Uthumalai

Uthumalai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Uthumalai, Aranmanai Street, Tirunelveli.

18/05/2023

_*அழகான நடத்தை..*_

ஒரு கற்றறிந்த குரு ஒரு 35 வயது திருமணமான இளைஞனை தனது சொற்பொழிவின் போது எழுந்து நிற்கச் சொன்னார்.

"நீங்கள் ஒரு கடற்கரையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு இளம் அழகான பெண் முன்னால் இருந்து வருகிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?"

அந்த இளைஞன் பதிலளித்தான் - "அவள் பார்க்கப்படுவாள், அவளுடைய ஆளுமையை நான் பார்த்து பாராட்டத் தொடங்குவேன்".

குருஜி கேட்டார் - "அந்தப் பெண் உங்களை கடந்த பிறகு, நீங்களும் திரும்பிப் பார்ப்பீர்களா?"

அந்த இளைஞன் சொன்னான் - ஆம், என் மனைவி என்னுடன் இல்லை என்றால் . (கூட்டத்தில் அனைவரும் சிரிக்கிறார்கள்)

குருஜி மீண்டும் கேட்டார் - "அந்த அழகான முகத்தை எவ்வளவு காலம் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று சொல்லுங்கள்?"

அந்த இளைஞன்,- "இன்னொரு அழகான முகம் தோன்றும் வரை 5-10 நிமிடங்கள் இருக்கலாம்" என்று பதிலளித்தார். மற்றும் புன்னகைத்தார்.

குருஜி பின்னர் அந்த இளைஞனிடம் கூறினார் - இப்போது கற்பனை செய்து பாருங்கள்.

நீங்கள் இங்கிருந்து செல்லும் போது, ​​நான் உங்களுக்கு ஒரு புத்தகப் பொட்டலத்தைக் கொடுக்கிறேன்.

உங்கள் வீட்டிலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ள ஒரு பெரிய பணக்காரரிடம் அந்த பாக்கெட்டை டெலிவரி செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்.

புத்தகங்களை விநியோகிக்க நீங்கள் அவருடைய வீட்டிற்குச் செல்கிறீர்கள்.

அவருடைய வீட்டைப் பார்த்தாலே அவர் ஒரு கோடீஸ்வரர் என்பது தெரிய வருகிறது.

அவரது பங்களாவின் வராந்தாவில் 10 வாகனங்களும், வீட்டின் வெளியே 5 வாட்ச்மேன்களும் நிற்கின்றனர்.

உள்ளே புத்தகப் பொட்டலத்துடன் நீங்கள் வந்த தகவலை அனுப்பிவிட்டீர்கள், பிறகு அந்த மாண்புமிகு தானே வெளியே வந்து உங்களை வரவேற்றார்.

உங்களிடமிருந்து புத்தகப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டார்.

பின்னர் நீங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறத் தொடங்கிய போது உங்களை அவரது வீட்டிற்குள் வரும்படி அவர் மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறார்.

அவர் உங்கள் பக்கத்தில் அமர்ந்து உங்களுக்கு சூடான மகரயாழ் தேநீர் மற்றும் உணவு கொடுக்கிறார்.

மிகவும் நன்றாக கவனித்து, இவ்வளவு சீக்கிரம் புத்தகங்களை அவரிடம் கொண்டு சேர்த்ததற்கு நன்றி கூறுகிறார்.

நீங்கள் திரும்பி வரவிருக்கும் போது, ​​அவர் உங்களிடம் கேட்கிறார் - நீங்கள் எப்படி என் வீட்டிற்கு வந்தீர்கள்? என்று.

நீங்கள் சொன்னீர்கள் - உள்ளூர் ரயிலில்.

உடனே அவர் தனது டிரைவரிடம் தனது சொகுசு கார் ஒன்றில் உங்களை உங்கள் இலக்குக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறார். நீங்கள் உங்கள் இடத்தை அடையும் நேரத்தில், அந்த கோடீஸ்வரர் உங்களை அழைத்து கேட்டார் - தம்பி, நீங்கள் வசதியாக வந்துவிட்டீர்களா..!!

குருஜி கேட்டார், இப்போது சொல்லுங்கள் இந்த மனிதரை எவ்வளவு காலம் நினைவில் வைத்திருப்பீர்கள்?

அந்த இளைஞன் சொன்னான் - குருஜி! அவர் இவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தும் பணிவான மற்றும் அன்பான நடத்தைக்காக அந்த நபரை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

இளைஞர்களிடையே கூட்டத்தில் உரையாற்றிய குருஜி - *"இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம்"* என்றார்.

