31/07/2024                                                                            
                                    
                                    
                                                                        
                                        திருப்பூர், சுகன் சுகா மெடிக்கல் சென்டர் சார்பில் நடந்த 
போதை பொருள் ஒழிப்பு மற்றும் மது குடித்தலின் தீமை 
பற்றிய விழிப்புணர்வு கிட்ஸ் மராத்தான் 2024 போட்டிகள்   
நகலூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு  ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பை 
               திருப்பூர், திருமுருகன்பூண்டி, திருநீலகண்டர் வீதியில் செயல்பட்டு வரும் சுகன் சுகா மெடிக்கல் சென்டர் சார்பில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் மது குடித்தலின் தீமை பற்றிய விழிப்புணர்வு கிட்ஸ் மராத்தான் 2024 போட்டிகள் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. போட்டியானது 8 வயதுக்கு கீழ் ஒரு கிலோமீட்டர் தூரம், 9 வயது முதல்  11 வயது வரை  2 கிலோமீட்டர் தூரம், 12 வயது முதல்  14 வயது வரை 3 கிலோமீட்டர் தூரம், 15 முதல்  16 வயது வரை 4 கிலோமீட்டர் என 4 பிரிவுகளில் மாணவர்கள்,  மாணவிகளுக்கு தனித்தனியாக நடந்தது. போட்டியில் திருப்பூர், கோவை,  ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 920 மாணவ, மாணவிகள்  மராத்தான்  போட்டியில் கலந்து கொண்டனர்                             பல்வேறு பிரிவுகளுக்கான போட்டியை     திருமுருகன்பூண்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் கார்த்திகேயன், திருப்பூர் எலாஸ்டிக் சங்க அசோசியேஷன் செயலாளர் சௌந்தர், நுகர்வோர் எக்ஸ்பிரஸ் முதன்மை எடிட்டர் முத்துக்குமார், பூண்டி 22 வது வார்டு செயலாளர் சிவகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.  போட்டியானது பூண்டி கோவில் விளையாட்டு மைதானத்தில் தொடங்கி ரிங் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி வரை சென்று மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வருமாறு அமைக்கப்பட்டு இருந்தது. போட்டியில் மாணவ மாணவிகள் ஆர்வமாக பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். சிறுமிகளுக்கான போட்டியின்போது அக்குழந்தைகளின் தாய்மார்களும் ஓடு, ஓடு என ஆர்வமூட்டி அவர்களுடன் ஓடி வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 
                  போட்டியின் முடிவில் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 4 கிலோமீட்டர் மாரத்தான்  போட்டியில் அவிநாசி கோகுல் முதலிடமும், திருப்பூர் தருண் இரண்டாம் இடமும், சாமளாபுரம் நவீன் மூன்றாம் இடமும், இதே பிரிவில் மாணவிகளுக்கான போட்டியில் நகலூர் ஸ்போர்ட்ஸ் கிளப் வருணா முதலிடமும், என். எம். எஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் நிவேதா இரண்டாம் இடமும், நகலூர் ஸ்போர்ட்ஸ் கிளப் பவித்ரா மூன்றாம் இடமும் பெற்றனர். அதேபோல் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 3 கிலோமீட்டர் மராத்தான் போட்டியில்  கோபிசெட்டிபாளையம்  மெய்சஞ்சய் முதலிடமும், திருப்பூர் பிரவீன் குமார் இரண்டாம் இடமும்,  கருக்கம்பாளையம் அவ்ரிஸ் மூன்றாம் இடமும், மாணவிகளுக்கான இதே பிரிவில் பொள்ளாச்சி ரமிதா முதலிடமும், நகலூர்  ஸ்போர்ட்ஸ் கிளப் ரீனா இரண்டாம் இடமும், புவனா மூன்றாம் இடமும் பெற்றனர்,
                  அதேபோல் 9 முதல் 11 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 2 கிலோமீட்டர் மராத்தான் போட்டியில் நகலூர் ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த தமிழரசு, சர்வேஷ், சரத் பிரணவ் ஆகிய மூவரும் முதல் மூன்று இடங்களை பெற்றனர். மாணவிகளுக்கான இதே பிரிவில்  கேலோ இந்தியா அணியின் அனுப்பர்பாளையம் சோபியா முதலிடமும்,  சோமனூர் ஷமீனா இரண்டாம் இடமும், புதுக்கோட்டை சந்தியா மூன்றாம் இடமும் பெற்றனர். இதேபோல் 8 வயதுக்கு கீழ் பிரிவில் மாணவர்களுக்கான உள்ள 1 கிலோமீட்டர் மராத்தான் போட்டியில் காரைக்குடி சஞ்சித் முதலிடமும்,  சேவூர், வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்  எழிலரசு இரண்டாம் இடமும், பவானியை சேர்ந்த பரீக் சித்துவானன் மூன்றாம் இடமும் பெற்றனர். மாணவிகளுக்கான இதே பிரிவில் சேத்துமடை நிகாரிகா முதலிடமும், பள்ளிபாளையம் மௌஷிகா இரண்டாம் இடமும்,  கருமத்தம்பட்டி புவனிஷா மூன்றாம் இடமும் பெற்றனர். 
                   இதைதொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். சுகன் சுகா மெடிக்கல் சென்டர் நிறுவனர் டாக்டர் சுந்தரன் வரவேற்றார். சைமா தலைவர் வைகிங் ஈஸ்வரன் முன்னிலை வைத்தார். தொடர்ந்து அரிமா சங்க தலைவர் மயில்வாகனம், எஸ்.வி கார்டன் குடியிருப்போர் நல சங்க நிர்வாகி சௌந்தர்ராஜன்,.வேதா சூப்பர் மார்க்கெட் நிறுவனர் சுரேந்தர், பாலாஜி ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் பாலாஜி,  பூண்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் முருகானந்தம்,  இன்ஜினியர் அர்ஜுனன் ஆகியோர் மராத்தான் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் பணப் பரிசுகளை வழங்கினர்.  பின்னர்  மராத்தான்  போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியனாக அந்தியூர் அருகில் உள்ள நகலூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினருக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது. மேலும் அனைத்து பிரிவுகளிலும் 4 மற்றும் 5 தாக வந்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் சுகன் சுகா மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் கார்த்திகை சுந்தரம் நன்றி கூறினார்.  விழாவிற்கான ஏற்பாடுகளை விளையாட்டு பயிற்சியாளர் சிவகுமார் ஒருங்கிணைத்து செயல்பட்டார். ஆசிரியை அத்திக்கடவு ஆனந்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.   போட்டியின்போது போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பூண்டி போலீசாரும், ஆம்புலன்ஸ் ஏற்பாடுகளை சுகன் சுகா நிறுவனத்தினரும் செய்து இருந்தனர்