ஊமை

ஊமை I waiting to serve the people

12/09/2021
காணவில்லை!அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்! படத்தில் காணும் நபர் என் நண்பருடைய தாயார். பெயர் காந்தி திருநெல்வேலி மாவட்டம் ...
26/08/2019

காணவில்லை!
அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்! படத்தில் காணும் நபர் என் நண்பருடைய தாயார். பெயர் காந்தி திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி சிவந்தியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 24-08-2019 முதல் இவரை காணவில்லை! வீட்டில் ஏற்பட்ட சிறு பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு சென்றவர் 26-08-2019 வரை வீடு திரும்பவில்லை. நண்பரின் குடும்பத்தினர் தொடர்ந்து இவரை தேடி வருகின்றனர். எனவே நன்பர்கள் யாரேனும் இவரை கண்டால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் .
குறிப்பு வீட்டில் இருந்து செல்லும் போது அவர் அணிந்திருந்த நகைகளை வீட்டில் கலட்டி வைத்து விட்டார்
தொடர்பு எண்கள் :
பெருமாள் : 8973376058
மார்ட்டின் : 9688010500
சிவந்தியாபுரம்

15/08/2019

வணக்கம்! உங்களுடன் என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . இன்று நம் நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது பலரும் பலவிதங்களில் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளங்களிலும் நேரிலும் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள் ஆனால் எனக்கு யாருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் சொல்ல விருப்பமில்லை காரணம் நான் ஒரு சுதந்திர நாட்டில் வாழ்கிறேன் என்று உண்மையாக நான் உணரவில்லை ஏனெனில் சுதந்திரம் என்பது வெறும் வெற்று வார்த்தையாக நான் நினைக்கவில்லை , அது ஒரு முழுமையான வார்த்தை . சுதந்திரம் என்பது நாம் நினைத்த இடங்களுக்கு செல்வதும் நம் வாயில் வந்த வார்த்தைகளை பேசுவதும் நாம் நினைத்த செயல்களை செய்வது மட்டுமல்ல அது மிக ஆழமானது. சுதந்திரம் என்பது ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் சமமான நீதியும் நியாயமும் உரிய நேரத்தில் கிடைப்பது என்பதாகும். ஆனால் சுதந்திர இந்தியா என்று கூறிக்கொள்ளும் இந்த இந்தியாவில் நீதியும் நியாயமும் இந்திய மக்கள் அனைவருக்கும் சமமாக கிடைக்கவில்லை என்பதே என்னுடைய கருத்து . அதாவது ஒருவருக்கு வேண்டிய நீதியை நாடி நாம் நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டியது உள்ளது அந்த நீதிமன்றங்களில் அணுகுவதும் அங்கே நீதியை பெறுவதும் செல்வந்தர்களுக்கு இருக்கும் எளிமையை போன்று ஒரு சாமானியனுக்கு இல்லை. அன்று எப்படி ஓர் ஆங்கிலேய ஆட்சியில் இந்தியர்களுடைய உழைப்பும் வளங்களும் பிற நாட்டு மக்களுக்காக இங்கே இருந்து சுரண்டி எடுக்கப்பட்டதோ அதே போன்றே இன்று இந்தியாவில் இருக்கும் அதிகார வர்க்கத்தினராலும் ஆட்சியாளர்களாலும் இந்தியர் அனைவருக்கும் சமமாக கிடைக்க படவேண்டிய வளங்களும் தொழிலாளர்களின் உழைப்பின் மூலம் கிடைக்கக்கூடியதான வருமானங்களும் ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பயன்பட்டுக் கொண்டிருக்கிறது . அப்படி இருக்கும் பொழுது இது எப்படி சுதந்திர இந்தியாவாகும் . இங்கு ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களும் அரசு அதிகாரிகளும் அதிகார வர்க்கத்தினருக்கு அதாவது இந்த சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு கொடுக்கும் மரியாதையையும் மதிப்பையும் ஏன் ஒரு உழைக்கும் தொழிலாளி கொடுப்பதில்லை அப்படி இருக்கும் பொழுது எப்படி இந்த இந்தியாவில் சுதந்திரம் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வது . இன்று இந்தியாவில் வேலை வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் இங்கே ஒருவனுடைய வேலை நேரம் என்பது அதிக மாறுகிறது . இருவர் செய்யக்கூடிய வேலையை ஒருவர் செய்ய வேண்டிய ஒரு நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். மூன்று பேர் செய்யக்கூடிய வேலையை ஒருவர் செய்து ஒரு நபருக்கான ஊதியத்தை மட்டுமே பெறுகிறார் .அவருக்கான ஊதியம் 3 பேருக்கு தேவையான ஊதியமாக கிடைத்தால் அது ஏற்றுக் கொள்ளலாம் . அதாவது உதாரணமாக எட்டு மணி நேரம் உழைக்க கூடியதான ஒரு தொழிலாளி 24 மணி நேரம் உழைக்கிறார் அவருக்கு கிடைக்க வேண்டியதான ஊதியம் 24 மணி நேரத்துக்கு ஆனதாக இருந்தால் சரி. ஆனால் அவருக்கு எட்டு மணி நேரத்துக்கான ஊதியம் வழங்கப்பட்டு 24 மணி நேரத்திற்கான வேலை வாங்கப்படுகிறார் . இது இந்தியாவில் இல்லை இங்கு சரியாக தான் நடக்கிறது என்றால் அது பொய். இந்தியாவில் இன்றும் இப்படி நடந்து கொண்டுதான் இருக்கிறது. இங்கேஅரசு ஊழியர்களை மட்டுமே ஆட்சியாளர்கள் தொழிலாளர்கள் என்று நினைக்கிறார்கள் .அரசு ஊழியர்கள் மட்டும் தான் 8 மணி நேரம் வேலை செய்கிறார்கள் அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறுகிறார்கள் அவர்கள் உழைப்பிற்கேற்ற சலுகைகளைப் பெறுகிறார்கள் எல்லாவற்றையும் பெறுகிறார்கள் ஆனால் இங்கு தனியார் தொழிற்சாலைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களுடைய உரிமையை முழுமையாக பெறுகிறார்களா என்றால் இல்லை. அவர்களுக்கான ஊதியமும் சரியானதா என்ற இல்லை இல்லை என்பதே என்னுடைய கருத்து .இப்படி தொழிலாளர்கள் மீது அக்கறை கொள்ளாத ஒரு அரசு இங்கேயே மக்களை ஆட்சி செய்து கொண்டிருக்கும் பொழுது எப்படி இது சுதந்திர இந்தியா என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியும். ஒரு அரசின் மிக முக்கிய கடமையாக நான் கருதுவது நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்ண உணவு உடுக்க உடை உறங்க உறைவிடம் இவற்றை உறுதி செய்வதே ஒரு அரசின் தலையாய கடமை .ஆனால் இந்திய அரசுகள் அதாவது மத்திய மாநில அரசுகள் நான் மேலே கூறியதான உணவு உடை உறைவிடத்தை மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய தவறிவிட்டது. அவர்கள் இன்று செல்வந்தர்கள் ஆகிய இந்திய முதலீட்டாளர்கள் மீது கொள்ளும் அக்கறையை அந்த முதலீட்டாளர்களை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் தொழிலாளர்கள் மீது கொள்வதில்லை. உதாரணமாக மாதம் 8000 ஊதியம் வாங்குபவர்களின் எண்ணிக்கை இந்திய திருநாட்டில் கிட்டத்தட்ட உழைப்பவர்களில் 30லிருந்து 40 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் .