*"அழகான முகம் குறுகிய காலத்திற்கு நினைவில் இருக்கும், ஆனால் "அழகான நடத்தை" வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்."*

15/01/2023

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

🍉குன்றா நலமும்
🍎குறையா வளமும்
🍓மங்கா புகழும்
🍑மாசிலா செல்வமும்
🍇அன்புடை சுற்றமும்
🍍அறமறிந்த நட்பும்
🍏பொங்கலோடு பொங்கி
🍋பொங்கியது தங்கி
🍌தங்கியது பெருகி
🍐பெருகியது உதவி
🌻உதவியது உவகை பெருக்கி
🌸பெருகிய உவகை பொங்கி
🌺பொங்கியது நிலைத்து
🌷நீடூழி வாழ
🌾இத் தை திருநாளில்
🌅எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும். 🌞

உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும். 🌝

🙏எனது முக நூல் உறவுகளுக்கும் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
🙏

🐂🐄🌺🌸

17/12/2022

😄 திருமண வா‌ழ்‌க்கையை எ‌ந்த ‌பிர‌ச்‌சினை‌யு‌ம் இ‌ல்லாம‌ல் வா‌ழ்‌ந்த ஜோடிக‌ள் த‌ங்களது 25வது ‌திருமண நாளை‌க் கொ‌ண்டாடினா‌ர்க‌ள்.

ஊரையே‌க் கூ‌ட்டி ‌விரு‌ந்து வை‌த்து த‌ங்களது ‌திருமண நாளை‌க் கொ‌ண்டாடிய த‌ம்ப‌தி‌யினரை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்த அ‌ந்த ஊ‌ர் செ‌ய்‌தியாள‌ர் ஒருவ‌ர், அவ‌ர்களை‌ப் பே‌ட்டி‌க் க‌ண்டு ப‌த்‌தி‌ரி‌க்கை‌யி‌ல் ‌பிரசு‌ரி‌க்க ‌விரு‌ம்‌பினா‌ர்.

நேராக அ‌ந்த த‌ம்ப‌திக‌ளிட‌ம் செ‌ன்று, 25ஆ‌ம் ‌திருமண நாளை‌ ஒ‌ற்றுமையாக‌க் கொ‌ண்டாடுவது எ‌ன்பது பெ‌ரிய ‌விஷய‌ம். இது உ‌ங்களா‌ல் எ‌ப்படி முடி‌ந்தது. உ‌ங்களது ‌திருமண வா‌ழ்‌‌வி‌ன் வெ‌ற்‌றி ரக‌சிய‌ம் எ‌ன்ன எ‌ன்று கே‌ட்டா‌ர்.

இ‌ந்த கே‌ள்‌வியை கே‌ட்டது‌ம், அ‌ந்த கணவ‌ரு‌க்கு தனது பழைய தே‌னிலவு ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் ‌நினைவு‌க்கு வ‌ந்தது.

"நா‌ங்க‌ள் ‌திருமண‌ம் முடி‌ந்தது‌ம் தே‌னிலவு‌க்காக ‌ஷ‌ி‌ம்லா செ‌‌ன்றோ‌ம். அ‌ங்கு எ‌ங்களது பயண‌ம் ‌சிற‌ப்பாக அமை‌ந்தது. அ‌ப்பகு‌தியை சு‌ற்‌றி‌ப் பா‌ர்‌க்க நா‌ங்க‌ள் கு‌திரை ஏ‌ற்ற‌ம் செ‌ல்வது எ‌ன்று ‌தீ‌ர்மா‌னி‌த்தோ‌ம்.

அத‌ற்காக இர‌ண்டு கு‌திரைகளை‌த் தே‌ர்‌ந்தெடு‌த்து, இருவரு‌ம் ஒ‌வ்வொரு கு‌‌திரை‌யி‌ல் ஏ‌றி‌க் கொ‌ண்டோ‌ம். எ‌னது கு‌திரை ‌மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தது. ஆனா‌ல் எ‌ன் மனை‌வி செ‌ன்ற கு‌திரை ‌மிகவு‌ம் குறு‌ம்பு‌த்தனமானதாக இரு‌ந்தது. ‌திடீரென ஒரு து‌ள்ள‌லி‌ல் எ‌ன் மன‌ை‌வியை ‌அது கீழே‌த் த‌ள்‌ளியது.

அவ‌ள் ‌‌கீழே இரு‌ந்து எழு‌ந்து சுதா‌ரி‌த்து‌க் கொ‌ண்டு அ‌ந்த கு‌திரை‌யி‌ன் ‌மீது ‌மீ‌ண்டு‌ம் ஏ‌றி அம‌ர்‌ந்து கொ‌ண்டு, "இதுதா‌ன் உன‌க்கு முத‌ல் முறை" எ‌ன்று அமை‌தியாக‌க் கூ‌றினா‌ள்.

