Richard Paul Divakar

Richard Paul Divakar Acupuncture, acu touch, hypnotism, pranic healing, electro homeopathy Treatments

28/05/2025

ஒருவனை கடவுள் உயர்த்த
நினைத்தால் முதலில் துண்டு
துண்டுகளாக உடைப்பாராம்!!
உடைத்தார்!! உயர்த்தியும் விட்டார்!!
ஆனால் உடைந்த துண்டுகளை
ஒன்றுசேர்க்க மறந்துவிட்டார்!
இன்னும், சிதறிக் கிடக்கும்
துண்டுகளாக என் வாழ்க்கை!!

28/05/2025

என்னில் பிறந்து என்னையே
தின்னுகிறது உன் நினைவுகளும்,
உன்னை பற்றி எழுதும்
வார்த்தைகளும்...!!!

28/05/2025

நான் நாசமாகிக்கொண்டு
இருக்கின்றேன் என்றாலும்
உன்னை காதலிப்பதை
தவிர எனக்கு வேறு வழியில்லை!!
பனித்துளி வேறெங்கே
ஒளிய முடியும்?
வெயிலை தவிர...!!!!

27/05/2025

ஒடத்தை சில
நேரங்களில் கலங்கரை
வெளிச்சம் கைவிட்டாலும்,
நிலவொளி கை விடுவதேயில்லை!!

27/05/2025

அதோ! ஆழ்கடலில் சிறு ஓடத்தில் தத்தலிக்கும் ஓடக்காரனுக்கு
ஆறுதல் தரும் கலங்கரை
வெளிச்சத்தை போல்
நீ வேண்டும் எனக்கு..
உன்னை எனக்கே ஆக்கிக்கொள்ள ஒருபோதும் நினைக்கவில்லை!!
ஓடத்திற்கு கலங்கரை கட்டிடம் தேவையில்லை!!
அதன் வெளிச்சமே போதும்!!

27/05/2025

இதயத்திற்கு நெருக்கமான
ஒருவரின் தொடுதல் எவ்வளவு
பெரிய ஆறுதல் அந்த
தொடுதலை உணரும்
ஆன்மாவிற்கு!!!

27/05/2025

திருச்செந்தூர் முருகனை
சென்று தரிசித்தால்
நினைத்ததெல்லாம் நடக்கும்
என சேதி!!
சென்றேன்!!
வேண்டாததெல்லாம் கிடைத்தது,
வேண்டிய அவளைத் தவிர!!!

27/05/2025

நீ வெறுக்கும் அளவிற்கு
நான் ஒன்றும் அவ்வளவு
மோசமானவன் அல்ல!!
உன்னை வெறுக்கவே
முடியாத அளவிற்கு

26/05/2025

மணமேடையில் அமர்ந்திருக்கும்
மணமகனுக்கு என்ன தெரியும்,
மண்டப வாசலில் வெடிக்கும்
வான வேடிக்கைகள்
என் காதல் பிரிவின்
கொண்டாட்டங்கள் என்று....!!

26/05/2025

அவனை விடுங்கள்!!
கற்பனையிலாவது
அவளுடன் அவன்

26/05/2025

மனதுக்குள் 1008 வலிகள்!!
நண்பர்களோடு சேர்ந்தேன்,



வலியாவது! மயிராவது!!
போடா...

25/05/2025

என்னை கொஞ்சி
பேசிய வார்த்தைகளை
மறந்துவிடாதே!!
நினைவில் வைத்துக்கொள்!!
வருங்காலத்தில் யாருக்கேனும்
அதே வார்த்தைகள் தேவைப்படும்!!

Address

Tiruttani

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 9pm

Telephone

+918248820249

Website

Alerts

Be the first to know and let us send you an email when Richard Paul Divakar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Richard Paul Divakar:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category