அந்த 8000 மாத ஊதியமாகப் பெறும் ஒரு தொழிலாளி தனக்கு தேவையான இருப்பிடத்தை பெற்றுக்கொள்வதற்கு சாதாரணமாக இன்று ஒரு குடிசை பகுதியில் இடம் வழங்குவது என்றால் கூட ஒரு செட்டின் விலை முப்பதாயிரம் நாற்பதாயிரம் என்கிற அளவில் உள்ளது அந்த நிலத்தின் விலை என்பது அந்த ஊழியரின் மாத வருமானத்தில் குறைந்தது மூன்றிலிருந்து நான்கு மடங்கு என்கிற அளவில் உள்ளது. ஒருவன் தன்னுடைய ஊதியத்தில் நான்கு மாத ஊதியத்தை சேமித்தால் மட்டும் அவனால் இடத்தை வாங்க முடியும் . அப்படி அவன் நான்கு மாத ஊதியத்தை சேமிக்க வேண்டும் என்றால் அவனுடைய குடும்பம் வறுமையின் பிடியில் சில காலம் தவிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை தான் இந்தியாவில் நிலவுகிறது. இப்படி இருக்க கூடிய ஒரு இந்தியாவை எப்படி என்னால் சுதந்திர இந்தியாவாக ஏற்றுக் கொள்ளமுடியும் என்று எனக்கு தெரியவில்லை. இதற்கு முன்னதான ஒரு பதிவு நான் பகிர்ந்து உள்ளேன் அதாவது இந்திய திருநாட்டில் இந்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியமும் இந்தியாவில் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வழங்கப்படும் ஊதியம் குறித்ததான ஒரு கட்டுரையை பகிர்ந்திருக்கிறேன் அதே நீங்கள் அனைவரும் சற்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் இன்னும் அதிகமாக சொல்லப்போனால் இன்று மருத்துவ சேவை என்பது கூட இந்திய மக்கள் அனைவருக்கும் சமமாக கிடைக்கிறதா என்றால் இல்லை அதாவது முந்தைய ஆங்கிலேயே அரசு மக்களின் சுகாதாரத்தின் மீது கொண்ட அக்கறையை இந்த சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்கள் இந்திய மக்கள் மீது கொள்ளவில்லை என்றே நான் நினைக்கிறேன் காரணம் அன்றைய ஆங்கிலேய ஆட்சியில் கூட மக்களுக்கு இலவச மருத்துவங்கள் அதாவது அவர்களை தேடி சென்று அளிக்கப்பட்டது பழைய மிஷினரிகள் அதாவது சமூக ஆர்வலர்கள் ஆங்கிலேய ஆர்வலர்கள் இந்திய மக்களுக்கு இலவச மருத்துவ சேவையை செய்து வந்தனர் ஆனால் இன்று நமது அரசும் இலவச மருத்துவமனைகள் மூலமாக சேவை செய்து வருகிறது ஆனால் அந்த இலவச மருத்துவ மனைகளில் கூட நாம் பணம் கொடுத்து தான் தங்களுடைய சேவைகளை துரிதமாக பெற முடிகிறது ஏனெனில் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் அங்கே அனுமதிக்கப்படும் நோயாளிகளை மிகவும் தரம் தாழ்ந்தவர்களாகவே கருதுகின்றனர்.இப்படிப்பட்ட ஒரு இந்தியாவை என்னால் எப்படி சுதந்திர இந்தியா என்று ஏற்றுக் கொள்ள முடியும். இன்று இந்தியாவில் மருத்துவ கல்லூரிகள் பல அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்பு என்பது வழங்கப்படுகிறது ஆனால் அது மருத்துவம் என்பது ஒரு சேவை என்ற நிலையில் இருந்து அது ஒரு தொழில் என்கிற நிலையில் உள்ளது. கல்வி என்பது ஒரு சேவை என்பது நிலையிலிருந்து அதுவும் ஒரு தொழிலாக மாற்றப்பட்டு இன்று மக்களுக்கு கிடைக்கக்கூடிய சுதந்திர உரிமையான கல்வியும் மருத்துவமும் இன்று ஒரு விற்பனைப் பொருளாக மாறி விட்டது என்கிற பொழுது என்னால் எப்படி இதனை ஒரு சுதந்திர இந்தியாவாக ஏற்றுக்கொள்ளமுடியும். நான் இது என்னுடைய கேள்விகளாக மட்டுமல்ல இதை என் போன்ற ஒரு சாமானியனின் கேள்வியாகவே இந்த சமூகத்தின் முன் வைக்க விரும்புகிறேன் நீங்கள் ஒவ்வொருவரும் இந்த கருத்தை வாசித்துவிட்டு இல்லையெனில் இதை சற்று பார்த்து விட்டு சென்றாலும் இதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய கருத்தல்ல இதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது அது உண்மையா என்பதை நீங்கள் யோசிக்கவேண்டும் யோசித்தால் மட்டும் போதாது அதில் உங்களுக்கு ஏதேனும் கருத்து உண்டா என்றால் அதையும் பகிரவும் . இல்லை எனில் இதில் தவறு இருந்தால் அதையும் சுட்டிக்காட்ட வேண்டும் நான் உங்களிடத்தில் விரும்புவது நீங்களும் சுயமாக சிந்திக்க வேண்டும் என்பதே நன்றி வணக்கம் வாழ்க பாரதம் வளர்க வளர்க மக்கள் தம் சுய அறிவு