‌சி‌றிது தூர‌ம் செ‌ன்றது‌ம் ‌மீ‌ண்டு‌ம் அ‌ந்த கு‌திரை அ‌வ்வாறே செ‌ய்தது. அ‌ப்போது‌ம் எ‌ன் மனை‌வி ‌மிக அமை‌தியாக எழு‌ந்து கு‌திரை‌யி‌ன் ‌மீது அம‌ர்‌ந்து கொ‌ண்டு "இதுதா‌ன் உன‌க்கு இர‌ண்டா‌ம் முறை" எ‌ன்று கூ‌றியவாறு பய‌ணி‌க்க‌த் தொட‌ங்‌கினா‌ள்.

மூ‌ன்றா‌ம் முறையு‌ம் கு‌திரை அ‌வ்வாறு செ‌ய்தது‌ம், அவ‌ள் வேகமாக அவளது கை‌த்து‌ப்பா‌க்‌கியை எடு‌த்து அ‌ந்த கு‌திரையை சு‌ட்டு‌க் கொ‌ன்று‌வி‌ட்டா‌ள்!!!

இதை‌க் க‌ண்டு அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த என‌க்கு ‌மிகவு‌‌ம் கோப‌ம் வ‌ந்து‌வி‌ட்டது. நா‌ன் அவளை ‌தி‌ட்டினே‌ன். "ஏ‌ன் இ‌ப்படி செ‌ய்தா‌ய்? ‌நீ எ‌ன்ன மு‌ட்டாளா? ஒரு ‌வில‌ங்கை‌க் கொ‌ன்று‌வி‌ட்டாயே? அ‌றி‌வி‌ல்லையா?" எ‌ன்று கே‌ட்டே‌ன்.

அவ‌ள் ‌மிகவு‌ம் அமையாக எ‌ன்னை‌ப் பா‌ர்‌த்து, "இதுதா‌ன் உ‌ங்களு‌க்கு முத‌ல் முறை" எ‌ன்றா‌ள்.

அ‌வ்வளவுதா‌ன். அத‌ன்‌பிறகு எ‌ங்களது வா‌ழ்‌க்கை ‌மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ர் கணவ‌ர்.😄😀😀

14/11/2022

நினைவுகள்: சைக்கிள்

1985க்கு முன்பு முன்னூறு வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் ஐம்பது வீடுகளில்தான் சைக்கிள்கள் இருக்கும். மோட்டார் பைக்குளைப் பார்ப்பதே மிக மிக அரிது.

கிராமங்களில் யாரோ ஒருவர் SWEGA வண்டி வைத்திருப்பார். HERO MAJESTIC, TVS மொபெட்டுகளுக்கு முந்தினது SWEGA.....! அது மணிக்கு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் வேகத்தில் தான் போகும்.

இப்போது கார், மோட்டார் பைக் வாங்குவதற்கு கூட அவ்வளவு விசாரிப்பதில்லை. ஆனால், அப்போது பழைய சைக்கிள் (SECOND HAND) வாங்குவது என்றால் கூட அவ்வளவு எச்சரிக்கையோடு விசாரிப்பார்கள்.

ராலி, ஹெர்குலஸ், அட்லாஸ், ஹீரோ போன்ற கம்பெனிகளின் தயாரிப்புகள் இருந்தாலும் ராலி சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் "கெத்து" .

அடுத்து...... அதிக எடை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் ஹெர்குலஸ் சைக்கிள் வைத்திருப்பார்கள். குறைந்த பட்ஜெட்காரர்கள் ஹீரோ அல்லது அட்லஸ் சைக்கிள்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் பழுது பார்க்கும் கடையும் வாடகை சைக்கிள் கடைகளும் இருக்கும். வாடகை சைக்கிள்களில் பெரும்பாலும் கேரியர் இருக்காது. கேரியர் உள்ள சைக்கிள்களுக்கு கொஞ்சம் வாடகை அதிகம். சிறுவர்கள் சைக்கிள் பழக சிறிய சைஸ் சைக்கிள்களும் கிடைத்தது. விடுமுறை நாட்களில் இது மட்டுமே பொழுதுபோக்கு. அதிலும் பின்னால் ஒருவரை உட்கார வைத்து சைக்கிள் ஓட்டிவிட்டால் போதும், ஒலிம்பிக்ல் வெற்றி பெற்றால் கூட அந்த அளவிற்கு மகிழ்ச்சி கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

இப்போது கார்கள் , மோட்டார் பைக்குகளை "சர்வீஸுக்கு"விடுவது போல அப்போது சைக்கிள்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸுக்கு சைக்கிள் பழுது பார்க்கும் கடைகளில் விடுவார்கள். அதற்கு "ஓவராயில் " செய்வது என்பார்கள்.

