27/07/2022
இது நாள் வரை நமது உரிமம் கட்டணம் (20,21Lic) 3,000/ ரூபாய் இருந்தது வந்தது.
இந்த புதிய வரைவு மசோதாவில் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் என தனி உரிமம். இவற்றிற்கு 10,000 + ஆய்வு கட்டணம் 2000 = 12,000 .
இவை தவிர மருத்துவ சாதனங்களுக்கு தனி லைசன்ஸ்
அவற்றில் 10,000 + ஆய்வு கட்டணம் 2,000 = 12,000/ ஒரு உரிமத்திற்கு 12,000/ என்றால் இரண்டு உரிமத்திற்கு 24 ,000/ ரூபாய் உரிமம் எடுக்க வேண்டும்.
தற்போது உரிம கட்டணம் 3,000/ ரூபாய் என்பது
புதிய வரைவு மசோதாவில் 24,000/ ரூபாயாக அதிகரித்துள்ளது .
மருத்துவ சாதனங்கள் விற்பனை செய்யும் மொத்த மருந்து வணிகர்கள் நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்தால் மருந்தாளுனருடன் கூடிய உரிமம் வாங்க வேண்டும்.
மாநில அரசாங்கத்திற்கு என ஒரு மருந்து ஆய்வாளர்,
மத்திய அரசுக்கு என ஒரு மருந்து ஆய்வாளர் என இரண்டு மருந்து ஆய்வாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
தற்போது மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனையில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்வதால் எந்த பாதிப்பும் இல்லை.
ஆனால் புதிய வரைவு மசோதாவில் மருந்துகள் விற்பனைக்கும்,
அழகு சாதன பொருட்களுக்கும் ஒரே சட்ட, திட்டங்கள்தான்.
மருந்துகளுக்கு இருக்கும் சட்டதிட்டங்கள் கடுமையாக இருப்பது போல் அழகு சாதன பொருட்களுக்கும் அதே சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டும்.
அழகு சாதன பொருட்களுக்கு தயாரிப்பு உரிமம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து வாங்கி விற்பனை செய்ய வேண்டும் .
பில் போடவில்லை, பதிவேடு பராமரிக்கவில்லை, மருந்தாளுநர் இல்லை இது போன்ற,
ஒரு குற்றங்களுக்கு தற்போது ஒரு வருடம் முதல் இரண்டு வருடங்கள் சிறை தண்டனை மற்றும் அபராத தொகை 20,000/ ரூபாய் இருந்தது.
புதிய வரைவு மசோதாவில் ஒரு குற்றத்துக்கு ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது இரண்டு லட்சம் அபராத தொகையாக உயர்ந்துள்ளது .
*பத்து மடங்கு அபராத தொகை அதிகரித்துள்ளது.*
இதில் பங்குதாரர் நிறுவனமாக இருந்தால் ஒவ்வொரு பங்குதாரருக்கும் தலா 2 லட்சம் என்று அபராதம் கட்ட வேண்டிய சூழ்நிலை.
இந்த இரண்டு லட்சம் என்பது தயாரிப்பாளர்,
மொத்த மருந்து வணிகர்கள்,
சில்லறை மருந்து வணிகர்கள் அனைவருக்கும் ஒரே அபராத கட்டணம்.
*இவற்றில் தயாரிப்பாளர்களையும், வணிகர்களையும் வேறுபடுத்தி அபராதம் விதிக்க வேண்டும் என்பது கோரிக்கை.*
தற்போது உள்ள மருந்து விற்பனை சட்டத்தில் மருந்து தரம் குறைந்ததாக அறிவிக்கப்பட்டால் தயாரிப்பாளர்கள் முதல் குற்றவாளியாகவும் விற்பனையாளர்கள் சாட்சி யாகவும் இருந்தது. ஆனால் வரைவு சட்ட திருத்தத்தில் விற்பனையாளர்களும் (wholesaler&retailer ) குற்றவாளிகளாக சேர்க்க பட்டுள்ளனர்.
*போலி மருந்தாக இருந்தாலும், தரம் குறைவாக இருந்தாலும், மருந்துகளின் அளவு குறைவாக இருந்தாலும் அதற்கான முழு பொறுப்பும் தயாரிப்பாளர்களையே சாரும்.*
*மொத்த மற்றும் சில்லறை மருந்து வணிகர்களை கட்டுப்படுத்த கூடாது என்பது நமது கோரிக்கை.*
இந்த வரைவு மசோதா மூலம் ஆன்லைன் மருந்து வணிகத்திற்கு அனுமதி வழங்க வாய்ப்புள்ளது .
இந்த வரைவு மசோதா குறித்து நமது கருத்துக்களையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்வதற்கு 45 நாட்கள் கால அவகாசம் கொடுத்திருந்தார்கள். *அதற்கான காலக்கெடு மூன்று வாரங்கள் மட்டுமே*
சிறு வணிகர்களை வணிகச் சந்தையில் இருந்து அகற்றியும், கார்ப்பரேட் மற்றும் தொடர் வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆதரவாக இச்சட்டம் இயற்றப்பட்டது போல் தோன்றுகிறது.
இந்த வரைவு மசோதாவில் மத்திய அரசு அளவுக்கு அதிகமான உரிமைகளை மாநில அரசின் அதிகாரத்திலிருந்து எடுத்துக்கொண்டது என்பதை தெளிவாக தெரிகிறது .
இந்த வரைவு மசோதா குறித்து உங்களுடைய ஆலோசனைகள், கருத்துக்கள், எதிர்ப்புகள் ஆகியவற்றை கீழ்கண்ட e mail மூலம் அனுப்பலாம் அல்லது கீழ்கண்ட முகவரியில் கடிதம் மூலம் அனுப்பலாம்.
e mail : drugsdiv-mohfw@gov.in
Post of: Under Secretary
(Drugs Regulation)
Ministry of Health
and Family Welfare,
Room No: 434 C Wing,
Nirman Bhawan,
New Delhi - 110011.
நமது கருத்துக்கள், ஆலோசனைகள், எதிர்ப்புகளை பதிவு செய்வதற்கு காலக்கெடு மிகவும் குறைவான நாட்களே உள்ளன.
எனவே இன்றே வணிகத்தின் நலன் கருதி நமது கடமையை செய்ய வேண்டுகிறோம். நன்றி
G.கணேசன் தலைவர் ம.சு.சரவணன் பொதுச்செயலாளர் A. செண்பகராஜ் பொருளாளர் C & D மெடிக்கல் சங்கம் மதுரை மாவட்டம்