08/04/2019

வணக்கம் உங்களுடன் என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் தற்போது நம் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆளும் கட்சியானது தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது அந்த தேர்தல் அறிக்கையில் சில சிறப்பு அம்சங்களாக சிறுசிறு தலைப்புகளில் பலவற்றை நான் என் முகநூலில் வாசித்தேன் அதைவைத்து முந்தைய 2014ஆம் ஆண்டு பாஜக தேர்தல் அறிக்கை என்ன சொல்கிறது என்று இணையதளத்தில் தேடி பார்த்தேன் அவற்றில் சொல்லப்பட்ட யாவும் மீண்டும் இந்த 2019 ஆவது ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது இதைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது என்றால் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து 2019ஆம் ஆண்டு வரை நமது பாரதப் பிரதமர் அவர்கள் பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நன்றாக யோசித்து சிந்தித்து நான் கடந்த ஐந்து வருடமாக யோசித்துக்கொண்டிருந்தேன் அதற்குள் என் ஆட்சி முடிந்து விட்டது இதோ நான் விழித்துக் கொண்டேன் உங்களுக்காக என்னுடைய கடமையை செய்ய தீவிரமாக செயல்பட தயாராக இருக்கிறேன் என்பதை போன்று உள்ளது கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் ஆராய்ந்து கொண்டு இருந்தேன் இப்பொழுது முழுமையாக அறிந்து கொண்டேன் நான் எப்படி இந்த மக்களுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு என்ன வாக்குறுதிகள் கொடுத்தேனோ அதை மீண்டும் கூறி வாக்கு கேட்டு நான் இனிமேல் பிரதமரானால் செய்வேன் என்று ஒரு உறுதி அளிக்கிறார் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே தற்போதைய தேர்தல் அறிக்கையில் வெளிப்படுகிறது கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையை பார்க்கும்போது அதில் ஒரு முக்கியமான நிகழ்வை வாசித்தேன் அதாவது கருப்பு பணம் ஒளிக்கப்படும் அது எவ்வாறு ஒளிக்கப்படும் என்றால் கருப்பு பணம் குறித்த வழக்குகள் அனைத்தும் தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்கப்படும் என ஒரு முக்கியமான அறிக்கையை அதில் வெளியிடப்பட்டிருந்தது ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது கருப்பு பணம் யார் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை இவர்தான் கருப்பு பணத்தின் முதலாளி என்று இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டாரா என்றார் இல்லை அப்படி ஏதேனும் தனி கோர்ட்டுகள் தொடங்கப்படுவதற்கான ஏதேனும் வேலைகள் நடைபெற்று இருக்கிறதா என்றால் நான் அறிந்தவரை இல்லை ஒருவேளை அதை ஏதேனும் ஏட்டில் எழுதப்பட்ட சட்டமாக இருக்கலாம் அதே போன்று அதே தேர்தல் அறிக்கையிலேயே தமிழ்நாட்டின் நீர் தேவை குறித்து ஒரு விவரம் அங்கே இடம் பெறுகிறது 2014 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அதே தண்ணீர் தேவை குறித்து தமிழகத்திற்கு தண்ணீர் தேவை குறித்து ஒரு அறிக்கை இந்த 2019-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூட இடம் பெற்றுள்ளது அதேபோன்று 2014ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பாஜக தனது வாக்குறுதியாக அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது அதே நிலையை இந்த தேர்தல் அறிக்கையும் நீடிக்கிறது சட்டப்பிரிவு 370 திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று முந்தைய 2014 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பாஜக அறிவித்துள்ளது அந்த சட்டப்பிரிவு நீக்கப்பட்டதா என்பது எனக்கு தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தாலும் அறிந்து கொள்ளுங்கள் அதே போன்று 2014 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தேசிய வேளாண் சந்தை என்று ஒன்று உருவாக்கப்படும் என்பதை 2014 ஆண்டு தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது பாஜக ஆனால் அதுவும் இன்று நடந்ததா என்பது சந்தேகமாகவே உள்ளது இப்படி நாம் 2014 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையை கொண்டு பாஜகவின் ஆட்சியை திறனாய்வு செய்தால் பாஜக ஒன்றே ஒன்றை மட்டும் செய்து உள்ளது இந்த நாட்டு மக்களை நன்றாக ஏமாற்றியுள்ளது இது இங்கே வெளிப்படையாகிறது என்னுடைய முந்தைய பதிவில் கூட வினவு என்ற ஒரு பத்திரிகையின் 2014ம் ஆண்டு பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து ஒரு விமர்சனம் பகிரப்பட்டுள்ளது அதில் என்ன கூறுகிறார்களோ அது தான் இந்த 2014ம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பாஜக செய்துள்ளது என்று நான் நினைக்கிறேன் எனவே மக்களே நான் உங்களிடம் மீண்டும் மீண்டுமாக உறுதியாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன் நீங்கள் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அதாவது மத்திய மாநில ஆளும் அரசுக்கு வாக்களிக்க நினைப்பது என்பது நாம் சாலையில் செல்லும் போது அதிகப்படியான வெப்பத்தினால் தெரியுமே கானல் நீர் அதே போன்றுதான் நமது தற்போதைய மத்திய மாநில அரசுகளின் தேர்தல் அறிக்கை நாம் சாலையில் காணும் கானல் நீரை குடிக்க முடியாது ஆனால் அதை கண்டு கொள்ளலாம் அதே போன்று தான் தற்போதைய மத்திய மாநில அரசுகளின் தேர்தல் அறிக்கை அவற்றை நாம் வாசித்து மனம் மகிழ்ந்து கொள்ளலாம் ஆனால் அவற்றினால் நாம் பயன் அடைய முடியாது எனவே மக்கள் நீங்கள் தெளிவாக இருந்து தற்போதைய மத்திய மாநில அரசுகள் எந்த விதத்திலும் மக்கள் மீது ஒரு நலன் கொண்ட அரசு இல்லை என்பதை தெளிவாகப் புரிந்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ஒரு தெளிவான புரிதலோடு வாக்களித்து ஒரு நல்ல தலைவனை நமக்கு தேர்ந்தெடுக்க பழகிக் கொள்ளுங்கள் ஏனெனில் நாம் இந்த ஒரு முறை செய்யும் தவறானது மீண்டும் 5 ஆண்டு காலம் நம்மை பின்னுக்கு தள்ளி விடும் நம் பொருளாதாரம் மிகவும் முக்கியமானது சிந்தித்து வாக்களியுங்கள் வாழ்க பாரதம் வளர்க வளர்க நம் பொருளாதாரம்