அன்று சைக்கிள் ரிப்பேர் பார்ப்பவர்கள் பலர் கண்ணுக்கு ஹிரோவாக தெரிந்தார்கள்,,
இப்போது கார்களுக்கு "WHEEL. ALIGNMENT, WHEEL BALANCING " செய்வதுபோல சைக்கிள்களுக்கும் செய்வார்கள். அதற்கு " வீல் கோட்டம் எடுப்பது" என்பார்கள்.

1979க்கு முன்பு சைக்கிள்களுக்கு பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் கட்டாயம் கட்டணம் செலுத்தி LICENSE எடுக்க வேண்டும். ஒரு வட்ட வடிவ தகரத்தில் முத்திரையிட்டுத் தருவார்கள். அதை சைக்கிளின் முன்புறம் HANDLE BAR க்கு கீழை நிரந்தரமாக இணைத்து வைத்துக் கொள்வார்கள். இது இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும்.

சைக்கிளில் டைனமோ இருக்கும். இரவு நேரங்களில் சைக்கிள் ஓட்டும்போது டைனமோ இல்லாவிட்டால் காவல்துறையினர் பிடித்து அபராதம் விதிப்பார்கள்.

சைக்கிளில் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதி இருந்தது. இருவர் சென்றால் அபராதம். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தான் இருவர் செல்ல அனுமதி கொடுக்கப் பட்டது. அந்த லைசென்ஸும் ஒழிக்கப் பட்டது.

அந்த சைக்கிள்களின் கைப்பிடிகளுக்கு பல நிறங்களில் கவர்கள் போட்டும், இரண்டு வீல்களிலும் தேங்காய் நார்களில் செய்யப்பட்ட பலவித நிறங்களில் அலங்காரப் பொருட்களை வாங்கிக் கட்டி "கெத்து" காட்டுவதுமே பெருமையாக இருந்தது.

பழைய நினைவுகளை அசைபோடுவது என்றும் ஆனந்தமே. இந்த தலைமுறையினர்களுக்கு சைக்கிள்களை வாங்கிக் கொடுத்து வீட்டுக்குள்ளேயே ஓட்டச் செய்கிறோம். இவா்களுக்கு அந்தகாலத்தில் நமக்கு கிடைத்த மகிழ்ச்சி கிடைக்க வாய்ப்பு இல்லை....

12/07/2022

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்..

நட்ச்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது.

சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.

இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.

எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.

உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே... நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால்

சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..?முடியாது !

அதற்காக ஒருவன் அவசரப்பட்டு ...

என் கையை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கை' உண்டு.

என் காலை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கால்' உண்டு.

நான் என் கண்ணை பார்க்க நினைக்கிறேன் அது தெரியவில்லை, ஆகையால் எனக்கு கண்ணில்லை என்று பேசலாமா..? அது தவறு !

கண்ணாடியில் பார்த்தால் கண்களின் பிம்பம் தெரியும்...! அதைப்போல் விக்ரஹங்கள் கடவுளின் பிம்பமாக இருக்கிறது.

இதோ இங்கு ரோஜாப்பூ மாலை இருக்கிறது..

இது என்ன பூ எனக்கேட்டால்
அதன் பெயரை சொல்லலாம்..!
நிறத்தை கேட்டால் நிறத்தையும் சொல்லலாம்
இது எந்த இடத்தில் கிடைக்கும் என்வும் சொல்லிவிடலாம்..ஆனால்..

அதன் வாசம் எப்படியிருக்கும் எனக்கேட்டால் "முகர்ந்து" பார் என்றுதான் சொல்லமுடியும்!

கடவுள் எப்படியிருப்பார் என்று கேட்டால்..உணர்ந்துப்பார் என்றுதான் சொல்லமுடியும்!

( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)

என்னவோ தெரியவில்லை இந்தப்படத்தை இப்போது பதிவிட வேண்டும் என்று தோன்றியது... கரும வினை வேர் அறுக்கிறது பாவத்தின் சம்பளம்  ...
11/07/2022

என்னவோ தெரியவில்லை இந்தப்படத்தை இப்போது பதிவிட வேண்டும் என்று தோன்றியது... கரும வினை வேர் அறுக்கிறது பாவத்தின் சம்பளம் இப்போது பழி தீர்த்துக் கொண்டு இருக்கிறது... கடவுள் இருக்கின்றான் குமாரு

Address

Aranmanai Street
Tirunelveli
627860

Telephone

9965388201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uthumalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share