23/07/2024
சர்க்கரை நோய் கட்டுப்படாமல் இருப்பவர்களுக்கு நரம்புகள் பாதிக்கப்படுவது இயல்பு. அந்தப் பாதிப்புகளுக்கு ‘டயபடிக் நியூரோபதி’ (Diabetic neuropathy) என்று பெயர். அந்தப் பாதிப்பு ஏன் வருகிறது? எப்படி வருகிறது? என்ன தீர்வு?...ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தாததுதான் இதற்கு முக்கியக் காரணம். ரத்தச் சர்க்கரை அதிகமாகும்போது அது ‘சார்பிட்டால்’ எனும் வேதிப்பொருளாக மாறி நரம்புகளில் ஒட்டிக்கொள்ளும். அது இலையைத் தின்னும் பூச்சிபோல நரம்பிழைகளைத் தின்னும். இதனால் நரம்புகளின் தகவல் பரிமாற்றம் தடைப்படும். மேலும், இவர்களுக்கு நுண்ணிய ரத்தக்குழாய்களும் பாதிக்கப்படுவதால், நரம்பு முனை களுக்குப் போதிய ஊட்டச்சத்தும் ஆக்ஸிஜனும் கிடைக்காது. இது அந்தப் பாதிப்பை அதிகப்படுத்தும்...அடுத்து, சர்க்கரை நோய் காரண மாகச் சிறுநீரகமும் பாதிக்கப்படுவதால், ரத்தத்தில் சில நச்சுக்கள் சேரும். அவை நரம்புச் சுவர்களைச் சிதைக்கும். இவர்களுக்குப் புகைபிடிக்கும் பழக்கமும் இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகும். புகையில் உள்ள நச்சுக்கள் ரத்தக்குழாய்களைச் சுருக்கிவிடுவதால், உறுப்புகளுக்குச் செல்ல வேண்டிய ரத்தம் குறைந்துவிடுவதுதான் காரணம்.....யாருக்கு இந்தப் பாதிப்பு அதிகம்?
சர்க்கரை நோய் உள்ளவர்கள் எவருக்கும் இது வரலாம். என்றாலும், எப்போதும் ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பவர்களுக்கு இது வேகமாக வந்துவிடும். உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன், ரத்த மிகு கொலஸ்டிரால், புகை/மதுப் பழக்கங்கள் உள்ளவர்களுக்கு இதற்கான சாத்தியம் அதிகம்....நரம்பு பாதிப்புகள் எல்லாமே ஒரே வகைதானா? வெவ்வேறா?
நரம்பு பாதிப்புகளில் புற நரம்பு பாதிப்பு, தானியங்கு நரம்பு பாதிப்பு, அண்மை நரம்பு பாதிப்பு, குவிய நரம்பு பாதிப்பு எனப் பல வகை உண்டு. ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது. இவற்றில் அதிகம் காணப்படுவது, ‘புற நரம்பு பாதிப்பு’ (Peripheral neuropathy). இதில் கை, கால், பாத நரம்புகள் பிரதானமாகப் பாதிக்கப்படும். இந்தப் பாதிப்பு இருப்பவர்களுக்குக் கை, கால் மரத்துப்போகும்; எரிச்சல் ஏற்படும்; ஊசி குத்தும் வலி உண்டாகும்; இந்தத் தொல்லைகள் இரவில் அதிகமாக இருக்கும்; சிலருக்குத் தொடு உணர்வு அதிகரிக்கும்; பாதங்களில் போர்வை பட்டால்கூடச் சுமையாகத் தோன்றும்; நடந்தால் மெத்தைமேல் நடப்பது போலிருக்கும்; பலருக்குச் செருப்பு கழன்று போவதுகூடத் தெரியாது. அந்த அளவுக்கு உணர்வு குறைந்து போகும்; பாதங்களில் கூர்மையான பொருட்கள் குத்தினாலும் தெரியாது என்பதால் அடிக்கடி பாதங்களில் தொற்றும் புண்களும் உண்டாகும்...சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதய நரம்புகளும் பாதிக்கப்படும் என்று சொல்கிறார்கள். அது உண்மையா?
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாள்பட்ட தொடர்ந்து ஆங்கில மருந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உண்டாகும் நரம்பு பிரச்சனைகளுக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலை தயாரித்து வழங்கும் 36 மூலிகைகள் மற்றும் 9 தானியங்கள் அடங்கிய ஆரோக்கிய சஞ்சீவி என்னும் பொடி கிடைக்கின்றது இது எல்லா வயதினருக்கும் ஏற்றது காலை மாலை 100 மில்லி பாலில் கலந்து சாப்பிட்டு வர சர்க்கரை நோயால் உண்டாகும் பலகீனங்கள் போக்கி ரத்த விருத்தியை அபிவிருத்தி செய்து கண் பார்வை தெளிவு இதய தசைகள் பலம். சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப்பை பலமடைதல், சர்க்கரை நோயினால் ஆண்களுக்கு உண்டாகும் ஆண்மை குறைவு நரம்பு பலகினம் பெண்களுக்கு உண்டாகும் உடல் உறுப்பு உலர்ந்து போதல் உதடு காய்கள் மற்றும் தலை சுற்று போன்றவை நீங்கி ஆரோக்கியமான உடல் பலத்தை தருகின்றது மருந்து தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ஸ்ரீ தன்வந்திரி தண்டுவட மூட்டு வலி சிறப்பு சிகிச்சை வைத்திய சாலை கே டிசி நகர் பாளையங்கோட்டை திருநெல்வேலி 9003777757.8883777757.8012777757.
உண்மைதான். இது தானியங்கி நரம்புகள் பாதிக்கப்படுவதால் (Autonomic neuropathy) ஏற்படும் விளைவு. இதயம் மட்டுமல்ல, நுரையீரல், கண், சிறுநீரகம், வாய், உணவுக்குழாய், இரைப்பை, குடல், பாலின உறுப்புகள் ஆகியவற்றையும் தானியங்கி நரம்புகளே கட்டுப்படுத்துகின்றன. ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறினால் இந்த உறுப்புகள் பாதிக்கப்படுவதுண்டு. உதாரணமாக, இதய நரம்புகள் பாதிக்கப்பட்டால் இதயம் ஒழுங்கற்றுத் துடிக்கும். படபடப்பு வரும். ரத்த அழுத்தம் குறையும். உட்கார்ந்து எழுந்திருக்கும்போது தலைசுற்றும்.இதற்கு என்ன தீர்வு? இதைத் தடுப்பதற்கு வழி உண்டா?
ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பதுதான் இதற்கான தீர்வு. இன்சுலின் சிகிச்சை, ஆரோக்கியமான உணவு முறை, தேவையான உடற்பயிற்சி மூலம் இது சாத்தியமாகும். உடல் எடையைச் சரியாகப் பேணுவதும் பாதப் பராமரிப்பும் பொருத்தமான காலணிகள் அணிவதும் முக்கியம். ரத்த அழுத்தம், ரத்த கொலஸ்டிரால் அளவுகளைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.
மது, புகைப் பழக்கங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். வருடத்துக்கு ஒருமுறை ‘பயோதிசியோமெட்ரி' (Biothesiometry) என்னும் பாதப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இப்படிப்பட்ட வழிகளில் நரம்புகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் தள்ளிப்போடவும் முடியும். பொதுவாக, நரம்புப் பிரச்சினைகளைத் தொடக்கத்தி லேயே கவனித்துவிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும். தாமதமானால் சிரமமாகிவிடும்.