05/04/2019

வணக்கம் ! உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய சமுதாயத்தில் ஹிந்து என்று ஒரு வார்த்தை பரவலாக பேசப்பட்டு வருகிறது . இந்திய திராவிட கொள்கையாளர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்கள் இந்துக்களை எதிர்கிறார்கள் என்கிற ஒரு குற்றச்சாட்டு எழுகிறது. நமது சுதந்திர இந்தியாவானது சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்யப்பட்டது, அதை நாம் ஆங்கிலேயே இந்தியா என்று அழைக்கிறோம் . இந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு படையெடுப்பதற்கு முன்பாகவும் இந்தியா ஒரு இந்து தேசமாகவே இருந்தது என்பது பரவலாக பேசப்படும் ஒரு கருத்து. நான் இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்றால் இந்த ஆங்கிலேயே இந்தியாவுக்கு முன் இருந்த இந்தியாவில் இருந்த இந்துக்களை அடிமைப்படுத்தியவர்கள் இந்துக்களே !
இந்த இந்துக்களை எதிர்ப்பதற்காக தான் திராவிடக் கொள்கை உருவாக்கப்பட்டது. இவர்களை தான் திராவிட கொள்கையாளர்கள் எதிர்த்தனர். திராவிட கொள்கையாளர்கள் தங்களுடைய இந்து எதிர்ப்பு பிரச்சாரங்களில் அத்தகைய இந்துக்களை ஜாதியை இந்துக்கள் என்று குறிப்பிட்டனர். ஆனால் இன்று தங்களை இந்து என்று குறிப்பிடும் பலரும் தங்களை அடிமைப்படுத்திய அவர்களும் இந்துக்களை என்பதை மறந்து திராவிட கொள்கை யாளர்களை எதிர்க்கின்றனர். இந்த திராவிட கொள்கையானது தமிழகத்தில் எழுச்சி பெறவில்லை எனில் இங்கு இன்றும் அடிமைத்தனம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். இன்றும் சில இடங்களில் தமிழகத்தில் இன்றும் தன்னை உயர்ந்தவர் என்றும் பிறரை தாழ்ந்தவர் என்றும் கூறும் மக்கள் ஒரே மதத்தைச் சார்ந்தவர் ஆகவே இருக்கின்றன . எனவே மக்களே இது உங்களுடைய உரிமைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நேரம் எனவே நீங்கள் மிகவும் துள்ளியமாக சிந்தித்து உங்களுடைய வாக்குகளை சரியான நபருக்கு வாக்களியுங்கள் .நீங்கள் அளிக்கும் வாக்கு உங்களது உடை உடல் உயிர் உடமைகளை பாதுகாக்கிறது. எனவே இந்த தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளின் வாய் பிரசாரங்களை நம்பி ஏமாறாமல் சுயமாக சிந்தித்து உங்களுடைய பொருளாதாரத்தை உயர்த்த பாடுபடும் சரியான வாக்காளருக்கு உங்களது வாக்குகளை அளிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ! வாழ்க பாரதம்! வளர்க ! வளர்க!

