்கை நிறத்தில் பளிச்சென்று வைத்திருக்க உதவும்.
உப்பு நாவில் பட்டவுடன் உமிழ்நீரை சுரக்கவைக்கும்.
உமிழ்நீர் இயற்கையின் ஆகச்சிறந்த சுரப்பு ஆகும். இதுவும் வாய்,பல் சுத்தத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
தற்போது கிடைத்து வரும் பெரும்பான்மையான டூத்பேஸ்ட்டுகளில் பல நஞ்சு நிறைந்துள்ளது. இந்த நஞ்சுகளிலிருந்து நீங்கள் விடுதலை பெறலாம்.
பாக்கெட் மஞ்சள்தூளும், சாதா கடல் உப்பும் தான் கிடைக்கிறது அல்லது இது மட்டுமே பொருளாதாரம் இடம் கொடுக்கும் என்றாலும் கூட இதுவும் இரசாயன நஞ்சு கலவை டூத்பேஸ்ட்டுக்கு மிகச்சிறந்த மாற்று தான்.
இதையே பேஸ்ட் போல வேண்டும் என்று விரும்புவர்கள் கொஞ்சம் தூய தேங்காய் எண்ணெய் அவ்வப்போது சேர்த்து கொளப்பி உபயோகப்படுத்தலாம்.
தேங்காய் எண்ணெயில் மறுபடியும் பல நல்ல பல் வாய் சுத்தத்திற்கான பண்பு உள்ளது.
எண்ணை கொப்பளிக்க நல்லெண்ணெய் விட தேங்காய் எண்ணெய் இன்னும் சிறந்தது.
இதில் சேர்க்கும் அனைத்தும் உணவுப்பொருள் ஆனதால் சிறு குழந்தைகள் முழுங்கினாலும் பயப்படவேண்டியதில்லை.
சிலருக்கு டூத்பேஸ்ட் உபயோகித்தால் குமட்டல் வரும். இதில் வராது.
பல் சொத்தை, ஈர்களில் இரத்த கசிவு, வாய்ப்புண் வருபவர்களுக்கு இந்த இயற்கை எளிய பல்பொடியே மருந்தாகவும் ஆகும்.
பல்சொத்தை வலி திடீரென்றுதான் வரும். வலி அதிகமாகவும் இருக்கும். பல நேரங்களில் இரவு தான் இந்த வலி வரும்.
இதற்கு இதே மஞ்சள்,உப்பு, தேங்காய் எண்ணெய் பேஸ்ட்டை சிறுது எடுத்து சொத்தை பல்லில் பூசி அடைத்து விடுங்கள். 10 -15 நிமிடம் அப்படியே எச்சில் முழுங்காமல் வாய்மூடி அமைதியாக இருக்கவும். பின் அந்த அடைத்த பேஸ்ட்டை துப்பிவிட்டு நன்கு தண்ணீரால் வாய் கொப்பளிக்கவும். உடனடி வலி நிவாரணி. அதோடு சொத்தையும் படிப்படியாக மறையும்.
கிராம்பு நரம்பை மறக்கடித்து வலியை தெரியாமல் பார்த்துகொள்ளும். அவ்வளவு தான். அதனால் கிராம்பை விட கிருமிகளை கொண்று வளரவிடாமல் செய்யும் மஞ்சளே சிறந்தது . எளிய பொருளும் கூட.
பல் சொத்தை மற்றும் வாய்ப்புண் தொந்திரவு அதிகம் இருப்பவர்கள்,
தொடர்ச்சியாக தினமும் தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளித்து வந்தால் மேலும் நல்ல பலன் கிடைக்கும்.
இருந்தாலும் இந்த தொந்திரவுகளுக்கு என்ன காரணம் என்பதை அறிந்து அதை நீக்க வேண்டும்.
பல் அடைத்தவர்கள் அதை களட்டிவிடுவதே நல்லது. அடைப்பு பல்லை இயற்கையாக சரிசெய்து கொள்ள விடாமல் தடுத்து கொண்டிருக்கும்.
முக்கியமாக மெர்குறி அடைப்பு(சில ஆண்டுகளுக்கு முன் இது தான் பரவலாக உபயோகப்படுத்தப் பட்டது) செய்திருப்பவர்கள் பல் மருத்துவரிடம் சென்று கவணமாக அதை நீக்கிவிடவும். செராமிக் கலவை பரவாயில்லை. இது சுட்ட மண் வகை. அவ்வளவாக வினை புரியாது. ஆனாலும் களட்டிவிட்டால் சிறப்பு தான்.
ரூட்கெனால் வேண்டவே வேண்டாம். ஏற்கனவே செய்தவர்கள் மருத்துவரிடம் சென்று அதையும் மாற்றிவிடுங்கள்.
குறிப்பு: விடாத பல பல் தொந்திரவுகள் இருப்பவர்கள். ஓமியோபதியில் இதற்கு நல்ல பல தீர்வு உண்டு. ஆனால் 'நல்ல ஓமியோபதி' மருத்துவரை கண்டுபிடித்து அனுகவும்.
இப்படி பல பல் வாய் அதன் மூலம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் தீர்வாகும் இந்த எளிய பல்பொடி.
இந்த எளிய பல்பொடி பதிவு இன்னமும் பேஸ்ட் உபயோகப்படுத்தும் சாமானியர்களுக்காக.
ஏற்கனவே பல நல்ல வழிகள் அறிந்தவர்கள் உங்களுக்கு பலன் அளிக்கும் வழிகளிலேயே தொடரலாம்.
அப்புறம் என்ன?
நாளையில் இருந்தே நீங்களே உங்கள் பல்பொடியை செய்து உபயோகப்படுத்தி பாருங்கள்.
நாங்க மாறிட்டோம்! நீங்க ? 😀😀