05/11/2020
Parthipan Bhuvaneswaran Saraswathi dental clinic
ஊருக்குள்ள நிறைய பேரு பல் டாக்டருங்க பல்வலிக்கு வேர் சிகிச்சை பண்றதே நமக்கு செலவு இழுத்து விடறதுக்குதான்னு நெனச்சு, அதை தவிர்த்து பல் பிடுங்கிட சொல்லிட்டு எதையோ சாதிச்சுட்ட மாதிரி போவாங்க..
ஆனா, உண்மையிலயே பல் பிடுங்கறதுல தான் பல் டாக்டருக்கு லாபம் அதிகம்னு இங்க நிறைய பேருக்கு தெரியறதில்லை.
ஒரு பல்ல வேர் சிகிச்சை செய்துக்கிட்டா குறைந்தது ₹5000 ரூபாய் செலவாகும். ஆனா பல்வலி நிற்பதோட உங்க இயற்கையான பல்லும் உங்களுக்கே மறுபடியும் பயன்பாட்டில் கிடைக்கும்.
அதையே பிடுங்கிட்டா, அன்றைய தேதிக்கு ₹300-500 தான் செலவு ஆகும், இல்லேங்கல!!
ஆனா, சில மாசம் கழிச்சு சரியா மென்று சாப்பிட முடியலனு முழிப்பீங்க பாருங்க!! அங்க தான் இருக்கு சிக்கல்..
இப்ப நீங்க பல் கட்ட எவ்வளவு ஆகும்னு கேட்டுப்பாருங்க?
நீங்க எதிர்பார்க்கற விலையில கழட்டி மாட்டும் பல்செட் தான் கிடைக்கும். கழட்டாத முறையில் வேணும்னா குறைஞ்சது ₹6000ல இருந்து ₹15,000 வரை சொல்லுவாங்க, போதாக்குறைக்கு பக்கத்துல இருக்கற நல்ல பல்லையும் தேய்க்க வேண்டி இருக்கும். ஆனா வேற வழியில்லை, பல் இல்லாத நிலைக்கு இவை தான் குறைந்த செலவிலான தீர்வு.
இதையே நல்ல பற்களை தேய்க்காம பொருத்தும் முறையான implantகு கேட்டீங்கனா ₹15000ல இருந்து ₹30000 வரை சொல்வாங்க..
எவ்வளவு தான் செலவு செய்தாலும், அவை செயற்கை பல் தான் என்பதை மறக்காதீங்க.
இதெல்லாம ஏற்கனவே பல் இழந்தவங்களுக்கு நல்ல தீர்வுகள் தான், இல்லேனு சொல்லல.
ஆனா, உங்க இயற்கை பல் இருந்து அதை வேர் சிகிச்சை செய்து காப்பாற்ற வாய்ப்பிருந்தா காப்பாற்றிக்கோங்க, அது தான் புத்திசாலித்தனம்னு சொல்லி இந்த பஞ்சாயத்த முடிச்சு வைக்கிறேன்..
- Dr. Arun Pankaj MDS
செயற்கை பல் சிகிச்சை நிபுணர் (prosthodontist)