காந்தியின் கனவுகள் நிறைவேறிய!மீண்டும் காமராஜர் ஆட்சி அமைத்திட!மீண்டும் அண்ணாவின் அரசு அமைத்திட!மீண்டும் கலைஞரின் பொண்ணான...
13/03/2019

காந்தியின் கனவுகள் நிறைவேறிய!
மீண்டும் காமராஜர் ஆட்சி அமைத்திட!
மீண்டும் அண்ணாவின் அரசு அமைத்திட!
மீண்டும் கலைஞரின் பொண்ணான ஆட்சி அமைத்திட!
மீண்டும் எம்.ஜி.ஆர் இன் மக்களாட்சி அமைத்திட!
வாக்களியுங்கள் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் கட்சிகள் ! ஏன் ?
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சமத்துவ சம உரிமை ஆட்சி அமைத்திட விரும்புவதில்லை!
இந்த சமூகம் இதனை ஏன் ஏற்க விரும்பவில்லை?
தாழ்த்தப்பட்ட சமூகம் என்று இன்று பட்டியலிடப்பட்டுள்ள மக்களிடம் அம்பேத்கர் பற்றி பேசி வாக்கு சேகரிக்கும் கட்சிகள் ஏன் ? பிற சமூக மக்களிடம் அம்பேத்கர் பற்றி பேசி வாக்கு சேகரிக்க தயங்குகிறது !!
அம்பேத்கர் என்ன செய்தார் இந்த சமூகத்திற்கு!
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றினாரே ! அதனால் இந்த சமூகம் இவரை தவீர்கிறதா ?
மனிதராய் பிறந்த அனைவரும் சமம்! அனைவருக்கும சம உரிமை உண்டு என்று அனைவருக்கும் வாக்குரிமை பெற்று தந்ததால் இந்த சமூகம் இவரை வெறுக்கிறதா?
தொழிலாளர் நலன் காக்க !
பெண்கள் சம உரிமை பெற்றிட !
பல சட்டங்களை இயற்றினாரே ! அதனால் இந்த சமூகம் இவரை மறுக்கிறதா ?
பின் ஏன் தான் இந்த சமூகம் அம்பேத்கர் அவர்களை மறந்துவிட்டது!
இந்த சமூகத்தில் தன்னை உயர்ந்தவனாக காட்டிக்கொள்ள நினைக்கும் மனிதன் ஏன் ? பிறன் ஒருவனை தனக்கு நிகரான சக மனிதனாக மதிக்க தவறுகிறது !
சிந்தித்து வாக்களியுங்கள்!
வாழ்க பாரதம்!
வளர்க ஊழல்!

12/02/2019

உணர்வுகளை உணர வைத்த பாடல்

09/10/2018

டிக் டாக் வீடியோக்கள் பல இன்று இணையத்தில் பரவலாக பதியப்படுகிறது மற்றும் பகிரப்படுகிறது.
இதில் பெரும்பாலும் பெண்கள் தோன்றும் வீடியோக்கள் அதிகம் பகிறப்படுகிறது.
இது பெண்களின் ( பெண்மையின் ) பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் செயல்.
பெண்களிடம் ஆண்களால் ரசிக்கப் படுவது அவளது பெண்மை என்பதை மறந்து.
தங்களது திறமை மற்றும் தன் அழகை வெளிப்படுத்துகிறேன் என்று பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக மாற்றுகின்றனர்.
பெண்மை பாதுக்காக்கப்பட வேண்டும்.
பெண்கள் சபரிமலைக்கு செல்வதால் பெண்ணுக்கு எந்த பெருமையோ அல்லது எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை.
மாறாக பெண்கள் சரிமலைக்கு செல்வதால் அங்கு செல்லும் ஆண்களின் மனமே தள்ளாடும்.

10/04/2018

பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் போராட்டகாரர்களே!
உங்களில் எத்தனை பேர் தயாராக இருக்கீங்க காவேரிக்காக தன் வசதிகளை இழக்க!
நான் மின்சார கட்டணம் கட்ட மாட்டேன்!
நான் அரசு பேருந்தில் பயணம் செய்ய மாட்டேன்!
நான் அரசு மதுபான கடையில் மதுபானம் வாங்க மாட்டேன்!
என் பிள்ளை கல்வி நிலையங்களுக்கு அனுப்பமாட்டேன்!
இது போன்ற போராட்டங்களே மக்களுக்காக நீங்கள் செய்யும் போராட்டம்!
மாறாக இப்போது நீங்கள் செய்யும் போராட்டம் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டம்!
சிந்தனை செய்!!
உன்னை முட்டாளாக்கும் செயலைச் செய்யாதே!!!!!

05/01/2018

இறைவன் மிகப்பெரியவர்!
மறந்துவிடாதே அவர் உன் அருகில் இருக்கிறார் என்பதை!
மறந்துவிடாதே! நீ செய்யும் பாவம் உன்னை பாதிக்கவில்லை என்றால் உன் சந்ததியை பாதிக்கும் என்று!
மறந்துவிடாதே! உண்மை! வாழ வைக்கும், பொய் சாகடிக்கும் என்பதை!
மறந்துவிடாதே! உன் வாய் பேசுவது போன்று பிறனுடைய வாயும் பேசுமென்று!
மறந்துவிடாதே! உன் கோபத்தைப் போன்றே பிறனுக்கும் கோபம் வரும் என்று!
மறந்துவிடாதே! உன் கை அடிப்பது போன்று பிறனுடைய கையும் அடிக்குமென்று!
மறந்துவிடாதே! உன்னுடைய வலியை போன்று பிறனுக்கும் வலி உண்டு என்பதை!
மறந்துவிடாதே! மறந்தும் இருந்துவிடாதே!
இறைவன் இவை அணைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை!
அன்பை பகிர்வோம்!
நல்லதே செய்வோம்! நல்லதே நடக்கும்!
இறைவன் மிகப்பெரியவர்! அவராலே எல்லாம் ஆகும்!

21/12/2017

பான்டே-வின் கேள்விகள்?
என் செய்கிறார் பான்டே!
பான்டே-வின் கேள்விகள் மக்களை சிந்திக்க தூண்டுகிறதா?
பான்டே-வின் கேள்விகள் மக்களுக்கு விழிப்புனர்வு கொடுக்கிறதா?
பான்டே-வின் கேள்விகள் மக்களை மூளைச்சலவை செய்கிறதா?
பான்டே-வின் கேள்விகள் உண்மையை வெளிக்கொண்டு வருகிறதா? இல்லை உண்மையை மறைக்கிறதா?
பான்டே-வின் கேள்விகள் மக்களுக்கு பயன் தருகிறதா?
என்ன செய்கிறார் பான்டே?
பான்டே-வின் கேள்விக்கு என்ன பதில்! என்ற நிகழ்ச்சிக்கும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கும் என்ன வித்தியாசம்!
பதில் உண்டா ? உங்களிடத்தில் !
இது என் கேள்வி ?

13/12/2017

We say that the hug "We are Indians" "It is Independent India". One of the biggest questions among us is Indians we enjoy freedom? I think we're not enjoying freedom. How about? We are only liberated from the British, and we have not yet been scared from human slavery. We are the slaves who lost basic fundamental freedom in this independent India! We still do not realize that we are still a slave Indians today. Today our serviceman is hiding our slavery.
நாம் அணைவரும் சொல்கிறோம் " நாம் இந்தியர்கள்" "இது சுதந்திர இந்தியா ". எனக்குள் ஓர் மிகப்பெரிய கேள்வி இந்தியர்களாகிய நாம் சுதந்திரத்தை அனுபவிக்கின்றோமா? நான் என்னுகிறேன் நாம் சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என்று. எப்படி என்றால் ? நாம் ஆங்கிலேயரிடமிருந்து மட்டுமே விடுதலை அடைந்துள்ளோம், மனித அடிமைத் தனத்திலிருந்து நாம் இன்றளவும வடுதலைப் பெறவில்லை. இந்த சுதந்திர இந்தியாவிலும் நாம் அடிப்படை ஊரிமைகளை இழந்த அடிமைகளாய் உள்ளோம்! நாம் இன்றும் ஓர் அடிமை இந்தியர்களாய் தான் உள்ளோம் என்பதை இன்றளவும் உணரவில்லை.இன்றைய ஆட்ச்சியாளர்களாள் நமது அடிமைத் தனம் மறைக்கப்படுகிறது

28/09/2017

Just for awareness.........✅ PLEASE DON'T DELETE -
PLEASE FORWARD

Blood Cancer......
Brain Cancer......
Breast Cancer......
Colon Cancer......
Liver Cancer......
Lungs Cancer......
Prostate Cancer......
Ovarian Cancer......

Dear friends
Medicine for several Cancer has been found!! Please don't delete this without forwarding. I am forwarding it to the maximum I can. Let it reach the 110 crores Indians and the remaining if any.

'Curcuminoids' is a medicine which cures several cancer. Its available at reasonable cost at "Cancer Herbalist in Bangalore".Create Awareness. It might help someone. Forward to as many as u can, kindness costs nothing.

Cancer Herbalist, Bangalore.
Address: 6, DVG Road,
Gandhi Bazaar, Basavanagudi,
Bangalore - 560004 Landmark: Near Vidyarthi Bhavan hotel

Phone:
080-41218877
080-26601127
8884588835
Cancerherbalist@gmail.com

✅ 🙏Request:
Forward to as many as
possible🙏

25/09/2017
07/09/2017

ஏன் போராடுகின்றோம்?
எதற்க்காய் போராடுகின்றோம்?
நம் போராட்டத்தின் நோக்கம் என்ன?
நாம் போராடும் விதம் சரியா? தவறா?
நம் போராட்டத்தால் நமக்கு என்ன லாபம்? நமது சந்ததியினருக்கு என்ன லாபம்?
பிறருக்கு என்னலாபம்?
நாம் பொது நலனுக்காக போராடுகிறோமா?
சுயநலவாதிகளின் சுயநலத்திற்காக போராடுகிறோமா?
என எதுவும் தெரியாது போராடும் போராட்டங்கள் அணைத்தும் வீணானதே!
இன்று நடைபெறும் நீட்டுக்கு எதிரான போராட்டம் கூட எனக்கு மேற்க்கண்ட ஓர் போராட்டம் போன்றே தெரிகிறது.
ஏனெனில் இத்தகைய போராட்டம் எத்தகைய பயனும் தராது என்பது எனது கருத்து.
நீட் தேர்வு ரத்து மட்டும் ஏழை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு தீரரவாகாது.
நீட் தேர்வானது ஒருவகையில் அணைவருக்கும் சமவாய்ப்பையை அளிக்கிறது.
பண்ணிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களில் பெருமபாலானோர் மெட்ரிகுலேசன் கல்வி பயின்றவர்களாயே உள்ளனர்.
இன்ற கல்வி நிருவனங்கள் மாணவர்களுக்கு கல்வியை பயிற்றுவிற்ப்பதற்க்கு பதிலாக மாணவர்கள் மீது கல்வி என்ற பெயரில் அவர்களின் மதிப்பெண் என்னும் அதிகாரத்தை திணிக்கின்றன.

Address

Tirunelveli

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஊமை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram